Facebook Pixel 'வீட்டிலிருந்து வேலை' எனும் சிறை ! | Dinamani Salem - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

'வீட்டிலிருந்து வேலை' எனும் சிறை !

Dinamani Salem

|

June 27, 2026

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.

- வெ. இன்சுவை

'வீட்டிலிருந்து வேலை' எனும் சிறை !

கரோனா காலத்தைப் போல பெருந்தொற்று காரணங்களுக்காக அவர் இதைச் சொல்லவில்லை மாறாக, நாட்டின் பொருளாதாரம் மற்றும் சர்வதேச நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக இந்தச் சிக்கன நடவடிக்கை என்று கூறினார்.

கரோனா காலத்தில் ஊரடங்கு அமலில் இருந்தது; தொழில்கள் முடங்கின; முன்களப் பணியாளர்கள் மட்டுமே வேலைக்கு வந்தனர். பள்ளி மற்றும் கல்லூரிகள் இணையவழியில் இயங்கின, மென்பொருள் பொறியாளர்களை என்னசெய்ய? அப்போது உதித்த எண்ணம்தான் 'வீட்டிலிருந்தே வேலை செய்வது. இணைய வழியாகவே அலுவலகப் பணிகளைச் செய்தனர்; வெற்றிகரமாக இயங்கினார்கள்.

ஆரம்பத்தில் எல்லோரிடமும் இது மிகுந்த வரவேற்பைப்பெற்றது. இணையம் வழியாகவே அலுவலகக் கூட்டங்கள் நடத்தினர். வீட்டிலிருந்தே வேலை என்ற போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். முன்பு ஐந்து நாள்கள் அயராது உழைத்து வார விடுமுறையின்போது வேறு முகமூடி அணிந்து கொண்டார்கள். மன உளைச்சல், பதற்றம் இவற்றைப் போக்க ஒரு வழியைக் கண்டறிந்தார்கள். ஐ.டி. ஊழியர்களின் 'பப்' கலாசாரம்தான் அது. ஒரு தனி உலகமாக மாறிவிட்டது. தங்களின் மன அழுத்தத்தைக் குறைக்கிறது என்று காரணம் சொல்லிக் கொண்டார்கள்.

கரோனாவின்போது, வீட்டிலிருந்து வேலை என்பது பெரிய வரப்பிரசாதமாக இருந்தது. குடும்பப் பொறுப்புகளையும், தனிப்பட்ட வேலைகளையும் சமநிலைப் படுத்திக் கொள்ள முடிந்தது. வெளியில் செல்லும் செலவு, அலுவலகத்துக்கு என வாங்கும் உடைகளுக்கான செலவுகள் பெருமளவில் குறைந்தன.

நிறுவனங்களுக்கும் கட்டட வாடகை மின்சாரக் கட்டணம், பராமரிப்புச் செலவுகள் போன்றவை குறைந்தன. அப்போது வீட்டில் இருந்தது பிடித்தது. சூடாக சமைத்துச் சாப்பிட முடிந்தது. குழந்தைகளின் இணையவழிக் கல்வியையும் கவனித்துக் கொண்டார்கள். இரட்டிப்பு மகிழ்ச்சியில் திளைத்தார்கள். ‘பப் கலாசாரமும் காணாமல் போனது. நாளடைவில் வீட்டிலிருந்து வேலை அவர்களுக்கு சலித்துப் போனது. தனிமை பிடிக்காமல் போனது; மீண்டும் அலுவலகம் போக ஆசைப்பட்டார்கள்.

FLERE HISTORIER FRA Dinamani Salem

Dinamani Salem

உலகிலேயே முதல்முறையாக அணுசக்தி மூலம் ஹைட்ரஜன் உற்பத்தி

கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அமைந்துள்ள அதிவேக சோதனை ஈனுலையிலிருந்து உருவாகும் அணு பதன வெப்பத்தைப் பயன்படுத்தி, தாமிரம்-குளோரின் வெப்ப வேதியியல் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு உலகின் முதலாவது ஹைட்ரஜன் உற்பத்தி நிலையத்தை அணுசக்தித் துறை வெள்ளிக்கிழமை (ஜூன் 26) தொடங்கியது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Salem

Dinamani Salem

சறுக்கிய இந்தியா; சாதித்த அயர்லாந்து

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி கண்டது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Salem

அதிமுக மாநில நிர்வாகிகள் 4 பேருக்கு புதிய பொறுப்பு

அதிமுகவில் கொள்கைப் பரப்பு துணைச் செயலர்கள், மகளிரணி இணைச்செயலர் என மொத்தம் 4 பேர் புதிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Salem

Dinamani Salem

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: 8 பேர் கைது

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் வங்கி ஊழியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். காணிக்கை எண்ணுதல் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கிடும் பணியில் தொடர்புடைய இவர்களிடம் இருந்து ரூ.79.85 லட்சம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

time to read

1 mins

June 27, 2026

Dinamani Salem

சத்யா ஏஜென்ஸீஸ், டோரண்ட் கேஸ் உட்பட 3 நிறுவனங்களின் ஐபிஓ

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல மின்னணு சாதன விற்பனை நிறுவனமான சத்யா ஏஜென்ஸீஸ், டோரண்ட் கேஸ், கனோகர் எலக்ட்ரிக்கல்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Salem

Dinamani Salem

'வீட்டிலிருந்து வேலை' எனும் சிறை !

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.

time to read

3 mins

June 27, 2026

Dinamani Salem

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், முதல்வர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளராவார்.

time to read

1 min

June 27, 2026

Dinamani Salem

டிராக்டர் விற்பனை விறுவிறுப்பு

'எல் நினோ' பருவநிலை மாற்றம் மற்றும் பலவீனமான பருவமழை குறித்த அச்சங்களுக்கு மத்தியிலும், நடப்பு நிதியாண்டில் இதுவரை டிராக்டர்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Salem

தென்னாப்பிரிக்காவுக்கு 'ஹாட்ரிக்'

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 24-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 88 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து வீழ்த்தியது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Salem

Dinamani Salem

அம்பாசமுத்திரம் தொகுதி பொது வேட்பாளர் சீமான்?

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் தவெகவுக்கு எதிராக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

time to read

1 min

June 27, 2026

Listen

Translate

Share

-
+

Change font size