Prøve GULL - Gratis
கூட்டம் : குழப்பம் : மரணம்
Dinamani Karaikal
|June 30, 2025
நாம் என்ற எண்ணம் இல்லாமல் தான், தனது என்று எண்ணி விட்டில் பூச்சி தீயில் விழுந்து மரணிப்பதுபோல தன்னுடைய அவசரக்குடுக்கைதனத்தால் கூட்டத்தில் சிக்கி வாழ்க்கையை சிலர் இழக்கிறார்கள். இதற்கு நிர்வாகக் கோளாறும், ஆட்சி செய்வோரின் அலட்சியமும், காவலர்களின் திறமையின்மையும் காரணங்கள்.
ஒருவர் விபத்தில் மரணிக்கலாம், கொலையுண்டு மரணிக்கலாம், விஷ ஜந்துக்கள் தீண்டி மரணிக்கலாம்-இவ்வாறு காரணங்கள் மாறுபட்டாலும் மரணம் என்பது வாழ்வில் தவிர்க்க முடியாத உண்மை. ஆனால், ஒரு கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கீழே தள்ளப்பட்டு, சிக்குண்டு, மிதிபட்டு, அடிபட்டு, மூச்சுத்திணறி மரணிப்பது எவ்வளவு கொடுமை.
மனிதனை எருமை மாட்டால் மிதிக்கவிட்டு கொல்வதை கருட புராணத்தில் இருந்து எடுத்து 'அந்நியன்' படத்தின் இயக்குநர் சங்கர் 'அண்டகூபம்' என்று விளக்குகிறார். நம்மை ஒருவர் இடித்தோ, மிதித்தோ செல்லும்போது எருமை மாடு என்று நாம் திட்டும் பழக்கம் கருட புராணத்தின் நீட்சிதானோ என்னவோ...'கோழி மிதித்து குஞ்சு சாகாது' என்ற பழமொழி கூட்டத்தில் மிதிபட்டு சாகும் மனிதனுக்குப் பொருந்தாது!
இதுபோன்ற மரணங்களின் இடங்கள் மாறுபட்டாலும், அவற்றுக்கான அடிப்படை காரணங்கள் ஒன்றே ஒன்றுதான். இதுபோன்ற நிகழ்வுகள் உலகம் முழுவதும் காலம்காலமாய் கேளிக்கை இடங்களில் மட்டுமல்ல, பொது இடங்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன.
பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பணக்கார இஸ்லாமிய பெரியவர் திண்டுக்கலில் பக்ரீத்தின்போது ஏழைகளுக்கு உணவும், உடையும் வழங்க முற்பட்டார். அங்கு கூடிய கூட்ட நெரிசலில் சிக்கி சில ஆண்களும், பெண்களும் இறந்தனர். நல்லது செய்ய நினைத்து சோகத்தில் முடிந்த அந்த நிகழ்வு குறித்து அந்தப் பெரியவர் கண்ணீர் பேட்டி அளித்தார்.
கடந்த 1990-இல் மெக்கா சுரங்கப்பாதையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் 1,426 பேர் உயிரிழந்தனர். 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி ஹஜ் பயணத்தின்போது மதினா கூட்ட நெரிசலில் சுமார் 2,000 பேர் உயிரிழந்தனர்.
இதுபோன்ற நெரிசலால் ஏற்படும் உயிரிழப்புகள் ஹிந்து மத புனிதத் தலங்களிலும் தொடர்கின்றன. இதில் இருந்து யாரும் பாடம் படித்ததாகத் தெரியவில்லை. 30.9.2008-இல் நவராத்திரி முதல் நாள் அன்று ஜோத்பூர் சாமுண்டா தேவி கோயில் கூட்ட நெரிசலில் 224 பேர் உயிரிழந்தனர்; 475 பேர் காயமடைந்தனர்.
Denne historien er fra June 30, 2025-utgaven av Dinamani Karaikal.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Karaikal
Dinamani Karaikal
ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Karaikal
ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை உச்சநீதிமன்றம்
ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை; ஒருவர் ஹிந்துவாக இருப்பதற்கு கோயிலுக்கு செல்வதோ அல்லது சடங்குகளைச் செய்வதோ கட்டாயமல்ல; வீட்டில் ஒரு விளக்கை ஏற்றுவதுகூட தனது நம்பிக்கையை நிரூபிக்க போதுமானது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
1 min
May 14, 2026
Dinamani Karaikal
வையகம் துயர் தீர்கவே...
மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.
3 mins
May 14, 2026
Dinamani Karaikal
வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.
2 mins
May 14, 2026
Dinamani Karaikal
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5,360 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.
1 min
May 14, 2026
Dinamani Karaikal
இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Karaikal
ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?
தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
1 min
May 14, 2026
Dinamani Karaikal
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு
2 mins
May 13, 2026
Dinamani Karaikal
முஸ்லிம் லீக், காங்கிரஸ் தலைவர்கள், திருமாவளவனுடன் முதல்வர் விஜய் சந்திப்பு
சி.வி.சண்முகம்-எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்களையும் சந்தித்தார்
1 mins
May 13, 2026
Dinamani Karaikal
தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு
சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.
1 min
May 13, 2026
Translate
Change font size
