Prøve GULL - Gratis
மாநிலக் கல்வியை மேம்படுத்துவோம்!
Dinamani Perambalur & Ariyalur
|April 15, 2025
தமிழ்நாடு அரசின், மாநிலப் பாடத்திட்ட முறை வலிமையான கட்டமைப்புகளையும், வாய்ப்புகளையும், வெற்றிகரமான அணுகுமுறைகளையும் கொண்டிருந்தாலும் மத்தியப் பாடத்திட்டப் பள்ளிகள் குறுகிய காலத்தில் ஏறத்தாழ 6 மடங்கு வளர்ச்சியைப் பெற்றுள்ளன.
மாநிலத்தின் மொழி, வரலாறு, பண்பாடு ஆகியவற்றைக் கற்றுக்கொடுப்பது, பாதுகாப்பது அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது என்ற தலையாய கடமையை மாநிலப் பாடத்திட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கல்விப் பாடத்திட்டத்தைப் பொருத்தவரையில் தமிழ் மொழி, இலக்கிய வரலாறு, அரசியல் மற்றும் சமூகப் பண்பாட்டு வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம் இவற்றோடு உலகமொழியாகிய ஆங்கிலம் என நிறைவான கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
காலந்தோறும் பல்வேறு சீர்திருத்தங்களைப் பாடத்திட்டத்தில் மேற்கொண்டு வரும் தமிழ்நாடு அரசு, கல்வி வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் அதிகபட்சமான நிதியை ஒதுக்கி வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ்கிறது. தமிழக அரசு பின்பற்றுகிற பாடத்திட்டம் அறிவியல் பூர்வமானதும் வரலாற்றுச் சிறப்புடையதும் ஆகும். அதன் காரணமாக, இந்திய நாட்டுக்கு தலைசிறந்த கல்வியாளர்களையும், விஞ்ஞானிகளையும், ஆராய்ச்சியாளர்களையும், ஆட்சிப்பணி அதிகாரிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. இவர்களுள் பெரும்பாலோர் அரசுப் பள்ளிகளிலும், தமிழ் வழியிலும் கற்றவர்கள் என்பது மற்றுமொரு சிறப்பாகும். இவ்வாறு பயின்றவர்கள் இன்று தேசிய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்று வருகிறார்கள்.
கடந்த 8.08.2024 தரவுகளின்படி, தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிற அரசே நடத்துகிற தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 37,592 ஆகும். அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை 8,329 ஆகும். தனியார் பள்ளிகள் 11,443 ஆகும். இதில் அரசு நடத்தும் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 3,168 ஆகும். அதே வேளையில், சிபிஎஸ்இ எனப்படுகிற மத்திய அரசின் பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிற பள்ளிகள் தமிழ் நாட்டில் கடந்த 2010-ஆம் ஆண்டில் 250 பள்ளிகளாகவும், 2015-ஆம் ஆண்டில் 580 பள்ளிகளாகவும், 2024-ஆம் ஆண்டில் 1,617 பள்ளிகளாகவும் இருக்கின்றன. இவை அனைத்தும் மேல்நிலைப் பள்ளிகளே. எனவே, தமிழ்நாடு அரசு நடத்தும் மேல்நிலைப் பள்ளிகளில் சரிபாதி அளவாக வளர்ந்து நிற்கின்றன மத்தியப் பாடத்திட்டப் பள்ளிகள். ஊரகப் பகுதிகளில் கூட மத்தியப் பாடத்திட்டப் பள்ளிகள் மீதான நாட்டம் அதிகரிப்பதைக் காண முடிகிறது.
Denne historien er fra April 15, 2025-utgaven av Dinamani Perambalur & Ariyalur.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Perambalur & Ariyalur
Dinamani Perambalur & Ariyalur
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Perambalur & Ariyalur
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: பி.டி. அரசகுமார் கைது
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக பி.டி. அரசகுமார் சென்னையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
June 28, 2026
Dinamani Perambalur & Ariyalur
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Perambalur & Ariyalur
மெஸ்ஸி என்னும் மாயாவி!
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.
1 mins
June 28, 2026
Dinamani Perambalur & Ariyalur
'மாணவர்களின் குரல்' போராட்ட இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும்
நாட்டில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்யும் புதிய கல்விமுறையை வலியுறுத்தி, காங்கிரஸ் இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தொடங்கப்பட்டுள்ள 'மாணவர்களின் குரல்' போராட்ட இயக்கத்தை வலுப்படுத்த வேண்டுமென கட்சியின் பொதுச் செயலர்கள், மாநிலத் தலைவர்கள், நிர்வாகிகளுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
1 min
June 28, 2026
Dinamani Perambalur & Ariyalur
கம்பீரமாக நிற்கும் கல்யாண மஹால்
தஞ்சாவூர் அருகேயுள்ள திருவையாறு ஆன்மிக, கலாசார நகரம். சோழர் காலம் முதல் பல்வேறு வரலாறுகளைக் கொண்ட இந்த நகரில் உள்ள புராதனக் கட்டடங்களில் கல்யாண மஹால் இருநூறு ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது.
2 mins
June 28, 2026
Dinamani Perambalur & Ariyalur
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Perambalur & Ariyalur
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Perambalur & Ariyalur
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
2 mins
June 28, 2026
Dinamani Perambalur & Ariyalur
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்
இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.
1 mins
June 28, 2026
Translate
Change font size
