Prøve GULL - Gratis
அரசமைப்புச் சட்டம் தோற்றுவிட்டது!
Dinamani Salem
|May 09, 2025
அடிமை நிலையிலும், சுதந்திர நிலையிலும் இவ்வளவு அகன்ற மாணப் பெரிய நாட்டில், நேர்மை, வாய்மை, அறிவுக் கூர்மை ஆகியவை பொதுவாழ்வில் கோலோச்சியதற்கு எம்மான் காந்தியின் தலைமையே காரணம். அவன் நடந்தான்; அவன் தடம் பார்த்து நாடு நடந்தது.
அண்மைக் காலமாக நாடு இதுவரை சந்தித்திராத சட்டச் சிக்கல்களைச் சந்திக்க நேரிட்டது. நம்முடைய அரசியல் சாசனம் மிகவும் விரிவானது. ஆட்சியினர், அதிகார வர்க்கம், நீதித்துறை எனத் தனித்தனி அதிகாரங்களோடு மூன்று பிரிவுகளாக வரையறுக்கப்பட்டு, நாடு இயங்குகிறது. ஒன்றோடு ஒன்று உராய்வதும் உண்டு. எழுதி வைக்கப்பட்டுள்ள சாசனத்தின்படி அந்த உராய்வுகளுக்குத் தீர்வு காணப்படுவதுமுண்டு. உச்சநீதிமன்றத்தைக் 'குடியாட்சியின் காவல் நாய்' என்று கூறுவர். அரசியல் சாசனமே உயர்ந்தது என்று அதற்குத் தனிப்பு கழ் பாடுவோரும் உண்டு. எந்த அரசியல் சாசனமும் மனிதர்களால் ஆக்கப்படுவதுதான். அதை ஆக்கும் மனிதர்களின் அறிவுத் திறம், நேர்மைத் தரத்தை ஒட்டி அந்தச் சாசனம் சிறப்புறுகிறது. இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட காலம் அறம் பிறழாச் சான்றோர்கள் நாட்டின் தலைமைகளில் இருந்த காலம். நேரு, வல்லபபாய் படேல், அம்பேத் கர், கிருபளானி, செயப்பிரகாசு நாராயணன், இராசாசி என நிகரற்ற அறிஞர்களும் மழை பெய்யென்று இவர்கள் கட்டளையிட்டால் பெய்யும் என்று சொல்லத்தக்க அளவு நேரியர்களும் சேர்ந்து விவாதித்து விவாதித்து உருவாக்கிய அரசியல் சாசனம் நம்முடையது. இந்தியத் தலைமையமைச்சராய் இருந்த மொராச்சி தேசாய் ஒருமுறை சொன்னார்: குற்றவியல் சட்டத்தைக் கிழித்தெறிந்து விட்டாலும், என்னால் எந்தத் தப்பும் செய்ய முடியாது. இப்படி அடிமை நிலையிலும், சுதந்திர நிலையிலும் இவ்வளவு அகன்ற மாணப் பெரிய நாட்டில், நேர்மை, வாய்மை, அறிவுக் கூர்மை ஆகியவை பொதுவாழ்வில் கோலோச்சியதற்கு எம்மான் காந்தியின் தலைமையே காரணம். அவன் நடந்தான்; அவன் தடம் பார்த்து நாடு நடந்தது. பேரரசன் அசோகனுக்குப் பிறகு அறம் கோலோச்சிய காலம் அது தான். நியாயமே எல்லாவற்றிலும் பெரியது. தனிமனித வாழ்வாயினும், ஆட்சி அதிகாரமாயினும் நியாயத்தை மையமாகக் கொண்டே சிந்தித்தும் வாழ்ந்தும் பழக்கப்பட்ட தலைமுறையினர் வடித்த அரசியல் சாசனம் என்பதால் அவர்கள் இன்னொரு பக்கத்தைப் பார்க்கத் தவறிவிட்டனர். அந்த இன்னொரு பக்கம்தான் இன்றைய குளறுபடிகளுக்கெல்லாம் காரணம். ஒரு மந்திரி போக்குவரத்துத் துறையில் இருந்தார். ஓட்டுநர், நடத்துநர் வேலைகளுக்கு ஆளெடுத்தபோது, அவர்களுக்கு அந்த வேலைகளைத் தருவதற்காக இலஞ்சம் வாங்கினார் என்பது குற்றச்சாட்டு. பாதிக்கப்பட்டவர்கள் தொடுத்த வழக்கு கொஞ்ச
Denne historien er fra May 09, 2025-utgaven av Dinamani Salem.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Salem
Dinamani Salem
ஐ.பி.எல் அபார வெற்றியுடன் முதலிலிடத்தில் குஜராத்
ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 82 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
May 13, 2026
Dinamani Salem
பேரவையில் அனைவரும் சமம்
முதல்வர் விஜய்
1 mins
May 13, 2026
Dinamani Salem
கணவர், மாமனார் கொன்று எரிப்பு: ஆண் நண்பருடன் பெண் கைது
கிருஷ்ணகிரியில் ராணுவ வீரரான கணவர், அவரது தந்தையை, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொன்று எரித்ததாக பெண்ணை, அவரது நண்பருடன் போலீஸார் கைது செய்தனர்.
1 min
May 13, 2026
Dinamani Salem
அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை
பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.
1 min
May 13, 2026
Dinamani Salem
தொடர் சரிவுப் பாதையில் பங்குச் சந்தை!
உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் நீடிக்கும் மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக, இந்த வாரத்தின் 2-ஆம் வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை இந்தியப் பங்குச் சந்தை மீண்டும் பலத்த சரிவைச் சந்தித்தது.
1 min
May 13, 2026
Dinamani Salem
எதிரி கட்சியாக அல்லாமல் எதிர்க்கட்சியாக திமுக செயல்படும்
எதிரி கட்சியாக அல்லாமல், ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக திமுக செயல்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
1 mins
May 13, 2026
Dinamani Salem
4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்
புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Salem
தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு
சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.
1 min
May 13, 2026
Dinamani Salem
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Salem
தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா
தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் பி. எஸ். ராமன் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
1 min
May 13, 2026
Translate
Change font size
