Prøve GULL - Gratis
பாரம்பரியத்தைப் பறைசாற்ற பனை விதை நடவு!
Dinamani Puducherry
|October 12, 2025
காகிதம் கண்டுபிடிக்கும் முன்பாக பனை ஓலைகள்தான் தமிழர்களின் அறிவுக் களஞ்சியமாகத் திகழ்ந்தன. எழுத்தாணியைக் கொண்டு பனை ஓலை கிழியாமல் எழுதும் திறனைப் பெரும்புலவர்கள் பெற்றிருந்தனர். சங்க இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா உவே. சாமிநாதைய்யர், பனை ஓலைகளில் எழுதப்பட்ட நம்முடைய பாரம்பரியத்தை மீட்கவில்லை என்றால் தமிழின் பொக்கிஷங்கள் காணாமல்போய் இருக்கும். பனையின் ஒவ்வொரு பாகமும் மக்களின் பயன்பாட்டுக்கு உகந்தவை. செங்கல்சூளை, வீட்டின் கூரை, சாலை விரிவாக்கம், ரியல் எஸ்டேட் வளர்ச்சி போன்ற காரணங்களால் பனை மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. பனையின் பாரம்பரியத்தை உணர்ந்து பனை விதையை நடவு செய்து வருகிறார், புதுச்சேரி பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த பனை டி. ஆனந்தன். அவரிடம் பேசியதிலிருந்து:
பனை மரத்தின் பாதுகாப்பு இப்போது எப்படி இருக்கிறது?
தமிழ்நாட்டு மாநில மரம் பனை. இதற்கு முன்பு பல்வேறு காரணங்களுக்காக பனை மரம் வெட்டப்பட்டது. ஆனால், தமிழக அரசு பனை மரத்தைப் பாதுகாக்க ஓர் உத்தரவை அண்மையில் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு அடிப்படையில், இனி யாரும் மாவட்ட ஆட்சியரின் அனுமதியில்லாமல் பனை மரத்தை வெட்ட முடியாது. இது போன்ற உத்தரவு புதுவையிலும் பிறப்பிக்க வேண்டும். இப்போது பனைக்குப் பாதுகாப்பு வந்துவிட்டது.பனை மரம் ஏறுவோர் எண்ணிக்கை குறைந்து விட்டதாகத் தெரிகிறதே?
பனை மரம் ஏறுவோர்தான் பனை மரத்தைப் பாதுகாத்து வந்தனர். பனை ஓலைகளைக் கழித்து விடுதல் போன்ற பணிகளைச் செய்து வந்தனர். தமிழகத்தில் கள் இறக்க அனுமதியில்லாத நிலையில், பனை மரம் ஏறுவோர் வேறு வேலைக்குச் சென்றுவிட்டனர். பழக்கம் இருந்தால் மட்டும்தான் பனை மரம் ஏற முடியும். டாஸ்மாக் வந்து விட்டதால் இப்போது பனை மரம் இந்தப் பயன்பாட்டுக்கு இல்லாத சூழ்நிலை உருவாகிவிட்டது.எத்தனை ஆண்டாக பனை விதைகளை நட்டு வருகிறீர்கள்?
இளைஞர்கள் ஒன்று திரண்ட ஜல்லிக்கட்டுப் போராட்டம் நம் பாரம்பரியத்தை மீட்கும் எண்ணம் கொண்டது. அதைப் போன்றதுதான் பனையின் பாரம்பரியத்தை மீட்பதும். அதற்காகத்தான் 2015 முதல் பனை விதைகளை நட்டு வருகிறேன். கடலோரப் பகுதிகள், குளக்கரைகள், ஏரிக்கரைகள், சாலையோரங்களைத் தேர்ந்தெடுத்து பனை விதைகளை நடவு செய்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் 4.5 லட்சம் பனை விதைகளை நடவு செய்துள்ளோம். இதில் சுமார் 2 லட்சம் பனைகள் பிழைத்துக் கொண்டன. இப்போது அவை ஓரடி, இரண்டு, மூன்றடி வரை வளர்ந்துள்ளன.Denne historien er fra October 12, 2025-utgaven av Dinamani Puducherry.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Puducherry
Dinamani Puducherry
சைக்கிள் ஓட்டுவோம்..!
குறைந்த தூரத்துக்குச் சென்று வருவதில் சிறந்த, எளிமையான போக்குவரத்துச் சாதனம்தான் 'மிதிவண்டிகள்' என்று அழைக்கப்படும் 'சைக்கிள்கள்'.
2 mins
May 31, 2026
Dinamani Puducherry
இயக்குநர்களின் லைன் அப்!
லோ கேஷ் கனகராஜ், பா. ரஞ்சித், எஸ். ஜே. சூர்யா ஆகிய இயக்குநர் களின் அடுத்தடுத்த லைன் அப்களை இங்கே பார்க்கலாம் ...
2 mins
May 31, 2026
Dinamani Puducherry
வானொலியில் புரட்சி
\"ஒலிபரப்புப் பின்னணியுள்ள எனக்கு விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\" என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வானொலி ஒலிபரப்பாளர் ஆர். ஸ்ரீதர்.
1 mins
May 31, 2026
Dinamani Puducherry
நம்பிக்கை நட்சத்திரம்
உள்ளரங்க விளையாட்டுகளில் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி ஆடுவதில் முதன்மை பெற்று விளங்குகிறது செஸ் (சதுரங்கம்). இதில் வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார் மதுரையைச் சேர்ந்த சிறுமி ஆரண்யா.
1 min
May 31, 2026
Dinamani Puducherry
வியக்க வைக்கும் பள்ளி
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை வசதிகள் அறவே இல்லாத பள்ளி, மாணவர்கள் இல்லாத வகுப்பறைகள், கழிவறைக்குக்கூட வெளியே சென்றுவந்த ஆசிரியர்கள், தேர்ச்சி விழுக்காடு குறைவு, மாணவ - மாணவியரை தேடித் தேடிச் சேர்த்தது என்றிருந்த நிலைமை அறவே மாறிவிட்டது.
2 mins
May 31, 2026
Dinamani Puducherry
தமிழகத்துக்கு பிரத்யேக விளையாட்டுக் கொள்கை
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
1 min
May 30, 2026
Dinamani Puducherry
சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...
இணையத்தின் வரவால் இன்று நாம் பல வசதிகளை அறிதிறன்பேசி மூலம் பெற்று வருகிறோம்.
2 mins
May 29, 2026
Dinamani Puducherry
இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்
ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.
1 min
May 29, 2026
Dinamani Puducherry
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...
தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 29, 2026
Dinamani Puducherry
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் ஓய்வு பெற்றார்
சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான ஆர். சுரேஷ்குமார், வியாழக்கிழமையுடன் (மே 28) பணி ஓய்வு பெற்றார்.
1 min
May 29, 2026
Translate
Change font size

