Prøve GULL - Gratis

நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!

Dinamani Dindigul & Theni

|

October 10, 2025

நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.

- அனந்த பத்மநாபன்

ஒரு தலைவர் பொது நிகழ்வுகளுக்குத் தாமதமாக வருவதைப் பார்க்கிறோம். அங்கே காத்திருக்கும் பொதுமக்கள், மாணவர்கள், ஊழியர்கள் எனப் பலரின் கூட்டு நேரத்தை இந்தச் சிறு தாமதம் வீணடிக்கிறது. இது வெறும் காலவிரயம் மட்டுமல்ல; 'என் நேரம்தான் முக்கியம்' என்ற ஒரு தவறான மனப்பான்மையின் வெளிப்பாடு. இது பொதுமக்களின் நம்பகத்தன்மைக்கும், சமூகம் மீதான மரியாதைக்கும் இழைக்கப்படும் பெரும் இழுக்கு.

நாம் செல்ல வேண்டிய பேருந்தோ, ரயிலோ அல்லது விமானமோ தாமதமாக வரும்போது, நாம் எவ்வளவு அசௌகரியத்தையும் விரக்தியையும் அடைகிறோம். நமது திட்டங்கள் தடைபடுகின்றன. அடுத்து, முக்கியமான வேலைகள் தள்ளிப் போகின்றன. இந்தத் தனிப்பட்ட உணர்வே, தாமதத்தின் வலி எவ்வளவு பெரியது என்பதை உணர்த்துகிறது. சமீபத்திய வணிக ஆய்வுகளின்படி, கூட்டங்களில் ஏற்படும் இந்தத் தாமதங்களால் மட்டும் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாகப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பணியாளரும் வாரத்துக்கு ஐந்து முறை, சராசரியாக ஐந்து நிமிஷங்கள் தாமதமாக வந்தாலும்கூட, அது ஆண்டுக்கு 20 மணிநேரத்துக்கும் அதிகமான உற்பத்தித் திறனை வீணடிக்கிறது. இது ஒட்டுமொத்த பணி ஆற்றல் மற்றும் செயல்முறைகளின் மீதான சீர்குலைவு ஆகும். மறைமுகச் செலவுகளையும் கணக்கில் கொண்டால், உண்மையான இழப்பு இதை விட மிக அதிகம். கால அட்டவணையின் மீதான அலட்சியப் போக்கின் ஆழமான விளைவு இது.

FLERE HISTORIER FRA Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

சிறப்பு விசாரணைக் குழு ஏன்?

கரூர் சம்பவத்தில் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

time to read

1 mins

October 11, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகள் பலியிடத் தடை

உயர்நீதிமன்றம் உத்தரவு

time to read

1 mins

October 11, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

நிகழாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சியான வென்டே வெனிசுலாவின் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு (58) அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

October 11, 2025

Dinamani Dindigul & Theni

நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!

நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.

time to read

2 mins

October 10, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

பள்ளிகொண்டா ரங்கநாதர்!

தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.

time to read

1 mins

October 10, 2025

Dinamani Dindigul & Theni

பாராகிளைடர் தாக்குதல்: மியான்மர் ராணுவம் ஒப்புதல்

மியான்மரில் பௌத்த திருவிழாவின்போது பாராகிளைடர் மூலம் தாக்குதல் நடத்தியதை மியான்மர் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.

time to read

1 min

October 10, 2025

Dinamani Dindigul & Theni

மதுரையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்

மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

time to read

1 min

October 10, 2025

Dinamani Dindigul & Theni

சபலென்கா, கெளஃபி வெற்றி

சீனாவில் நடைபெறும் வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலராஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

time to read

1 min

October 09, 2025

Dinamani Dindigul & Theni

இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் வியாழக்கிழமை (அக். 9) மோதுகிறது.

time to read

1 min

October 09, 2025

Dinamani Dindigul & Theni

யுஜிசி நெட் தேர்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

நிகழாண்டுக்கான இரண்டாம் கட்ட யுஜிசி நெட் தேர்வு டிசம்பரில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் தொடங்கியுள்ளது.

time to read

1 min

October 09, 2025

Translate

Share

-
+

Change font size