Prøve GULL - Gratis
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
Dinamani Nagapattinam
|December 02, 2025
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
பொதுவாக ஒரு பொருள் யாருடையதோ, அவர்களால் மட்டுமே அந்தப் பொருளை பாதுகாக்க முடியும். அதைப் பாதுகாப்பது எப்படி என்பதை உரியவர்களுக்குக் கற்றுக் கொடுத்தால் அவர்கள் பாதுகாத்துக் கொள்வார்கள்.
வாக்கைப் பாதுகாக்க வாக்காளர்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும். அதையும் வாக்காளர்கள்தான் செய்ய வேண்டும். அதைப் பாதுகாக்க அவர்களுக்குத் தேவையான வாக்கு குறித்த விழிப்பை, அறிவை மக்களுக்கு நல்வழி காட்டும் தலைவர்கள்தான் தரவேண்டும். அந்த விழிப்புணர்வை இதுவரை வாக்காளர்களுக்கு அளித்தோமா என்பதுதான் கேள்வி. இந்த நாட்டில் வாக்கை எந்த அளவுக்கு தரம் தாழ்த்த முடியுமோ அந்த அளவுக்கு நாம் அனைவரும் தரம் தாழ்த்தியுள்ளோம். வாக்களிக்க கூலி கொடுத்தோம். பரிசுகள் கொடுத்து மகிழ்வித்தோம், அதே போல், இன்று அதையே சந்தைப்படுத்தி விற்று வாங்கும் பொருளாக ஆக்கி வைத்துவிட்டோம். வாக்கைச் சீரழித்தது மக்களல்ல, மாறாக அரசியல் கட்சிகள்தான்.
உலகிலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட நாடு, அதிக எண்ணிக்கையில் வாக்குச்சாவடி, அதிக எண்ணிக்கையில் அலுவலர்களை வைத்து தேர்தல் நடத்தும் ஒரே நாடு இந்தியா. அது மட்டுமல்ல, இவ்வளவு எண்ணிக்கையில் அரசியல் கட்சிகளைக் கொண்ட நாடும் இந்தியாதான். மக்களாட்சிக்கு எதிரான பல சமூகக் கூறுகள் உள்ள நாட்டில் தேர்தலை நடத்துவதே ஒரு சாதனை என்றுதான் ஆய்வாளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தைப் பாராட்டுகின்றனர்.
தேர்தல் ஆணையத்தின் புனிதத்தை கெடுப்பதும் கட்சிகள்தானே தவிர வாக்காளர்கள் அல்ல. தேர்தல் ஆணையராக இருந்தவர்களுக்கு ஆட்சியிலும் கட்சியிலும் பதவிகள் அளித்து அந்தப் பதவிக்கு வருகிறவர்களை தங்கள் எதிர்காலம் பற்றி சிந்திக்கத் தூண்டியதும் ஆட்சியில் இருந்த கட்சிகள்தானே? தேர்தல் ஆணையத்துக்கு ஆணையராக வர விரும்புவோர் 'தங்கள் பதவிக்காலம் முடிந்த பிறகு எந்தப் பதவியும் எங்கும் பெறமாட்டேன்' என்ற உறுதிமொழிப் பத்திரம் தந்தவர்களைத்தான் போட வேண்டும் என்ற சீர்திருத்தத்தைக் கொண்டு வந்திருந்தால் இன்று நிலைமை வேறாக இருந்திருக்குமே. இந்த குறைந்தபட்ச சீர்திருத்தத்தைக்கூட ஏன் நம் கட்சிகள் பேச மறுக்கின்றன?
Denne historien er fra December 02, 2025-utgaven av Dinamani Nagapattinam.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
டிச.14 முதல் விருப்ப மனு: அன்புமணி அறிவிப்பு
தமிழகம், புதுவை பேரவைத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோர் டிச.
1 min
December 12, 2025
Dinamani Nagapattinam
டி காக் அதிரடி, பார்ட்மேன் அபாரம்: தென்னாப்பிரிக்கா வெற்றி
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 51 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.
1 mins
December 12, 2025
Dinamani Nagapattinam
எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் சிலைக்கு ‘தினமணி’ சார்பில் மாலை அணிவித்து மரியாதை
மகாகவி பாரதியாரின் 144-ஆவது பிறந்தநாளை யொட்டி, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு 'தினமணி' சார்பில் வியாழக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
1 min
December 12, 2025
Dinamani Nagapattinam
ரியல் மாட்ரிட்டை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி
ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், மான்செஸ்டர் சிட்டி 2-1 கோல் கணக்கில் ரியல் மாட்ரிட்டை வியாழக்கிழமை வீழ்த்தியது.
1 min
December 12, 2025
Dinamani Nagapattinam
அறமும் தமிழும் வளர...
தமிழர் வாழ்வியலில் மெய்யியல் கோட்பாடுகள் சிறப்பான இடம்பெறுகின்றன.
2 mins
December 12, 2025
Dinamani Nagapattinam
கான்வே, மிட்செல் ஹே அரை சதம்: நியூஸிலாந்து முன்னிலை
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 73 ரன்கள் முன்னிலை பெற்றது.
1 min
December 12, 2025
Dinamani Nagapattinam
தேவை மழைக்கால விடுமுறை
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை, கடந்த அக்டோபர் மூன்றாம் வாரத்தில் தொடங்கி பெரும்பாலான மாவட்டங்கள் மழைப் பொழிவைப் பெற்று வருகின்றன.
2 mins
December 12, 2025
Dinamani Nagapattinam
யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்
பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-19) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.
1 min
December 12, 2025
Dinamani Nagapattinam
இண்டிகோ செயல்பாடுகள் மேற்பார்வைக்கு 8 பேர் குழு: டிஜிசிஏ அமைப்பு
இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட கடுமையான குளறுபடிகளைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை மேற்பார்வை செய்யவும், கண்காணிக்கவும் 8 பேர் கொண்ட குழுவை விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) புதன்கிழமை அமைத்தது.
1 mins
December 11, 2025
Dinamani Nagapattinam
2-ஆவது வெற்றி முனைப்பில் இந்தியா
டி20: தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்
1 min
December 11, 2025
Listen
Translate
Change font size
