Facebook Pixel தங்கமே... தங்கம்... | Dinamani Erode & Ooty - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

தங்கமே... தங்கம்...

Dinamani Erode & Ooty

|

July 29, 2025

அரிசி விலை ஏறுகிறதே என்று யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை; தினமும் தங்கத்தின் விலையைக் கவலையுடன் கவனிக்கிறார்கள். விலை குறைந்தாலும் கூட்டம்; ஏறினாலும் கூட்டம்; நகைக் கடைகளில் நிரம்பி வழியும் கூட்டம் நம் மக்களின் செல்வச் செழிப்பைக் காட்டுகிறதா?

- வெ.இன்சுவை

தனியார் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து தங்கம் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தங்கத்தை விரும்பும் பெண்கள் மற்றும் தங்க நகைகளை விரும்பாத இளம் பெண்கள்; மனைவியின் தங்க ஆசை, சேமிப்பு மற்றும் திணறும் கணவர்கள்; திருமணங்கள் தங்கத்தால் நிச்சயிக்கப்படுகின்றனவா என்ற கேள்வி - தங்கம் குறித்து நிறைய பேச வைக்கிறது. பெண்களுக்கு தங்கத்தின் மீது உள்ள மோகம் அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை.

இளம் வயது பெண்களுக்கு தங்கத்தின் மீது அவ்வளவாக நாட்டம் இல்லையென்றாலும் கூட, அவர்களின் பெற்றோர் தங்களின் கௌரவத்தையும், செல்வச் செழிப்பையும் ஊருக்குக் காட்ட வேண்டி கிலோ கணக்கில் நகை போட்டு மற்றவர்களின் மனதில் பேராசையைத் தூண்டி விடுகின்றனர்.

இந்த நிலையில், ஏழை, நடுத்தரக் குடும்பத்துப் பெண்களின் திருமணம் எப்படி சாத்தியம்? பெண் குழந்தை இந்த மண்ணைத் தொட்ட நாளில் இருந்து தங்கத்தின் சேமிப்பைத் தொடங்கி விடுகிறாள் தாய். அந்தப் பெண்ணுக்குத் திருமண வயது வருவதற்குள் கணிசமான அளவு நகை வாங்கிவிட வேண்டும் என்பதே அவரின் விருப்பம். தன் பெண்ணின் படிப்பு, அழகு, ஆளுமைத் திறன், வேலை, நற்பண்புகள் இவையெல்லாம் சிறப்பாக இருந்தாலும் தங்கத்தின் அளவைக் குறைத்துக்கொள்ள முடியாது. இது எங்கே போய் முடியப் போகுதோ? தெரியவில்லை.

ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெண் சொல்கிறார், நான் எங்கள் உறவுக்காரர்களின் எந்த விசேஷத்துக்குப் போனாலும், என் அண்ணி என்ன அணிந்து வந்திருக்கிறார் என்றுதான் பார்ப்பேன். மறுநாளே அதைப்போல் வாங்கிவிடுவேன். இன்னொரு பெண், கழுத்து நிறைய நகை அணிந்து சென்றால்தான் எல்லோரும் நம்மை மதிப்பார்கள்; நகை மீது எனக்கு அதிக ஆசை என்றார். மற்றொருவர், நான் எப்போதும் என் பழைய மாடல் நகைகளைக் கொடுத்துவிட்டு புதிய டிசைனில் வாங்குவேன். என்னிடம் இருப்பதுபோல், வேறு யாராவது வைத்திருந்தால், எனக்குப் பிடிக்காது; உடனே மாற்றி விடுவேன் என்றார்.

அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அத்தனை பெண்களும், தங்களால் எவ்வளவு நகைகளை அணிய முடியுமோ, அவ்வளவு நகைகளை அணிந்துகொண்டு வந்திருந்தார்கள். நிகழ்ச்சியின் இடைவேளையின்போது வேறு நகைகளைப் பூட்டிக் கொண்டவர்களும் உண்டு.

FLERE HISTORIER FRA Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்

இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Erode & Ooty

'இண்டி' கூட்டணியில் திமுகவுக்கு பதில் தவெக

'இண்டி' கூட்டணிக்கு திமுகவுக்கு பதிலாக தவெக என்ற புதிய நட்புக் கட்சி கிடைத்துள்ளது என்று சிவசேனை (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்தார்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Erode & Ooty

436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Erode & Ooty

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம், பஞ்சாப் மாநிலம், முலான்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Erode & Ooty

சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு

தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) திறக்கிறது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Erode & Ooty

யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Erode & Ooty

17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை

தமிழகத்தில் சனிக்கிழமை (ஜூன் 6) கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான 'ஆரஞ்சு' எச்சரிக்கையும், மதுரை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

June 06, 2026

Dinamani Erode & Ooty

தேர்ச்சியை அதிகரிக்க செயல் திட்டம் வகுக்கும் கல்வித் துறை

பிளஸ் 2 பொதுத் தேர்வு

time to read

1 min

June 06, 2026

Dinamani Erode & Ooty

சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ் ஐபிஓ: 127 மடங்கு முன்பதிவுடன் அமோக வரவேற்பு

உலோக மறுசுழற்சி நிறுவனமான 'சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Erode & Ooty

இந்தியாவுக்கு சுகோய் எஸ்யு-57 போர் விமானங்களை வழங்கத் தயார்

ரஷிய அதிபர் புதின்

time to read

1 min

June 06, 2026

Translate

Share

-
+

Change font size