Facebook Pixel ராகுல் பேச அனுமதி மறுப்பு: ஓம் பிர்லாவுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சந்திப்பு | Dinamani Tenkasi - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

ராகுல் பேச அனுமதி மறுப்பு: ஓம் பிர்லாவுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சந்திப்பு

Dinamani Tenkasi

|

March 28, 2025

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது எனக் கூறப்படும் விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து அவைத் தலைவர் ஓம் பிர்லாவை வியாழக்கிழமை சந்தித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவரிடம் கடிதம் வழங்கினர்.

புது தில்லி, மார்ச் 27:

மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் கௌரவ் கோகோய் தலைமையில் சென்ற இந்தக் குழுவில் திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி எம்.பி.க்கள் இடம்பெற்றிருந்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கௌரவ் கோகாய் கூறியதாவது: சிவசேனை (உத்தவ் பிரிவு) உள்பட பல்வேறு எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கையொப்பம் பெற்ற இந்தக் கடிதத்தை அவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் வழங்கினோம். மக்களவையின் மாண்பு, கலாசாரம் மற்றும் விதிகளை ஆளும் பாஜக எவ்வாறெல்லாம் மீறுகிறது என்பதை அவரிடம் விளக்கி எங்கள் ஏமாற்றம் மற்றும் கண்டனத்தை பதிவு செய்தோம்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் அவரை ஓம் பிர்லா கண்டித்து விதி 349-இன்படி நடந்துகொள்ளுமாறு கூறினார். ஆனால் அதுகுறித்த தெளிவான விளக்கம் தெரியவில்லை. அவர் கூறியதைத் திரித்து பாஜக தகவல் தொழில்நுட்ப அணியினர் அரசியலாக்கி வருகின்றனர்.

ராகுல் காந்தி பேச எழுந்தவுடன் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பானது அரசமைப்புச் சட்டத்தால் நிறுவப்பட்டது. ஆனால் அவரை விமர்சித்து கூறப்பட்ட சில கருத்துகளுக்குப் பதில் கூற அனுமதி வழங்கப்படவில்லை என்றார்.

FLERE HISTORIER FRA Dinamani Tenkasi

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

சிங்கத்தை குகையிலேயே...

நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.

time to read

1 min

June 14, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!

மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.

time to read

2 mins

June 14, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

இதயத்தில் இருந்து கதைகள் சொன்னால்...

“நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து கதை சொல்ல ஆரம்பித்தால், அது பல இதயங்களைச் சென்று சேரும்” என்கிறார் ஜானகி சபேஷ்.

time to read

3 mins

June 14, 2026

Dinamani Tenkasi

அணிலாடும் முன்றில்

கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.

time to read

1 mins

June 14, 2026

Dinamani Tenkasi

நீத்தார் - பெரியார் - நல்லோர்

திருக்குறளைவிட நாலடியார் காலத்தால் பிற்பட்டது; சமண முனிவர் பலரால் எழுதப்பட்டது; பதுமனார் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்புநூல்; திருக்குறளுக்கு அடுத்த சிறந்த நீதி நூலாகப் போற்றப்படுவது; இதில் திருக்குறளின் தாக்கம் மிகுந்திருப்பதைப் பல பாடல்களால் அறியலாம்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

அசத்திய மாணவர்கள்!

\"உலக யோகா தினத்தையொட்டி, இந்திய ஒலிம்பிக் சங்கமும் யோகாசன பாரத் அசோசியேஷனும் இணைந்து குஜராத் மாநிலத்துக்கு உள்பட்ட அகமதாபாத்தில் அண்மையில் நடத்திய போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாணவ, மாணவியர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்\" என்கிறார் ஆவடி கோவர்த்தனகிரியில் உள்ள மகரிஷி பதஞ்சலி யோகா பயிற்சி மையப் பயிற்சியாளர் வி. ராம்குமார்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Tenkasi

சூரிய ஒளியிலும் சித்திரங்கள்!

எந்த வர்ணங்களையும் பயன்படுத்தாமல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஓவியங்களை ஐந்து ஆண்டுகளாக வரைந்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

நாயக்கர் கால நெற்களஞ்சியம்

வேளாண்மை செழிப்பாக இருந்த ஆற்றங்கரையோர நாகரிகத்தில் உணவுத் தானியங்களைச் சேர்த்து வைக்கும் பழக்கம் பழங்காலத்திலிருந்தே இருக்கிறது.

time to read

2 mins

June 14, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

அமெரிக்கா அபார வெற்றி; கனடா-போஸ்னியா ஆட்டம் டிரா

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டொரண்டோவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கனடா-போஸ்னியா அணிகள் 1-1 என டிரா கண்டன.

time to read

1 min

June 14, 2026

Dinamani Tenkasi

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,161 கோடி டாலராக சரிவு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூன் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,161 கோடி டாலராக சரிந்துள்ளது.

time to read

1 min

June 14, 2026

Translate

Share

-
+

Change font size