Prøve GULL - Gratis
காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!
Dinamani Tenkasi
|December 03, 2025
உலகின் ஆன்மிகத் தலைநகரமாக போற்றப்படும் புனிதத் தலம், காசி என்று பரவலாக அழைக்கப்படும் வாரணாசி. பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் அதன் பண்பாட்டு மையமாக தொன்றுதொட்டு திகழும் காசியில் நால்வர் தேவாரமும், கபீர்தாசின் பரவசமூட்டும் பக்திப் பாடல்களும் ஒருங்கே ஒலிக்கும். இஸ்லாமியராக இருந்தாலும் அதிகாலையில் காசி விஸ்வநாதரை தனது ஷெனாய் வாத்தியத்தில் பூபாளம் வாசித்துத் துயில் எழுப்பும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாழ்ந்த இடம்.
இப்புண்ணியத் தலத்தில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம், காசிக்கும் நமது தமிழ் நாட்டிற்கும் இடையேயான வரலாற்று பந்தத்தைக் கொண்டாடும் திருவிழாவாக மாறியிருக்கிறது. தொடர்ந்து நான்காவது ஆண்டாக இங்கே காசி தமிழ் சங்கமம் நடைபெறுகிறது.
கடந்த 2022-இல் 'ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ்' என்று நாம் கொண்டாடிய பாரத விடுதலையின் 75-ஆவது ஆண்டுக் கொண்டாட்டத்தின்போது முதலாவது காசி தமிழ் சங்கமம் நடத்தப்பட்டது. அப்போதுமுதல், இந்நிகழ்வு தேசிய நல்லிணக்கத்துக்கான ஒரு முக்கிய நிகழ்வாக, கங்கையின் கலாசாரமும் காவிரியின் பண்பாடும் கைகோக்கும் விழாவாக, வடக்கும் தெற்கும் அதன் பொதுப் பாரம்பரியத்தின் வழி இணைந்து கொண்டாடும் நிகழ்வாக உருவெடுத்திருக்கிறது. இது மகாகவி பாரதியார் கண்ட கனவு.
'கங்கை நதிப் புரத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம் சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்'
என்ற ஒருங்கிணைந்த ஒற்றுமையான உறுதியான இந்தியாவை உருவாக்க வழிவகுக்கும் விழாவாக காசி தமிழ் சங்கமம் விழா அமைந்துள்ளது.
பாரதியார் கண்ட கனவு, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் இன்று நிஜமாகிக் கொண்டிருக்கிறது. காசி தமிழ்ச் சங்கமத்தை வடிவமைப்பது என்கிற உயர்ந்த நோக்கத்தின் பின்னணியில் இருந்தவர் அவர்தான். தமிழகம் குறித்து உத்தர பிரதேசமும், வட இந்தியா குறித்துத் தென்னிந்தியாவும் புரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது இந்த நிகழ்வு.
அந்நியப் படையெடுப்பாலும், பிரிவினைவாத அரசியலாலும், குறுகிய கண்ணோட்டத்தாலும் பிரிந்து கிடந்த உணர்வுகளையும், உள்ளங்களையும் ஒருங்கிணைக்கும் காசி தமிழ் சங்கமம் என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணத்தின் விளைவுதான் இப்போது நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் இந்தக் கொண்டாட்டம்.
கடந்த ஞாயிறு, நவம்பர் 30-ஆம் தேதி ஒலிபரப்பான 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பிரதமர், “காசி-தமிழ் சங்கமம் உலகின் மிகத் தொன்மையான மொழியும் உலகின் மிகப் பழைமையான நகரங்களில் ஒன்றும் சங்கமிப்பதாகும்” என்று கூறினார்.
Denne historien er fra December 03, 2025-utgaven av Dinamani Tenkasi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tenkasi
Dinamani Tenkasi
இண்டிகோ செயல்பாடுகள் மேற்பார்வைக்கு 8 பேர் குழு: டிஜிசிஏ அமைப்பு
இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட கடுமையான குளறுபடிகளைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை மேற்பார்வை செய்யவும், கண்காணிக்கவும் 8 பேர் கொண்ட குழுவை விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) புதன்கிழமை அமைத்தது.
1 mins
December 11, 2025
Dinamani Tenkasi
திருவண்ணாமலை தீப மலையில் ஏறிய நபர் மூச்சுத்திணறி உயிரிழப்பு
திருவண்ணாமலையில் மகா தீப தரிசனம் காண தடையை மீறி செவ்வாய்க்கிழமை இரவு மலை மீது ஏறிச் சென்ற நபர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
1 min
December 11, 2025
Dinamani Tenkasi
யுனெஸ்கோ கலாசாரப் பட்டியலில் தீபாவளி பண்டிகை!
இந்தியர்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளி, யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரியப் பட்டியலில் புதன்கிழமை (டிச.
1 min
December 11, 2025
Dinamani Tenkasi
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி வேகமான முன்னேற்றம்
இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதை நோக்கி, இருநாடுகளும் வேகமாக முன்னேறி வருவதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
1 min
December 11, 2025
Dinamani Tenkasi
உரிமை கோரப்படாத ரூ.2,000 கோடி உரியவர்களிடம் திருப்பியளிப்பு
பிரதமர் மோடி பெருமிதம்
1 min
December 11, 2025
Dinamani Tenkasi
376 நிலஅளவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வான 376 நில அளவர்கள் மற்றும் 100 வரைவாளர்கள் ஆகியோருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினார்.
1 min
December 11, 2025
Dinamani Tenkasi
வீர சாவர்க்கர் விருதை ஏற்கப் போவதில்லை: சசி தரூர்
'வீர சாவர்க்கர் விருதை ஏற்கப் போவதில்லை; அந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதுமில்லை' என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூர் தெரிவித்தார்.
1 min
December 11, 2025
Dinamani Tenkasi
நீதித் துறைக்கு சவால் விடும் திமுக அரசு: அதிமுக பொதுக் குழுவில் கண்டனம்
நீதித் துறைக்கு சவால் விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனப்பான்மை கண்டனத்துக்குரியது என்று அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min
December 11, 2025
Dinamani Tenkasi
இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பு மைக்ரோசாஃப்ட் - தொழிலாளர் அமைச்சகம் ஒப்பந்தம்
இந்தியாவில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் மத்திய தொழிலாளர் நல, வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் புதன்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
1 min
December 11, 2025
Dinamani Tenkasi
முதல் டி20-யில் இந்தியா அபார வெற்றி
பாண்டியா, பௌலர்கள் அசத்தல்
1 min
December 10, 2025
Listen
Translate
Change font size
