Prøve GULL - Gratis
ஆதித் தமிழ்க்குடியின் தொன்மை முருகன்
Dinamani Thoothukudi
|July 21, 2025
இந்தியாவில் மற்ற மாநிலங்களில் கார்த்திகேயன், சுப்ரமணியன் என்று முருகன் வழிபாடு இருந்தாலும் கந்தன், கடம்பன், முருகன் என்றும், குன்றுகள் தோறும் இடம்பெற்றிருக்கும் குமரன் என்றும் தமிழர்கள் வாழும் இடங்களிலெல்லாம் பெருமையோடு கொண்டாடி மகிழ்கிற தனித்துவம் முருகனுக்கு மாத்திரம்தான்.
உலகில் தொன்மையான செம்மையுறத்தக்க மொழியாக இரண்டு மொழிகள் திகழ்கின்றன. அவை தமிழ் மொழி, மற்றொன்று வடமொழியான சமஸ்கிருதம். வடமொழி பேச்சு வழக்கில் இல்லை. இலக்கிய வழக்கு மட்டுமே உண்டு. ஆனால், தமிழ் மொழியில் பேச்சும், இலக்கிய வழக்கும் ஒன்றாகச் சேர்ந்து செழிப்பான மொழியாக திகழ்கிறது.
தமிழில் கிடைத்திருக்கும் ஆகச் சிறந்த நூல்களில் சங்க இலக்கியங்கள் தலைசாயது ஆகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினென்கீழ்க்கணக்கு நூல்களில், பத்துப்பாட்டு முதல் பகுதியாக வைக்கப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக திருமுருகாற்றுப்படை திகழ்கிறது. முருக பக்தனை ஆற்றுப்படுத்துதலே திருமுருகாற்றுப்படை என்று அழைக்கப்படுகிறது.
சங்க இலக்கியங்களில் முருகன் குறித்து வழங்கும் பெயர்கள் மிகுதியாக இருக்கின்றன. இந்தப் பெயர்கள் அனைத்தும் அவற்றின் சூழல்களின் அடிப்படையில் வேறுவேறாக அமைந்திருக்கின்றன. சேவற்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய்வம், முருகு, அனங்கு, கடவுள், மலைவாழ், விரல்வேல், மலைஉரைகடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்முருகன் போன்றவை இடம்பெற்றிருக்கின்றன.
ஒரு வறியவன் தன் இன்னல்களில் இருந்து விடுபட முருகனைச் சென்று பார்த்துப் பாடுவது போல் அமைக்கப்பட்டதான் திருமுருகாற்றுப்படை. உண்மையில் ஆற்றுப்படை என்பதுதான் மருவி ஆறுபடை என்றாகி விட்டது. அதேசமயம், முருகனுக்கு ஆறு என்பது உகந்தது. அவரை பக்திப்பூர்வமாக பூசிகிற போது ஆறு இதழ்களைக் கொண்ட மலர்களைக் கொண்டு மலர்மாலை சூடுகிறார்கள்.
முருகனிடம் இருக்கும் வேல் வெறுமனே கீழ்ப்பகுதி அகன்றும், மேல் பகுதி முனை கூர்மையாக இருப்பது மட்டுமல்ல; வேலின் இரண்டு பக்கங்களும் மேடு தட்டி இருக்கும். அதைக் கணக்கிட்டால் கூட ஆறுமுனைகள் கொண்டதாக இருக்கும். ஆறு முகங்களை உடையதாக நாம் முருகனை வணங்கியும் வருகிறோம். இதனால், ஆற்றுப்படை என்பது ஆறு படையாக மருவி இருக்கிறது.
Denne historien er fra July 21, 2025-utgaven av Dinamani Thoothukudi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்
தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Thoothukudi
சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்
பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Thoothukudi
அன்புள்ள ஆசிரியருக்கு...
கட்டுப்பாடு வேண்டும்
1 min
November 01, 2025
Dinamani Thoothukudi
‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!
உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
3 mins
November 01, 2025
Dinamani Thoothukudi
படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.
தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Thoothukudi
தெலங்கானா அமைச்சராக முகமது அசாருதீன் பதவியேற்பு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெலங்கானா மாநில அமைச்சராக வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
1 mins
November 01, 2025
Dinamani Thoothukudi
இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு
சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
November 01, 2025
Dinamani Thoothukudi
எண்ம வியூகம்!
அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.
2 mins
November 01, 2025
Dinamani Thoothukudi
அமைதிக்குப் பரிசு!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசி நிமிஷத்தில் வெனிசுலாவின் எதிர்க் கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சா டோவுக்கு அறிவிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு பல்வேறு நாடுகளின் அதிபர்களும் பரிந்துரை செய்திருக்கிறார் கள். அதுமட்டுமன்றி, 8 போர்களை நிறுத் தியுள்ளதால் தனக்கு கிடைக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்தார். ஆனால், வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது.
3 mins
October 31, 2025
Dinamani Thoothukudi
தேவர் நினைவிடத்தில் ஓ.பி.எஸ்., தினகரன், செங்கோட்டையன் ஒரே நேரத்தில் மரியாதை
பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோர் ஒரே நேரத்தில் மரியாதை செலுத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min
October 31, 2025
Translate
Change font size
