திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு
Dinamani Puducherry
|July 15, 2025
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
-
திருப்பரங்குன்றம், ஜூலை 14: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி, ரூ.2.50 கோடியில் திருப்பணிகள் கடந்த பிப்.10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. திருப்பணிகள் நிறைவு பெற்று கோயில் வளாகத்தில் உள்ள கம்பத்தடி மண்டபம், மகா மண்டபம், திருவாச்சி மண்டபம், வல்லப கணபதி சந்நிதி உள்ளிட்ட பல்வேறு மண்டபங்களும் புதுப்பொலிவுடன் காட்சியளித்தன. கோயிலில் கல் தூண்களில் உள்ள சிம்ம முகங்கள், யாழிகள் அனைத்தும் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டன. இதேபோல, கோயில் ராஜகோபுரமும் வண்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றது.
யாக சாலை பூஜைகள்: குடமுழுக்கையொட்டி, சுப்பிரமணிய சுவாமி, சத்தியகிரீஸ்வரர், துர்க்கை அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் ஆகம விதிப்படி 75 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, கடந்த 10-ஆம் தேதி மாலை முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. இதைத்தொடர்ந்து, இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை ஏழாம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது.
Denne historien er fra July 15, 2025-utgaven av Dinamani Puducherry.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Puducherry
Dinamani Puducherry
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்.
1 min
December 29, 2025
Dinamani Puducherry
ஏற்பாடுகளில் சமரசம் வேண்டாம்
அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் இந்தியச் சுற்றுப்பயணம் அண்மையில் பேசு பொருளானது.
2 mins
December 29, 2025
Dinamani Puducherry
பிச்சாவரம், கோடியக்கரையில் பறவைகள் கணக்கெடுப்பு
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் வனத் துறை சார்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச.
1 min
December 29, 2025
Dinamani Puducherry
சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு
திரளான பக்தர்கள் தரிசனம்
1 mins
December 28, 2025
Dinamani Puducherry
கதைகளுக்கு நிலம்தான் அடிப்படை!
சீனுராமசாமி. . தேடித் தேடிச் சேர்த்த அனுபவமும், இன்னும் இன்னும் தீராத தேடலுமாக சமூகத்தின் சகல திசைகளையும் தரிசிக்கத் துடிக்கிற படைப்பாளி.
2 mins
December 28, 2025
Dinamani Puducherry
பாரம்பரிய அருங்காட்சியகம்...
சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட பிள்ளையார்பட்டி அருகே நகர வைரவன்பட்டி என்ற ஊரில் நகரத்தார் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக 'செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகம்', ஐரோப்பிய - இந்தோ கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும் மூன்று அடுக்கு கட்டடத்தில் இயங்கிவருகிறது. இங்கு 4 ஆயிரம் சதுர அடியில் செட்டிநாடு பாணியில் முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து, அருங்காட்சியக உரிமையாளர் சா.லெ.சு. பழனியப்பன் கூறியது:
2 mins
December 28, 2025
Dinamani Puducherry
ஈழத்து மெல்லிசை மன்னர்
'ஈழத்து மெல்லிசை மன்னர்' என அழைக்கப்படுபவர் எம். பி. பரமேஷ். 1980-களில் இலங்கை வானொலியில் இவரது இசையமைப்பில் உருவான பல பாடல்கள் பிரபலம்.
1 min
December 28, 2025
Dinamani Puducherry
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் மாவோயிஸ்டுகள் எண்ணிக்கை குறைந்தது
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் மாவோயிஸ்டுகள் எண்ணிக்கை குறைந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
1 min
December 28, 2025
Dinamani Puducherry
புதிய ஊரக வேலைத் திட்டத்தால் மாநில அரசுகளுக்கு கூடுதல் செலவு
மத்திய அரசின் புதிய ஊரக வேலை திட்டத்தால் (விபி-ஜி ராம்-ஜி) மாநில அரசுகளுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்தார்.
1 min
December 28, 2025
Dinamani Puducherry
வீட்டு இரும்புக் கதவு பெயர்ந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சனிக்கிழமை வீட்டின் சுற்றுச் சுவர் இரும்புக் கதவு பெயர்ந்து விழுந்ததில் இரு சிறுமிகள் உயிரிழந்தனர்.
1 min
December 28, 2025
Translate
Change font size

