Prøve GULL - Gratis
வள்ளலார் கண்ட வாய்மை நெறி
Dinamani Tenkasi
|February 01, 2026
அன்மிக வயலில் அருட்புனலைப் பாய்ச்சி அறிவென்னும் சூரிய ஒளியில் அனுபவப் பயிரை வளர்த்து, அன்பை அறுவடை செய்து உலகுக்கெல்லாம் வழங்க ஆண்டவனின் அருள் தூதராக வள்ளலார் அவதரித்தார்.
அவர் இவ்வுலகத்தை ஆண்டவனின் ஆலயமாகச் சமைத்து அவ்வுலகத்தை செப்பனிடும் ஓர் ஊழியனைப் போல் தன்னை ஆக்கிக் கொண்டு, அகப் பண்பாட்டையுணர்ந்து, மெய்ஞ்ஞானம் காட்டும் மெய்யுணர்வைக் கண்டு, வறியோனுக்கு வாழ்வு வந்ததுபோல் மகிழ்ந்து மாநிலமனைத்தையும் அருட்கண்ணோட்டத்தாற் கண்டார் அவர்.வள்ளலார் வாழ்வு புனிதமானது. தூய்மையும் தோய்ந்து விளங்கும் சீரிய வாழ்வு. அல்லும் பகலும் மனித வாழ்வு ஈடேறக் கவலையுற்றார். மனிதரைத் தேவராக்கி அகிலத்தை அமரருலகமாக்கிக் காண வள்ளலார் உள்ளம் விழைந்தது. எனவேதான் மக்களோடு கலந்து வாழும் பேருண்மைப் பெற்றிமைகளை விளக்கி வந்தார். வள்ளலாரின் வாய்மை உரையே வையத்தை வசப்படுத்தியது.
அவர் தம் வாய்மையில் அன்பும், மக்கள் நலனும், மாநிலத்தின் மேன்மையும், இறைத் தத்துவங்களும் கலந்துறவாடின. இவ்வாய்மையால் புனித மண்ணில் மனித சேவையைத் தெய்விகச் சேவையாகச் செய்து வந்தார் வள்ளலார்.
தம்முடன் வாழும் மக்களின் போக்கைக் கண்டிரங்கி அந்தோ; அழியா அல்லலும், அடங்கா ஆசையும் கரையிலாக் கவலைகளும் நின்று நிலவும் நிலையிலா வாழ்வைப்போக்கி படிப்படியாக நிலைத்த பேரின்ப வாழ்வுக்கு மக்களை அறைகூவி அழைத்தார்.
“நான் இந்தியன். இந்தியர் என் சகோதரர்கள்; லட்சாதிபதியும், பிட்சாதிபதியும் முதல் சாதியும் இழிநிலைச் சாதியும் என் மதம், உறவு உற்றார்” என்று வீரமொழி கூறுகின்றார் விவேகானந்தர். மனித வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை; எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம் என்ற ஒருமைப்பாட்டை விவேகானந்தர் விளக்குவதைத்தான் வள்ளலாரும்,
Denne historien er fra February 01, 2026-utgaven av Dinamani Tenkasi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tenkasi
Dinamani Tenkasi
தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு
சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.
1 min
May 13, 2026
Dinamani Tenkasi
குமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.
1 min
May 13, 2026
Dinamani Tenkasi
மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழப்பு
மகாராஷ்டிரத்தின் சாங்லிமாவட்டத்தில்செவ்வாய்க் கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழந்தன ர்.
1 min
May 13, 2026
Dinamani Tenkasi
4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்
புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Tenkasi
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் க. கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Tenkasi
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு
2 mins
May 13, 2026
Dinamani Tenkasi
கணவர், மாமனார் கொன்று எரிப்பு: ஆண் நண்பருடன் பெண் கைது
கிருஷ்ணகிரியில் ராணுவ வீரரான கணவர், அவரது தந்தையை, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொன்று எரித்ததாக பெண்ணை, அவரது நண்பருடன் போலீஸார் கைது செய்தனர்.
1 min
May 13, 2026
Dinamani Tenkasi
கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்
கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
1 min
May 12, 2026
Dinamani Tenkasi
பிளவுபடுகிறதா அதிமுக?
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.
1 mins
May 12, 2026
Dinamani Tenkasi
தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 12, 2026
Listen
Translate
Change font size
