Prøve GULL - Gratis
100-ஆவது ஆண்டில் ஒரு காந்தியப் போராளி!
Dinamani Thanjavur
|June 16, 2025
கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டு வினோபா பாவே, ஜெயபிரகாஷ் நாராயணனுடன் பயணித்தவர்களுள் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஒரு வித்தியாசமான புதுமைப்பெண் போராளி.
கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டு வினோபா பாவே, ஜெயபிரகாஷ் நாராயணனுடன் பயணித்தவர்களுள் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஒரு வித்தியாசமான புதுமைப்பெண் போராளி. அவர் திங்கள்கிழமை (ஜூன் 16) தன் 100-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கிறார்; இந்த வயதிலும் நடந்து வந்து, அகவல்பாடி கூட்டத்தில் நின்று நிதானித்து பேசும் ஆற்றலுடன் இருக்கிறார் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்.
சர்வோதயப் போராளியான கணவர் ஜெகந்நாதன் மறைந்துவிட்டார்; எனினும் இவரிடமிருந்து அவரைப் பிரிக்க முடியாது. இவர்கள் காந்திய களப்பணியில் இருவராகவே அறியப்பட்டவர்கள். 'கீழவெண்மணியில் என்னுடன் (கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்) பணி செய்தவர்களுடன் அன்று அந்த நாளைக் கழிக்க வேண்டும். என்னை அங்கு கொண்டு விடுங்கள், அதுவே எனது விருப்பம்' என்று அங்கு செல்கிறார். அவர் இருக்கும் இடம் காந்தி கிராம ஊழியரகம் என்று அழைக்கப்படும் ஒரு பழைய ஓட்டுக் கட்டடம். காந்தி கிராமத்தில் ஒரு சிறிய ஓடைக்கு அருகில் இருக்கிறது. அந்த சிறிய கட்டடம் தியாக காலத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.
இன்று வாழும் காந்தியர்களில் இவர் மூத்த காந்தியப் போராளி. கதர் ஆடை, தற்சார்பு, எளிய வாழ்க்கை, விளிம்பு நிலை மக்களுக்காகவே அர்ப்பணித்து இன்றும் களத்தில் இருக்கும் காந்தியர். புதுமை காந்தியர்களை உருவாக்கி களத்தில் செயல்பட வைத்து, அவர்களின் ஆத்ம பலத்தை கூட்டிக் கொண்டு பணி செய்ய இளைஞர்களுடன் பயணிக்கும் இவரது பண்பு, பாங்கு, பார்வை அனைத்தும் புதுமை.
இவரால் இந்த வயதில் எப்படி இத்தனை இளைஞர்களைக் கவர முடிகிறது என்பதுதான் பலரின் கேள்வி. அகிம்சையில் அசைக்க முடியாத ஆழ்ந்த நம்பிக்கை; காந்தியத்தில் தோய்ந்து வள்ளலாரின் அருட்பெரும் ஜோதியின் சக்தியை தன் இடையறாத பாடல்களால் பெற்று வருகின்ற இளைஞர்களுக்கெல்லாம் தன் வாழ்க்கையை முன்னுதாரணமாக ஆக்கி வைத்திருப்பதுதான் இவரின் தனிச் சிறப்பு.
மக்கள் பிரச்னைகளை கையிலெடுத்து மக்களுடன் போராடி அவற்றைத் தீர்ப்பதில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தம்பதியின் செயல்பாடுகள் இருந்ததால், ஓடும் நீராகவே வாழ்ந்தது எது மாதிரியும் இல்லாத ஒரு புது மாதிரி.
Denne historien er fra June 16, 2025-utgaven av Dinamani Thanjavur.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent?Logg på
FLERE HISTORIER FRA Dinamani Thanjavur

Dinamani Thanjavur
23 அமைச்சர்கள் பதவியேற்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 21 எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸின் 2 எம்எல்ஏக்கள் என மொத்தம் 23 எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சரவையில் இடம்பெற்றதன் மூலம் தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ளது.
1 mins
May 22, 2026

Dinamani Thanjavur
புல்வாமா தாக்குதல் முக்கிய பயங்கரவாதி: அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை
புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் பயங்கரவாதியான அர்ஜுமந்த் குல்சார் தார் (எ) ஹம்ஸா புர்ஹான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min
May 22, 2026
Dinamani Thanjavur
அறப்பணியைத் தேர்ந்தெடுப்போம்!
\"ஆசிரியர் பணி அறப்பணி - அதற்கே உன்னை அர்ப்பணி\" என்று முன்பெல்லாம் ஆசிரியர் பணியை உன்னதமாகப் போற்றி வந்தார்கள்.
2 mins
May 22, 2026

Dinamani Thanjavur
மின் கட்டணம் உயர்த்தப்படாது
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்
1 min
May 22, 2026
Dinamani Thanjavur
விசிக, ஐயுஎம்எல் எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்பு
தமிழக அமைச்சரவை இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை (மே 22) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், விசிக திண்டிவனம் தொகுதி எம்எல்ஏ வன்னி அரசு, ஐயூஎம்எல் கட்சியின் பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.
1 min
May 22, 2026
Dinamani Thanjavur
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்ட ரத்து: தமிழக அரசு உத்தரவு
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டர் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. அவரை உடனடியாக விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
1 min
May 21, 2026

Dinamani Thanjavur
பிரதமர் மோடி, அமித் ஷா துரோகிகள்: ராகுல் கடும் விமர்சனம்
'பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இணைந்தும் அரசமைப்புச் சட்டத்தின் மீது ஒவ்வொரு நாளும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
1 mins
May 21, 2026
Dinamani Thanjavur
பேச்சுவார்த்தையே தீர்வு!
பிரச்னைகள் தீர்வதற்கு உரிய யோசனையை குழந்தை சொன்னாலும் கேட்க வேண்டும். அல்லது ஒரு கிளியே சொன்னாலும் கேட்க வேண்டும்.
2 mins
May 21, 2026
Dinamani Thanjavur
நியமன ஆணைகள் தாமதம் மருத்துவர்கள் முற்றுகைப் போராட்டம்
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்களுக்கு பணி ஆணைகள் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறி மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் இயக்ககத்தை அவர்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
1 min
May 21, 2026
Dinamani Thanjavur
717 டாஸ்மாக் கடைகளை மூடுவது தமிழக அரசின் நல்ல முடிவு
உயர்நீதிமன்றம் பாராட்டு
1 min
May 21, 2026
Translate
Change font size

