Prøve GULL - Gratis
ரூ.1,853 கோடியில் பரமக்குடி - ராமநாதபுரம் நான்கு வழிச் சாலைத் திட்டம்
Dinamani Madurai
|July 02, 2025
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நமது நிருபர் புது தில்லி, ஜூலை 1: தமிழகத்தின் பரமக்குடி-ராமநாதபுரம் இடையே 46.7 கி.மீ. தொலைவு தேசிய நெடுஞ்சாலை எண் 87-ஐ நான்கு வழிச் சாலையாக மாற்றும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.
அரசும், தனியாரும் இணைந்து நிதிப்பகிர்வு மேற்கொள்ள வகை செய்யும் ஹெச்ஏஎம் எனப்படும் ஹைபிரிட் அன்யுட்டி மாடல் அடிப்படையில் ரூ.1,853 கோடி மொத்த மூலதனத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இந்த மாடலின்படி இபிசி எனப்படும் பொறியியல், கொள்முதல், கட்டுமானம் மற்றும் பிஓடி எனப்படும் கட்டமைத்தல், இயக்குதல், பரிமாற்றம் ஆகிய பணிகளை அரசும் தனியாரும் கூட்டாக செயல்படுத்தும். அரசு நிதி வழங்குவதால் தனியார் எதிர்கொள்ளும் வணிக அபாயம் குறைகிறது. திட்டமும் விரைவாக முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது, மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி இடையிலான இரு வழி தேசிய நெடுஞ்சாலை (என்.எச். 87) போக்குவரத்துக்கான பயன்பாட்டில் உள்ளது. இதனுடன் தொடர்புடைய மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த நான்கு வழிச் சாலை அமைக்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் திட்டம் பரமக்குடி, சத்திரக்குடி, அச்சுந்தன்வயல், ராமநாதபுரம்போன்ற விரைவான வளர்ச்சி கண்டுவரும் நகர்ப்புறங்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுவதுடன், இந்தப் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு முக்கிய வழிபாட்டுத்தலங்களுக்கும் பொருளாதார மையங்களுக்கும் இடையிலான இணைப்பை வலுப்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி இடையே சுற்றுலாவை மேம்படுத்தவும் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை மேம்பாட்டுக்கான புதிய வாய்ப்புகளுக்கும் இத்திட்டம் உதவும். 8.4 லட்சம் நேரடி மனித வேலை நாள்களையும் 10.45 லட்சம் மறைமுக மனித வேலை நாள்களையும் இது உருவாக்கும்.
Denne historien er fra July 02, 2025-utgaven av Dinamani Madurai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Madurai
Dinamani Madurai
எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை
ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு இல்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min
May 09, 2026
Dinamani Madurai
'கடவுளின்' குழந்தைகளை அரவணைப்போம்!
குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து தலைமன்னார் வரையிலும், பின்னர் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலும் என சுமார் 58 கடல் மைல் தொலைவை தொடர் நீச்சல் முறையில் கடலில் நீந்தி 18 மணி 12 நிமிஷத்தில் கடந்திருக்கிறார்கள்.
2 mins
May 09, 2026
Dinamani Madurai
நெதர்லாந்து சொகுசுக் கப்பலில் 2 இந்தியர்களுக்கு ஹன்டா வைரஸ் தொற்று
நெதர்லாந்து எம். வி. ஹோண்டியஸ் சொகுசுக் கப்பலில் உள்ள 2 இந்திய மாலுமிகளுக்கு ஹன்டா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1 min
May 09, 2026
Dinamani Madurai
நஜ்முல், மோமினுல் பலம்: வங்கதேசம் நிதானம்
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில், முதல் நாளான வெள்ளிக்கிழமை முடிவில் வங்கதேசம் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்துள்ளது.
1 min
May 09, 2026
Dinamani Madurai
தீர்வ காணவேண்டிய போதை கலாசாரம்
அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை 17-ஆவது பொதுத் தேர்தல் பரப்புரையில் 'போதை கலாசாரம் மாநிலத்தில் வேகமாகப் பரவிவருகிறது' என்ற சமூகப் பிரச்னை அதிக அளவில் பேசப்பட்டது.
3 mins
May 09, 2026
Dinamani Madurai
புதுச்சேரி முதல்வராக என்.ரங்கசாமி மீண்டும் தேர்வு
புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக என்.
1 min
May 09, 2026
Dinamani Madurai
தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தன.
1 mins
May 09, 2026
Dinamani Madurai
புலம்பெயர்வு மேலாண்மையில் முழுமையான அணுகுமுறை கடைப்பிடிப்பு: ஐ.நா.வில் இந்தியா தகவல்
'புலம்பெயர்வு நிர்வாகத்தில் புலம்பெயர்வோரின் நலன், பாதுகாப்பு, அதிகாரமளித்தலை மையமாகக் கொண்ட ஒரு முழுமையான அணுகுமுறையை இந்தியா பின்பற்றி வருகிறது' என்று வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்தார்.
1 min
May 09, 2026
Dinamani Madurai
உலகக் கோப்பை வில்வித்தை: அரையிறுதியில் சிம்ரன்ஜீத், சஹில்
சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில், இந்தியாவின் சிம்ரன்ஜீத் கௌர், சஹில் ஜாதவ் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்துக்கான வாய்ப்பில் நிலைக்கின்றனர்.
1 min
May 09, 2026
Dinamani Madurai
பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.20% தேர்ச்சி
பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.20 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1 mins
May 09, 2026
Translate
Change font size
