Prøve GULL - Gratis
நாடு இன மாடுகளைக் காப்போம்!
Dinamani Karur
|September 30, 2025
வேளாண் தொழில் பிரதானமாக இருந்தபோது பால், இயற்கை உரத்துக்காக பசு மற்றும் காளை மாடுகளை வளர்த்தனர். வேளாண் தொழில் செய்யும் பெரும்பாலானோரின் வீடுகளில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பசு மாடுகள் இருந்தன. வேளாண் தொழிலில் ஈடுபடாதவர்கள் அதாவது, நிலமில்லாதவர்கள் கூட நாட்டு இன மாடுகளை வளர்த்து வந்தனர். காலப்போக்கில் வேளாண் தொழிலின் மீதான ஆர்வம் குறைந்து அதிலிருந்து விலகுவோர் எண்ணிக்கை அதிகரித்ததாலும், ரசாயன உரங்கள், இயந்திரங்களின் வருகையாலும் வேளாண் தொழிலின் மீதான ஈடுபாடு குறையத் தொடங்கியது.
வேளாண்மைக்கு அடுத்து துணைத் தொழிலாக இருந்த கால்நடை வளர்ப்போர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இதன்மூலம் கிடைக்கும் வருமானமே பிரதானம் என்ற நிலையில், தரமானதாக இருந்தாலும் குறைந்த அளவில் பால் உற்பத்தி செய்யும் உள்நாட்டு கறவை மாடுகளின் மீதான ஆர்வம் குறையத் தொடங்கியது.
இதையடுத்து, உள்நாட்டு கால்நடை இனங்களின் வீழ்ச்சி தொடங்கியது. கடந்த 2019-இல் நடைபெற்ற 20-ஆவது தேசிய கால்நடைகள் எண்ணிக்கை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் கவலை அளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் உள்நாட்டு இன மாடுகளின் எண்ணிக்கை ஒரு லட்சம் என்ற அளவில் குறைந்துள்ளது.
2012-இல் 24.59 லட்சம் என்ற அளவில் இருந்த உள்நாட்டு இன மாடுகள் 2018-இல் 18 லட்சம் என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. அதாவது, தமிழகத்தில் இக்காலகட்டத்தில் 6.65 லட்சம் உள்நாட்டு இன மாடுகள் குறைந்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
எருமை மாடுகளின் எண்ணிக்கையும் 6.6 லட்சத்திலிருந்து 5.18 லட்சமாகக் குறைந்துள்ளது. அதேவேளையில், இக்காலகட்டத்தில் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு இன மாடுகளின் எண்ணிக்கை 13.21 லட்சம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.
Denne historien er fra September 30, 2025-utgaven av Dinamani Karur.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Karur
Dinamani Karur
சைக்கிள் ஓட்டுவோம்..!
குறைந்த தூரத்துக்குச் சென்று வருவதில் சிறந்த, எளிமையான போக்குவரத்துச் சாதனம்தான் 'மிதிவண்டிகள்' என்று அழைக்கப்படும் 'சைக்கிள்கள்'.
2 mins
May 31, 2026
Dinamani Karur
நம்பிக்கை நட்சத்திரம்
உள்ளரங்க விளையாட்டுகளில் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி ஆடுவதில் முதன்மை பெற்று விளங்குகிறது செஸ் (சதுரங்கம்). இதில் வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார் மதுரையைச் சேர்ந்த சிறுமி ஆரண்யா.
1 min
May 31, 2026
Dinamani Karur
இயக்குநர்களின் லைன் அப்!
லோ கேஷ் கனகராஜ், பா. ரஞ்சித், எஸ். ஜே. சூர்யா ஆகிய இயக்குநர் களின் அடுத்தடுத்த லைன் அப்களை இங்கே பார்க்கலாம் ...
2 mins
May 31, 2026
Dinamani Karur
வானொலியில் புரட்சி
\"ஒலிபரப்புப் பின்னணியுள்ள எனக்கு விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\" என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வானொலி ஒலிபரப்பாளர் ஆர். ஸ்ரீதர்.
1 mins
May 31, 2026
Dinamani Karur
வியக்க வைக்கும் பள்ளி
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை வசதிகள் அறவே இல்லாத பள்ளி, மாணவர்கள் இல்லாத வகுப்பறைகள், கழிவறைக்குக்கூட வெளியே சென்றுவந்த ஆசிரியர்கள், தேர்ச்சி விழுக்காடு குறைவு, மாணவ - மாணவியரை தேடித் தேடிச் சேர்த்தது என்றிருந்த நிலைமை அறவே மாறிவிட்டது.
2 mins
May 31, 2026
Dinamani Karur
காலநிலை மாற்றத்துக்கு மாற்று!
உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.
2 mins
May 30, 2026
Dinamani Karur
அறம் உணர்த்துவதே கல்வி
ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.
3 mins
May 30, 2026
Dinamani Karur
பிகாரில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு; 4 பேர் மாயம்
பிகார் மாநிலத்தில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்த நிலையில், காணாமல் போன 4 பேரைத் தேடும் பணி நடைபெறுகிறது.
1 min
May 29, 2026
Dinamani Karur
பிஎஸ்என்எல் வருவாய் ரூ. 25,000 கோடியாக அதிகரிப்பு!
பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் வருவாய், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த 2 நிதியாண்டுகளில் சுமார் 19 சதவீதம் அதிகரித்து, ரூ.25,000 கோடியை எட்டியுள்ளது.
1 min
May 29, 2026
Dinamani Karur
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...
தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 29, 2026
Translate
Change font size

