Prøve GULL - Gratis
மேட்டூர் அணை நிகழாண்டில் 6-ஆவது முறையாக நிரம்புகிறது!
Dinamani Perambalur & Ariyalur
|September 02, 2025
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 36,985 கனஅடியாக அதிகரித்துள்ளதால், நிகழாண்டில் 6-ஆவது முறையாக அணை நிரம்புகிறது.
-
மேட்டூர், பென்னாகரம், செப். 1:
தென்மேற்குப் பருவமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. உபரிநீர்வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கடந்த ஜூன் 29ஆம் தேதி முதல் முறையாகவும், ஜூலை 5ஆம் தேதி 2ஆவது முறையாகவும், ஜூலை 20 ஆம் தேதி 3ஆவது முறையாகவும், 25ஆம் தேதி 4ஆவது முறையாகவும், ஆகஸ்ட் 20ஆம் தேதி 5-ஆவது முறையாகவும் அணை நிரம்பியது. அதன்பிறகு மழை குறைந்ததாலும், காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அணையின் நீர்மட்டம் மெல்ல குறையத் தொடங்கியது. கடந்த 30ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 118.65 அடியாகக் குறைந்தது.
இந்நிலையில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளிலிருந்து அதிக அளவில் உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், கடந்த இரண்டு நாள்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் மெல்ல உயரத் தொடங்கியது. திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 36,985 கனஅடியாக அதிகரித்துள்ளது.
Denne historien er fra September 02, 2025-utgaven av Dinamani Perambalur & Ariyalur.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Perambalur & Ariyalur
Dinamani Perambalur & Ariyalur
இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்
இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
June 06, 2026
Dinamani Perambalur & Ariyalur
சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ் ஐபிஓ: 127 மடங்கு முன்பதிவுடன் அமோக வரவேற்பு
உலோக மறுசுழற்சி நிறுவனமான 'சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
1 min
June 06, 2026
Dinamani Perambalur & Ariyalur
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம், பஞ்சாப் மாநிலம், முலான்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.
1 min
June 06, 2026
Dinamani Perambalur & Ariyalur
பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்: நிர்மலா சீதாராமன்
நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் வலுவாக இருப்பதை உறுதிசெய்வதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 06, 2026
Dinamani Perambalur & Ariyalur
ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை ஜூன் 18-இல் தொடங்குகிறது
தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் வரும் ஜூன் 18-ஆம் தேதி ஆளுநர் ஆர்லேகர் உரையுடன் தொடங்கும் என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 06, 2026
Dinamani Perambalur & Ariyalur
சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு
தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) திறக்கிறது.
1 min
June 06, 2026
Dinamani Perambalur & Ariyalur
யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
1 min
June 06, 2026
Dinamani Perambalur & Ariyalur
436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.
1 min
June 06, 2026
Dinamani Perambalur & Ariyalur
மணிப்பூர்: குகி கிராமத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் 3 பேர் உயிரிழப்பு
மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் குகி சமூகத்தினர் வாழும் கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
1 min
June 06, 2026
Dinamani Perambalur & Ariyalur
இறுதிச் சுற்றில் ஆண்ட்ரீவா
நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முதல் வீராங்கனையாக ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா வியாழக்கிழமை தகுதிபெற்றார்.
1 min
June 05, 2026
Translate
Change font size
