Prøve GULL - Gratis
பிகார் தோல்வி: கூடுதல் அழுத்தத்தில் காங்கிரஸ் மேலிடம்!
Dinamani Dindigul & Theni
|November 22, 2025
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்கொண்ட மோசமான தோல்வியிலிருந்து காங்கிரஸ் கட்சி இன்னும் மீளாத நிலையில், அடுத்த ஆண்டு மாநிலங்களவைத் தேர்தல்களை எதிர்கொள்ளும் சில மாநிலங்களில் கடுமையான போட்டியைச் சந்திக்கும் கட்டாயத்துக்கு அக்கட்சி தள்ளப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே பல்வேறு மாநிலங்களில் நடந்த பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பறிகொடுத்த தொகுதிகளின் எண்ணிக்கை அதிகம். ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் இழந்துவரும் சட்டப்பேரவை இடங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், பிகாரிலும் தோல்வி முகத்தைச் சந்தித்துள்ள காங்கிரஸின் மாநிலங்களவை பலம் மேலும் குறைந்து அந்தக் கட்சி வலுவிழந்து வருவது தரவுகளின் பகுப்பாய்வு மூலம் தெளிவாகிறது.
அடுத்த ஆண்டு ஏப்ரல், ஜூன், நவம்பர் ஆகிய காலகட்டங்களில் மாநிலங்களவையில் கிட்டத்தட்ட 75 இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அவற்றில் மாநிலத் தேர்தல்களில் இடங்களைப் பறிகொடுத்தது மற்றும் கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை பலம் சுருங்கியதுபோன்ற காரணங்களால் சிக்கலான கட்டத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டிருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, பிகார், கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பதவிக் காலத்தை நிறைவு செய்யும் உறுப்பினர்களின் இடங்களை நிரப்புவதற்கான மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இவற்றுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.
Denne historien er fra November 22, 2025-utgaven av Dinamani Dindigul & Theni.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
மின் கம்பி அறுந்து விழுந்து தம்பதி உள்பட மூவர் உயிரிழப்பு
சிதம்பரம், நவ. 23: கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் தம்பதி உள்பட 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.
1 min
November 24, 2025
Dinamani Dindigul & Theni
அதிகாரமே குறிக்கோள்!
ஆரியர்கள், திராவிடர்கள் என்று திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு தமிழ் தேசியவாதிகளும் தமிழர், தெலுங்கர் என்று பிரிவினை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை சமூகவலைதளங்கள் தருகின்றன. அதை தங்கள் கருத்தைப் பதிவு செய்வதாகச் சொல்லிக்கொண்டு அடுத்தவரை வசைபாடுவதையும் குற்றம் சுமத்துவதையும் அன்றாடம் செய்து வருகின்றனர்.
2 mins
November 24, 2025
Dinamani Dindigul & Theni
மாநில நீச்சல்: எஸ்டிஏடி சென்னை ஒட்டுமொத்த சாம்பியன்
சென்னை, நவ. 23: தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற எஸ் டிஏடி சென்னை அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென் றது.
1 min
November 24, 2025
Dinamani Dindigul & Theni
தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடர்: இந்திய கேப்டன் கே.எல்.ராகுல்
புது தில்லி, நவ. 23: தென்னாப் பிரிக்காவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோத வுள்ள இந்திய அணி 15 பேரு டன் ஞாயிற்றுக்கிழமை அறிவிக் கப்பட்டது.
1 min
November 24, 2025
Dinamani Dindigul & Theni
பெண்கள் பாதுகாப்பில் முன்னுரிமை
கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் குற்ற நிகழ்வுகள் உலகளவில் மூன்று பெண்களில் ஒருவருக்கு அவரது வாழ்நாளில் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவ்வாறான குற்றங்களில் பலவும் பதிவு செய்யப்படுவதில்லை.
2 mins
November 24, 2025
Dinamani Dindigul & Theni
காயத்தான்-வாகனத்தான்-அழியான்
தமிழின் இன்சுவை, இம்மொழியில் பாடப்பட்ட கவிதைகளின் அருமையான சொற்பிரயோகங்களில் இருந்து விரிந்து தெரியும். சிற்றிலக்கியங்களில் இவற்றைப் படித்து இன்புறலாம். பலவிதமான கவிதை வடிவங்களைக் கொண்டு இயற்றப்படுவன சிற்றிலக்கியங்கள்.
1 min
November 23, 2025
Dinamani Dindigul & Theni
தந்தைக்கு மகள்கள் அளித்த பரிசு...
ஏழு பெண்களை வளர்த்து, அவர்களைப் படிக்க வைத்து தன்னிறைவு பெற்ற மகள்களாக மாற்றியுள்ளார் கமல் சிங். அவரது ஏழு பெண்களும் காவல்துறையில் பல பிரிவுகளில் பணிபுரிவது சிறப்பு. இவர்கள் தங்கள் திறமையை நிரூபித்து பெற்றோரை மட்டுமல்ல; பீகார் மாநிலத்தையும் பெருமைப்படுத்தியுள்ளனர். தந்தையின் கனவை நனவாக்கிய மகள்களுக்கு வாழ்த்துகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
1 mins
November 23, 2025
Dinamani Dindigul & Theni
140 பட்டங்கள்...
இடைவிடாமல் 1981-ஆம் ஆண்டு முதல் படித்து வரும் பேராசிரியர் வி.என். பார்த்திபன், இதுவரை 140 பட்டங்களைப் பெற்றுள்ளார். வடசென்னையைச் சேர்ந்த இவர், முதல் பட்டம் பெறும்போது நல்ல மதிப்பெண்களுடன் தேற முடியவில்லை.
1 min
November 23, 2025
Dinamani Dindigul & Theni
ஏழையின் நடனத்தில் இறைவனைக் காணலாம்!
ஆரம்பத்தில் தயங்கித் தயங்கி என்னிடம் சேர்ந்த ஏழைப் பிள்ளைகள் நடனத்தில் சிறந்து விளங்கி மேடையில் தங்களது திறமையை வெளிப்படுத்தும் போது எனக்கு ஆனந்தக் கண்ணீர் வரும். இப்படி என்னை அழ வைத்த பிள்ளைகள் ஏராளம். 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்' என்று சொல்வார்கள். இப்படிப்பட்ட கலையை அவர்கள் வெளிப்படுத்தும் போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதற்குத் தான் இந்தப் பிறவி எடுத்தோம் என்று தோன்றும்\" என்கிறார் பார்வதி ரவி கண்டசாலா.
2 mins
November 23, 2025
Dinamani Dindigul & Theni
நெஞ்சினிலே... நெஞ்சினிலே...
சென்னை வடபழனியின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்து, ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தைப் பிடித்திருந்தது ஏவி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம். இங்கு 2020-ஆம் ஆண்டில் திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்ட நிலையில், அந்தத் திரையரங்க வளாகம் இடிக்கப்பட்டு, புதிய கட்டுமானங்களுக்குத் தயாராகி வருகிறது.
2 mins
November 23, 2025
Listen
Translate
Change font size

