Prøve GULL - Gratis
முருக பக்தர்கள் மாநாடு: வாகனப் போக்குவரத்து மாற்றம்
Dinamani Madurai
|June 22, 2025
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு உள்ளூர், வெளியூர்களிலிருந்து வரும் வாகனங்களுக்கு வழித்தடம் அறிவிக்கப்பட்டது.
-
மதுரை, ஜூன் 21:
இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையரக அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை வண்டியூர் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதை யடுத்து, மாநாட்டுக்கு வரும் பொதுமக்கள், முருக பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பேருந்துகள் செல்ல வேண்டிய வழித்தடம்: ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களுக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் அனைத்துப் பேருந்துகளும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை சந்திப்பு, பாண்டிகோவில் சந்திப்பு, பி.சி. பெருங்காயம் சந்திப்பு, கருப்பாயூரணி, ஒத்த வீடு, ஆண்டார்கொட்டாரம், சக்கிமங்கலம், சிலைமான் வழியாக விரகனூர் சுற்றுச் சாலை சந்திப்பு சென்று, தொடர்ந்து மண்டேலா நகர் சந்திப்பு வழியாக செல்லலாம்.
இதே போன்று, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களிலிருந்து மதுரைக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் விரகனூர் சந்திப்பிலிருந்து மாற்றுப் பாதையாக புதிய தென்கரை சாலை, குருவிக்காரன் சாலை பாலம் சந்திப்பு, அரவிந்த் கண் மருத்துவமனை சந்திப்பு, ஆவின் சந்திப்பு, கே.கே. நகர் சந்திப்பு, தினசரி காய்கறிச் சந்தை சந்திப்பு வழியாக மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்துக்கு செல்லலாம்.
சரக்கு வாகனங்களுக்கான போக்குவரத்து வழித்தடம்: மேலூர் சாலையிலிருந்து வரும் அனைத்து சரக்கு வாகனங்களும் மேலூர் நான்கு வழிச்சாலை சந்திப்பிலிருந்து பூவந்தி, திருப்புவனம் வழியாக விரகனூர் சந்திப்பை அடைந்து சிந்தாமணி சாலை சந்திப்பு, மண்டேலா நகர் சந்திப்பு வழியாக தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும்.
Denne historien er fra June 22, 2025-utgaven av Dinamani Madurai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Madurai
Dinamani Madurai
நாக் அவுட்டில் கேப் வர்டே: வரலாறு படைத்தது
பலம் வாய்ந்த சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கேப் வர்டே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.
1 mins
June 28, 2026
Dinamani Madurai
பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் பாகிஸ்தானை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.
1 min
June 28, 2026
Dinamani Madurai
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
2 mins
June 28, 2026
Dinamani Madurai
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Madurai
ராமர் கோயில் நன்கொடை விவகாரம்; அறக்கட்டளை பொதுச் செயலர், அறங்காவலர் ராஜினாமா
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரத்துக்கு தார்மிகப் பொறுப்பேற்று ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலர் சம்பத் ராய், அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகிய இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததாக அந்த அறக்கட்டளை சனிக்கிழமை தெரிவித்தது.
1 min
June 28, 2026
Dinamani Madurai
பொது இடங்களில் ஜாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கான இடைக்காலத் தடை நீட்டிப்பு
பொது இடங்களில் ஜாதி பெயர்களை நீக்குவது தொடர் பாக வெளியிடப்பட்ட அரசா ணைக்கு தடை விதிக்கக் கோரிய வழக் கில், அரசாணையின் செயலாக்கத் துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min
June 28, 2026
Dinamani Madurai
கோலி முல்ஸெராவின் தவறால் வெளியேறியது உருகுவே
நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின்
1 min
June 28, 2026
Dinamani Madurai
அமெரிக்கா-ஈரான் மீண்டும் மோதல்
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் தாக்கப்பட்ட விவகாரத்தால் பதற்றம்
1 min
June 28, 2026
Dinamani Madurai
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Madurai
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Translate
Change font size
