Prøve GULL - Gratis
உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி!
Dinamani Madurai
|October 25, 2025
உலக அளவில் ஒரு நாட்டின் பொருளாதார சக்கரச் சுழற்சியை இயங்கச் செய்வதிலும், நாட்டின் நிதிக் கட்டமைப்பின் வலிமையை நிர்ணயிப்பதிலும் அந்நாட்டிலுள்ள தங்கத்தின் கையிருப்புதான் முக்கியப் பங்காற்றுகிறது. எனவேதான், ஒரு நாடு பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் போதும், கடன் சுமை அதிகரிக்கும் போதும், தங்கத்தை விற்று நெருக்கடியைச் சமாளித்து வருகிறது. உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அடிக்கல்லாக, பாதுகாப்பு கவசமாக தங்கம் விளங்குகிறது.
அன்றைய துருக்கியின் பகுதியான லிடியாவில் குரோசஸ் மன்னரின் காலத்தில் (கி.மு.561) முதல்முதலில் தங்க நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, எல்லா சொத்துகளையும்விட உலகில் அதிகமாகப் பரிமாற்றம் செய்யப்படும் பொருளாகத் தங்கம் விளங்குகிறது. அமெரிக்காவின் பங்குச் சந்தைக்கு அடுத்தபடியாக மிக அதிகமான வர்த்தகம் தங்கத்துக்காக நடைபெறுகிறது. காரணம், தங்கம் வழங்கும் பாதுகாப்பை எந்த முதலீடும் வழங்குவது இல்லை.
லண்டனில் செயல்படும் உலக தங்க சபை (வேர்ல்ட் கோல்ட் கவுன்சில்) கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட பட்டியலின்படி, உலகில் அதிகம் தங்கம் வைத்திருக்கும் நாடுகளில், வழக்கம்போல் அமெரிக்கா தன் கையிருப்பில் 8,133 டன் தங்க கையிருப்புடன் முதலிடத்தில் உள்ளது. இத்தகைய பெரும் தங்க இருப்புதான், அதன் நாணயத்துக்கு (டாலர்) சர்வதேச சந்தையில் அதிக நம்பிக்கையை உருவாக்குகிறது.
இந்தப் பட்டியலில் அடுத்த ஏழு இடங்களில் முறையே ஜெர்மனி (3,351 டன்), இத்தாலி (2,451 டன்), பிரான்ஸ் (2,436 டன்), ரஷியா (2,333 டன்), சீனா (2,292 டன்), ஸ்விட்சர்லாந்து (1,040 டன்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா 880 டன் தங்கத்துடன் எட்டாவது இடத்தில் உள்ளது. இந்த தங்க கையிருப்பே, இந்தியாவின் அந்நிய செலாவணியைப் பாதுகாக்க உதவுகிறது. உலக தங்க சபையின் தரவுகளின்படி, உலகின் மொத்த தங்க தேவையில், இந்தியா 26 சதவீத பங்கு வகிக்கிறது.
திடீரென ஒரு நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைந்தால், தங்கத்தை விற்று அந்த நெருக்கடியைச் சமாளிக்கலாம். சந்திரசேகர் இந்திய பிரதமராக 10.11.1990 முதல் 21.06.1991 வரை 223 நாள்கள் மட்டுமே பதவி வகித்தார். இவரது ஆட்சிக் காலத்தில், 1991-ஆம் ஆண்டு மே மாதத்தில், நாட்டின் அந்நியச் செலாவணி நெருக்கடியை சமாளிக்கவும், வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களைச் செலுத்தவும், இறக்குமதியைக் கையாளவும், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (ஐஎம்எஃப்) கடன் பெறவும். 47 டன் தங்கம் பாங்க் ஆஃப் இங்கிலாந்திடமும், மீதமுள்ள 20 டன் தங்கம் பாங்க் ஆஃப் ஸ்விட்சர்லாந்திலும் அடமானம் வைக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்பட்டது.
Denne historien er fra October 25, 2025-utgaven av Dinamani Madurai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Madurai
Dinamani Madurai
'விஞ்ஞான ரத்னா' விருது: மறைந்த வானியற்பியலாளர் ஜெயந்த் நார்லிகர் தேர்வு
விஞ்ஞான் ஸ்ரீ, விஞ்ஞான் யுவ விருதுகளும் அறிவிப்பு
1 min
October 26, 2025
Dinamani Madurai
நல்லாசானாய் - வழிகாட்டியாய்!
பன்னூல் ஆசிரியர் எம்.ஆர்.எம். அப்துற் றஹீமை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். அவருடைய எழுத்துகள் இன்றைய தலைமுறைக்கும் புரியும்.
2 mins
October 26, 2025
Dinamani Madurai
அறம் கூறும் புறம்...!
அறம் எவ்வாறு உருவானது ...? மனிதர்கள் தோன்றிய போதே அவருடன் ஒட்டிப் பிறந்ததா அறம்? அன்று. வாழ்வியல் சூழல் களால், மனிதர்களின் மனத்தில் தோன்றிய உயர்வான சிந்தனையே அறம். இந்த சமூ கத்தை முன்னோக்கிச் செலுத்துகிற கால சக்கரம் அறம்.
1 mins
October 26, 2025
Dinamani Madurai
'சும்மா' என்ற சொல் சும்மாவா?
தமிழில் 'சும்மா' என்கிற சொல்லுக்கு பிரத்தியேக இடம், பொருள் இல்லையா? என்னும்படி பல பொருள்படும்படியாக பயன்படுகிறது. அமைதி, செயலற்ற நிலை, வீண், இலவசம், பொய், சதா காலம், எப்போதும், தற்செயலாக, மீண்டும் மீண்டும், எதுவுமின்றி, களைப்பாறுதல், விளையாட்டிற்காக, வினையேதுமின்றி எனப் பல பொருள் தருகிறது.
1 min
October 26, 2025
Dinamani Madurai
தடைக்குப் பின்னால்...
ஹைதராபாத்தில் குழந்தை மருத்துவராகப் பணி புரியும் மருத்துவர் சிவரஞ்சனியின் எட்டு ஆண்டு காலப் போராட்டம் காரணமாக, இந்திய உணவுப் பாதுகாப்பு தரநிலைகள் ஆணையம் 'போலி ஓ.ஆர்.எஸ்.' பானங்களை சந்தையில் விற்கத் தடைசெய்துள்ளது. காஜீபுரத்தில் தயாரிக்கப்பட்ட தரமில்லாத இருமல் மருந்து பல குழந்தைகளை உயிர்ப்பலி வாங்கியிருப்பதுதான் ஆணையத்தை இந்த நடவடிக்கை எடுக்க வைத்துள்ளது.
1 mins
October 26, 2025
Dinamani Madurai
எழுதிக் கொண்டே இருப்பேன்...
கம்பராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததற்காக, என்னை முன்னாள் முதல்வர் கருணாநிதியே வெகுவாகப் பாராட்டினார். முன்னாள் குடியரசுத் தலைவர்கள் சங்கர் தயாள் சர்மா, ஆர். வெங்கடராமன், முன்னாள் ஆளுநர் சி. சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் பாராட்டினர். அவசரநிலை பிரகடனத்தின்போது, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை இந்திரா காந்தி எவ்வாறு தலைகீழாக மாற்றி நாட்டை அடிமையாக்கினார் என்பதைப் பற்றிய ஒரு நூலை நான் எழுதினேன். அந்த நூலை 1992-இல் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் வெளியிட்டு, என்னைப் பாராட்டினார். அம்பேத்கர் பித்தனான நான், 'அம்பேத்கர் எவ்வாறு அரசியல் சாசனத்தை உருவாக்கினார்' என்பதைப் பற்றிய ஆங்கில நூலை எழுதினேன். அதை எல். கே. அத்வானி வெளியிட்டார். 98 வயதிலும் நான் பல்வேறு பழைய விஷயங்கள், உண்மைகள் குறித்து தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். முக்கியப் பொறுப்பில் இல்லாவிட்டாலும், நாட்டை வெகு விரைவில் வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிக்கு உறுதுணையாக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன்” என்கிறார் தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையின் முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே.
1 min
October 26, 2025
Dinamani Madurai
பாசப் பிணைப்புக்காக...
உடன்பிறந்தோரின் பாசப் பிணைப்பை உணர்த்தும் விதமாக, பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் கார்த்திகைப் பௌர்ணமியின்போது 'சாமா- சக்கேவா' (சாமா-சாம்பன்) விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. சமூக அக்கறையுடன் பாரம்பரியமிக்க கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் பண்டிகையாகும்.
1 min
October 26, 2025
Dinamani Madurai
'தாய் எனப்படுவோள் செவிலி ஆகும்'
தமிழ் அகப்பொருள் இலக்கியங்களில் தலைவன், தலைவியை அடுத்து சிறப்பிடம் பெறுபவர்கள் தோழியும், செவிலியுமேயாவர். தலைவியைத் தாய் பெற்றெடுத்தாலும் அவளை வளர்த்து ஆளாக்கும் பெரும் பொறுப்பு அக்காலத்தில் செவிலிக்கே உரியதாக இருந்தது. இவர்கள் செவிலி செவிலித் தாய் என்றே அழைக்கப்பட்டாள்.
2 mins
October 26, 2025
Dinamani Madurai
அசத்தும் ஆசிரியர்...
கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ஆ.மணிகண்டன், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனராகவும் இருந்து வருகிறார். தொல்லியல் ஆய்வு, கள ஆய்வுகளில் பல்வேறு கண்டுபிடிப்புகளில் சாதித்து வரும் அவரிடம் பேசியபோது:
1 min
October 26, 2025
Dinamani Madurai
ஏ.ஐ. தரும் வேலைத் தளர்ச்சி
'செயற்கை நுண்ணறிவு' எனப்படும் 'ஏ.ஐ.' எவ்வளவு வேகத்தில் அனைத்துத் துறைகளிலும் இப்போது ஊடுருவிவிட்டதோ, அதே வேகத்தில் அது தந்திருக்கும் புதிய வார்த்தையும் உலகெங்கும் இப்போது பரவி வருகிறது. அதுதான் 'ஒர்க் ஸ்லாப்' அல்லது 'ஏ.ஐ. ஸ்லாப்'. இதன் பொருள் ஏ.ஐ-யினால் வரும் வேலைத் தளர்ச்சி!
1 min
October 26, 2025
Listen
Translate
Change font size

