Prøve GULL - Gratis
புதியதோர் நகரம் செய்வோம்!
Dinamani Salem
|May 21, 2025
பொது இடங்களைப் பொருத்தவரை மிகவும் மோசமான பிரச்னைகளில் ஒன்று, அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களின் ஊடுருவல். நடைபாதைகள், கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் சில நேரங்களில் சாலைகளிலும் கடைகள் அமைக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது.
குடிபெயர்தல் தொன்றுதொட்டு நடந்து வரும் நிகழ்வு. பல காரணங்களுக்காக மக்கள் இடம்விட்டு இடம் போகிறார்கள். முன்பெல்லாம் பஞ்சம் பிழைக்க கிராமங்களிலிருந்து பட்டணம் வருவார்கள். இப்போது பெருகி வரும் பொருளாதாரப் பயன்களைப் பெறவும் வசதிகளை அடையவும் மக்கள் நகரங்களுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு அடைக்கலம் அளிக்க நகரங்களும் விரிவடைகின்றன. நகரமயமாக்கல் குறியீட்டில் 58 சதவிகிதமாக தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது.
இந்தியா பல்வேறு துறைகளில் ஆதிக்கத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. கணினி தொழில்நுட்பம், மருத்துவம், மருந்து உற்பத்தி, பாதுகாப்பு, விண்வெளி, ஆட்டோ மொபைல் உற்பத்தி போன்ற பல தொழில்களிலும் துறைகளிலும் அற்புதமான வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த எழுச்சிமிக்க முன்னேற்றத்தின் விளைவாக சுற்றுலாத் துறை சீராக வளர்ந்துள்ளது.
உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பார்வையாளர்கள் நமது அழகிய நிலப்பரப்புகளையும், காடுகளையும் பாரம்பரியம் மிக்க புராண தலங்களையும் காண வருகிறார்கள். மேலும், நவீன இந்தியாவை ஆராய முயல்கிறார்கள். இருப்பினும், அனைத்து உற்சாகமான எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும், பிம்பமும் பொது இடங்களில் காலடி எடுத்து வைத்த அடுத்த நிமிடமே சிதைந்துவிடும்.
இலங்கை போன்ற ஏழை அண்டை நாடுகளுடனும், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள வியத்நாம், தாய்லாந்து மற்றும் கம்போடியா போன்ற பிற நாடுகளுடனும் ஒப்பிடும்போதுகூட, நமது நாட்டின் பொது உள்கட்டமைப்பின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பு உரிய வேகத்தை எட்டவில்லை. இதற்கு நமது மக்களில் பெரும்பகுதியினரிடையே அக்கறையின்மை மற்றும் குடிமை உணர்வு இல்லாதது ஒரு காரணம்; நன்கு வரையப்பட்ட கொள்கைகளை அமல்படுத்துவதில் அரசாங்கத்தின் அணுகுமுறை மெத்தனமாக உள்ளது இன்னொரு காரணம்.
பொது இடங்களைப் பொருத்தவரை மிகவும் மோசமான பிரச்னைகளில் ஒன்று, அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களின் ஊடுருவல். நிர்வாகத்துக்கு இது ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது. நடைபாதைகள், கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் சில நேரங்களில் சாலைகளிலும் கடைகள் அமைக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது.
Denne historien er fra May 21, 2025-utgaven av Dinamani Salem.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Salem
Dinamani Salem
களைக்கொல்லி ரசாயனம் அனுமதியின்றி விற்பனை: அமேசானுக்கு எதிராக விசாரணை
வயலில் பயிர்களுக்கு இடையே வளரும் தேவையற்ற களைகளை கொல்லும் ரசாயனம் என்ற பெயரில், முறைப்படி பதிவு செய்யப்படாத சைக்ளோசைனன் களைக்கொல்லியை விற்பனை செய்தது குறித்து, அமேசான், ஃபிளிப்கார்ட், மீஷோ, ஜியோமார்ட் ஆகிய இணைய வர்த்தக தளங்களுக்கு எதிராக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
1 min
May 17, 2026
Dinamani Salem
அதிமுகவுக்கு அமைச்சர் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது அரசமைப்பு மற்றும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என விசிக மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
1 min
May 17, 2026
Dinamani Salem
புதுச்சேரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடக்கம்
3,000 ஊழியர்கள் ஈடுபடுவர்
1 min
May 17, 2026
Dinamani Salem
'நீட்' வினாத்தாள் விவகாரம்: பெண் விரிவுரையாளர் கைது
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம், புணேயைச் சேர்ந்த உயிரியல் பாட பெண் விரிவுரையாளர் மனீஷா குருநாத் மந்தாரே சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
May 17, 2026
Dinamani Salem
ம.பி.: போஜ்சாலா கோயில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
முஸ்லிம் வாரியம்
1 min
May 17, 2026
Dinamani Salem
முதல்வர் விஜய், அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு
நிதித் துறை - செங்கோட்டையன், சுகாதாரம் - கே.ஜி.அருண்ராஜ்
1 mins
May 17, 2026
Dinamani Salem
வெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு
வெளிநாடுகளில் இருந்து வெள்ளி இறக்குமதி செய்ய கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு சனிக்கிழமை விதித்தது.
1 min
May 17, 2026
Dinamani Salem
சிறப்பாகச் செயல்பட்டு வரும் சென்னை எம்.ஓ.பி. பெண்கள் கல்லூரியின் இதழியல் துறை
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஓ.பி. வைணவ மகளிர் கல்லூரியின் இதழியல் (Journalism) துறை 2003-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
1 min
May 17, 2026
Dinamani Salem
சென்னைக்கு ஏமாற்றம்: பெங்களூருக்கு வெற்றி
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-2 கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சியிடம் சனிக்கிழமை தோல்வி கண்டது.
1 min
May 17, 2026
Dinamani Salem
அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை
சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.
2 mins
May 17, 2026
Translate
Change font size
