Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

வெற்றியின் முகவரி பணமா?

Dinamani New Delhi

|

December 01, 2025

மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.

- பழ.அசோக்குமார்

ஆனால், ஒரு மனிதனின் முழு வெற்றிக்கும், உண்மையான சாதனைக்கும் பணம் மட்டுமே முழுக் காரணமாகி விடுமா? ஏனெனில், பணம் என்பது ஒரு மனிதனின் அர்த்தமுள்ள வெற்றியின் வரைபடத்தில், அது ஒரு சிறு பகுதி மட்டுமே; அதுவே முழு முகவரி அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்வது அவசியம்.

பணம் ஏன் வெற்றியின் மிக முக்கியமான அடையாளமாகக் கருதப்படுகிறது என்பதற்கு, இந்த பரபரப்பான உலகம் பல வலுவான காரணங்களை நம் முன்னே அடுக்கிக் காட்டும். பெரும்பாலும், நிரந்தரமில்லாத வேலைவாய்ப்புகளும் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலமும் நிறைந்துள்ள இந்தக் காலத்தில், பணம்தான் ஒருவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கையான பாதுகாப்பை வழங்குகிறது. எதிர்பாராத மருத்துவச் செலவுகள் அல்லது வேலை இழப்பு போன்ற நெருக்கடிச் சூழல்களைச் சமாளிக்கப் பணம் அத்தியாவசியமானது.

ஒருவருக்கு சிறந்த தொழில், வீடு, வாகனம், கல்வி, தரமான மருத்துவம், விருந்து, கேளிக்கை, ஆடம்பரப் பயணம் போன்ற அனைத்தையும் பணம் அளிக்கிறது என்பது உண்மைதான். பணத்தின் இந்த வலிமை சமூகத்தில் ஒருவருடைய கௌரவத்தையும், மதிப்பையும் உயர்த்துவதாக நடைமுறை உலகம் நம்புகிறது.

FLERE HISTORIER FRA Dinamani New Delhi

Dinamani New Delhi

விவசாயிகளுக்கு ஆண்டில் இருமுறை நிவாரணம் அளித்தது அதிமுக அரசு

விவசாயிகளுக்கு ஒரே ஆண்டில் இருமுறை நிவாரணம் அளித்தது அதிமுக அரசு என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பேசினார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani New Delhi

Dinamani New Delhi

காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!

மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

time to read

1 min

December 01, 2025

Dinamani New Delhi

Dinamani New Delhi

சோனியா, ராகுல் மீது புதிதாக எஃப்.ஐ.ஆர் பதிவு

நேஷனல் ஹெரால்ட் வழக்கு

time to read

2 mins

December 01, 2025

Dinamani New Delhi

Dinamani New Delhi

அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

time to read

1 min

December 01, 2025

Dinamani New Delhi

Dinamani New Delhi

கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!

தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.

time to read

2 mins

December 01, 2025

Dinamani New Delhi

Dinamani New Delhi

இலங்கை மழை வெள்ள பாதிப்பு: மீட்புப் பணியில் இந்திய விமானப் படை

உயிரிழப்பு 334-ஆக உயர்வு

time to read

1 mins

December 01, 2025

Dinamani New Delhi

சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை

சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

time to read

1 min

December 01, 2025

Dinamani New Delhi

இலங்கை மக்களுக்கு உதவத் தயார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு துணை நிற்க தமிழகம் தயாராக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani New Delhi

Dinamani New Delhi

எஸ்ஐஆர் பணி நீட்டிப்பு திமுகவுக்கு கிடைத்த வெற்றி

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாரத்துக்கு நீட்டித்திருப்பது திமுகவுக்கு கிடைத்த வெற்றியாகும் என்று திமுக சட்டத் துறைச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர். இளங்கோ தெரிவித்தார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani New Delhi

ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி

இங்கிலாந்து கோல் மழை

time to read

1 mins

December 01, 2025

Listen

Translate

Share

-
+

Change font size