Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயரும் இந்தியா

Dinamani Erode & Ooty

|

November 27, 2025

குடியரசுத் தலைவர் பெருமிதம்

'உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் பயணத்தில் வேகமாக முன்னேறுகிறது இந்தியா; இது, நமது நாடாளுமன்ற அமைப்பு முறையின் வெற்றிக்கு உறுதியான சான்று' என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

'மிகப் பெரிய ஜனநாயகமான இந்தியாவின் லட்சியங்களைப் பறைசாற்றும் நாடாளுமன்றம், உலகின் பல்வேறு ஜனநாயக நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது' என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

கடந்த 1949-ஆம் ஆண்டில் அரசியல் நிர்ணய சபையால் அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட நவ. 26-ஆம் தேதி அரசமைப்புச் சட்ட தினமாக கடந்த 2015-இல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு அரசமைப்புச் சட்ட தினத்தையொட்டி, பழைய நாடாளுமன்றத்தின் (சம்விதான் சதன்) வரலாற்றுச் சிறப்புமிக்க மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, இரு அவைகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தேசத்தின் அடையாளம்: விழாவில் குடியரசுத் தலைவர் பேசியதாவது: நமது அரசமைப்புச் சட்டம், நாட்டின் பெருமைக்குரிய ஆவணம்; தேசத்தின் அடையாளம். காலனித்துவ மனநிலையைப் புறந்தள்ளி, தேசியவாத கண்ணோட்டத்துடன் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வழிகாட்டும் ஆவணமாகும்.

இந்தியாவில் நாடாளுமன்ற அமைப்புமுறையை ஏற்பதற்கு ஆதரவாக அரசியல் நிர்ணய சபையில் முன்வைக்கப்பட்ட வலுவான வாதங்கள் இன்றளவும் பொருத்தமானவை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதுடன், ஆழமான அரசியல் சிந்தனைக்கு ஆக்கபூர்வ மரபையும் வளர்த்தெடுத்துள்ளனர். எதிர்கால ஒப்பீட்டு ஆய்வுகளின்போது, இந்திய ஜனநாயகமும் அரசமைப்புச் சட்டமும் பொன்னெழுத்துகளால் விவரிக்கப்படும். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுப்பதை நோக்கி இந்தியா வேகமாக பயணிப்பது, நமது நாடாளுமன்ற அமைப்புமுறையின் வெற்றிக்கு வலுவான சான்றாகும்.

FLERE HISTORIER FRA Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

பள்ளிகளில் ஒளிபரப்பாகிறது ‘காக்கா முட்டை’ திரைப்படம்

அரசுப் பள்ளிகளில் ‘காக்கா முட்டை' திரைப்படத்தைத் திரையிட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

time to read

1 min

November 27, 2025

Dinamani Erode & Ooty

தமிழக மக்களுக்காக எதையும் செய்யத் தயார்

தமிழக மக்களுக்காக எதையும் செய்யத் தயார் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.

time to read

1 min

November 27, 2025

Dinamani Erode & Ooty

21,333 கட்டுமான தொழிலாளர்களுக்கு பயிற்சி

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 21,333 தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

November 27, 2025

Dinamani Erode & Ooty

அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் போட்டிகள்

அதிகாரபூர்வமாக அறிவிப்பு

time to read

1 min

November 27, 2025

Dinamani Erode & Ooty

தக்காளி கிலோ ரூ.110, முருங்கைக்காய் ரூ.400

சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ள நிலையில், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.

time to read

1 min

November 27, 2025

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

நாளை தொடங்குகிறது எஃப்ஐஎச் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை

சென்னை, நவ. 26: எஃப்ஐஎச் ஆட வர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி சென்னை, மதுரையில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

time to read

1 min

November 27, 2025

Dinamani Erode & Ooty

மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயரும் இந்தியா

குடியரசுத் தலைவர் பெருமிதம்

time to read

2 mins

November 27, 2025

Dinamani Erode & Ooty

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

November 27, 2025

Dinamani Erode & Ooty

மாநில உரிமைப் போராட்டத்தால் திமுக தொடர் வெற்றி

மக்கள் மீதான உண்மையான அக்கறையும், மாநில உரிமைக்கான போராட்டமும்தான் திமுகவுக்கு தொடர் வெற்றியை அளித்து வருகின்றன என்று முதல்வர் மு.

time to read

1 mins

November 27, 2025

Dinamani Erode & Ooty

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்; விஜய்யுடன் செங்கோட்டையன் சந்திப்பு

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.

time to read

1 min

November 27, 2025

Listen

Translate

Share

-
+

Change font size