Prøve GULL - Gratis
முல்லைப் பெரியாறு: 142 அடிக்கு தண்ணீர் தேக்குவதில் தொடரும் சிக்கல்
Dinamani Dindigul & Theni
|June 28, 2025
கேரளம், முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை இயல்பாக உள்ளபோதிலும், ரூல் கர்வ் விதியைக் கடைப்பிடித்து அணையிலிருந்து உபரிநீரை வெளியேற்ற கேரளம் முனைப்பு காட்டி வருவதால், அணையில் 142 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்குவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தேனி, ஜூன் 27:
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கவும், சிற்றணையைப் பலப்படுத்தி அணையின் முழு உயரமான 152 அடி வரை தண்ணீரைத் தேக்கிக் கொள்ளவும் கடந்த 2014, மே 7-இல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 2014, நவ. 21, கடந்த 2015, டிச. 7, கடந்த 2018, ஆக. 16 ஆகிய தேதிகளில் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 2018-இல் கேரளத்தில் பலத்த மழையால் வெள்ளச் சேதம் ஏற்பட்டது. அப்போது, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து முன்னறிவிப்பின்றி 13 கதவணைகள் வழியாக கேரளப் பகுதியில் தண்ணீர் திறந்துவிட்டது தான் வெள்ளச் சேதத்துக்கு காரணம் என்று கேரளம் சர்ச்சையை எழுப்பியது.
நீதிமன்றத்தில் கேரளம் முறையீடு: இதனால், முல்லைப் பெரியாறு அணையின் அதிகபட்ச நீர்மட்டம் 142 அடி என்பதை மறுவரையறை செய்ய வேண்டும் என கடந்த 2019-இல் உச்சநீதிமன்றத்தில் கேரளம் முறையிட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அணையின் செயல் திறன், கருவிகளின் கண்காணிப்பு, 'ரூல் கர்வ்' என்ற விதி வளைவை இறுதி செய்தல், கதவணை இயக்க அட்டவணையைச் சரிசெய்தல் ஆகியவை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அணை கண்காணிப்புக் குழுவுக்கு உத்தரவிட்டது.
'ரூல் கர்வ்' நீர்த்தேக்க அட்டவணை
Denne historien er fra June 28, 2025-utgaven av Dinamani Dindigul & Theni.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
படிக வளர்ப்பில் முடிசூடிய அறிஞர்!
'கிரிஸ்டல்' என்றால் உப்பு என்கின்றனர். ஆனால், முப்பரிமாண அடுக்கில் ஒழுங்கான குறுக்கு, நெடுக்கு வரிசையில் அணுக்கள் அல்லது அயனிகள் அமைந்திருக்கும் எந்தவொரு தனிமமோ, சேர்மமோ 'கிரிஸ்டல்' என்று அழைக்கப்படும்.
1 min
May 17, 2026
Dinamani Dindigul & Theni
இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.
1 min
May 17, 2026
Dinamani Dindigul & Theni
எலும்பு உறுதி பெற...
“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன. இதை நாம் அதிகம் குடித்தால் எலும்புகளிலுள்ள கால்சியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் வலுவிழக்கும்.
2 mins
May 17, 2026
Dinamani Dindigul & Theni
வெள்ளைக் குள்ளன்
இயற்கையின் படைப்புகளானது அழகும், அற்புதமும், பேரதிசயமும், ஆச்சரியமும் புதிரும் நிறைந்தவை. இவை மனிதர்களின் கல்வி, கேள்வி ஞானத்துக்கு அப்பாற்பட்டு அதற்கென்று தகவமைத்துக் கொண்ட விதியில் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத பெருங்கால கோட்பாட்டைக் கொண்டிருக்கிறது.
2 mins
May 17, 2026
Dinamani Dindigul & Theni
தனித்துவ அடையாள அட்டை பெறாத 7.54 லட்சம் விவசாயிகள்!
இருபது மாதங்களுக்கும் மேலாக கால அவகாசம் வழங்கியும்கூட தமிழகத்தில் சுமார் 7.54 லட்சம் விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்கு முன்வரவில்லை.
2 mins
May 17, 2026
Dinamani Dindigul & Theni
உயர்ந்தவற்றுள் உயர்ந்தது
செய்யுளைப் பொருளாலும், சொல்லாலும் அழகுபடுத்துவதே அணி.
2 mins
May 17, 2026
Dinamani Dindigul & Theni
லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min
May 17, 2026
Dinamani Dindigul & Theni
கபடியில் கலக்கும் 'இளம்புயல்'
தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட காளத்திமடம் எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த 'இளம்புயல்' கபடி அணியின் பதினான்கு வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் திறந்தவெளி, அரசு நடத்தும் கபடி போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.
1 mins
May 17, 2026
Dinamani Dindigul & Theni
முதல்வர் விஜய், அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு
நிதித் துறை - செங்கோட்டையன், சுகாதாரம் - கே.ஜி.அருண்ராஜ்
1 mins
May 17, 2026
Dinamani Dindigul & Theni
அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை
சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.
2 mins
May 17, 2026
Translate
Change font size
