Facebook Pixel மக்களாட்சியைக் காப்பாற்ற... | Dinamani Thoothukudi - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

மக்களாட்சியைக் காப்பாற்ற...

Dinamani Thoothukudi

|

May 14, 2025

இது மகாத்மா காந்தியின் தேசம். வாக்களிப்பதற்கு பணம் வாங்குவது, தியாகம் செய்து நம் தலைவர்கள் வாங்கிய சுதந்திரத்தை அவமானப்படுத்துவது; அரசமைப்புச் சாசனத்தை அவமதிப்பது; மக்களாட்சியை மாண்பிழக்கச் செய்வதாகும்.

- க.பழனித்துரை

மக்களாட்சி சிதிலமடைகிறது; அதை நாம் சீர்படுத்த வேண்டும். அரசியல் வன்முறை நிறைந்ததாக மாறிவிட்டது. எப்போது நம் அரசியல் திருந்துமோ? என புலம்பாத சமூகக் கண்ணோட்டம் கொண்ட பொதுமக்கள் இல்லை. இந்தப் புலம்பலால் நம் மக்களாட்சி மேம்படுமா என்பதுதான் நம் கேள்வி. நம் மக்களாட்சி மாண்புற, புலம்பலை விட்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியேறி மக்களிடம் சென்று பணி செய்தால் மட்டுமே நிலைமை மாறும். மாற்றத்துக்கான விதைகள் ஆங்காங்கே விதைக்கப்படுகின்றன. இந்த விதைப்பால் ஒரு நாள் நாம் நல்ல அறுவடையைச் செய்யலாம்.

ஒரு கிராமத்துக்குச் சென்று அரசமைப்புச் சாசனத்தை மக்கள் சாசனமாக்குவோம் என்ற கலந்துரையாடலை அந்த கிராமத்து மக்களிடம் நடத்தினோம். அப்போது கிராமத்து பெண்களிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. உங்கள் ஊரின் சிறப்பென்ன என்பதுதான் அந்த கேள்வி. ஒரு பெண் எழுந்து, "எங்கள் ஊரில் தேர்தலின்போது வாக்குக்குப் பணம் வாங்குவதில்லை" என்றார். இன்னொரு பெண், "எங்கள் ஊரில் ஜாதியப் பாகுபாடு, ஜாதிய மோதல் கிடையாது. அனைவரும் அமைதியாக வாழ்கிறோம்" என்றார்.

புதிய இந்தியாவை உருவாக்கும் பொறுப்பை அரசமைப்புச் சாசனம் அரசியல் கட்சிகளிடம் ஒப்படைக்கவில்லை, மக்களாகிய நம்மிடம்தான் ஒப்படைத்துள்ளது. மக்களாகிய நாம் குடிமக்களாக, இந்தியர்களாக, ஒன்றிணைந்து இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் காக்க செயல்பட வேண்டும், அப்படிச் செயல்படுவதன் மூலம் குடிமக்களாகிய நாம் அரசியல் கட்சிகளுக்கு வழிகாட்ட வேண்டும்" என்று கூறி நிகழ்வை முடித்துவிட்டு வெளியேறினோம்.

அந்த ஊரின் பஞ்சாயத்துத் தலைவர் அதற்கு முன்பு வெளிநாட்டில் கூலி வேலை செய்து வந்திருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலின்போது ஊருக்கு வந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். வாக்களிப்பதற்கு எந்தப் பணமும் மக்களுக்கு அவர் கொடுக்கவில்லை.

FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் சாங்லிமாவட்டத்தில்செவ்வாய்க் கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழந்தன ர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Thoothukudi

கணவர், மாமனார் கொன்று எரிப்பு: ஆண் நண்பருடன் பெண் கைது

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரரான கணவர், அவரது தந்தையை, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொன்று எரித்ததாக பெண்ணை, அவரது நண்பருடன் போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Thoothukudi

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் க. கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Thoothukudi

ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Thoothukudi

தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 13, 2026

Dinamani Thoothukudi

குமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்

புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதியில் 6 பேர், 7 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய சிறுவர் 6 பேர் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

அஸான் அவைஸ் சதம்: பாகிஸ்தான் 386

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 11, 2026

Translate

Share

-
+

Change font size