Prøve GULL - Gratis
'சும்மா' என்ற சொல் சும்மாவா?
Dinamani Dharmapuri
|October 26, 2025
தமிழில் 'சும்மா' என்கிற சொல்லுக்கு பிரத்தியேக இடம், பொருள் இல்லையா? என்னும்படி பல பொருள்படும்படியாக பயன்படுகிறது. அமைதி, செயலற்ற நிலை, வீண், இலவசம், பொய், சதா காலம், எப்போதும், தற்செயலாக, மீண்டும் மீண்டும், எதுவுமின்றி, களைப்பாறுதல், விளையாட்டிற்காக, வினையேதுமின்றி எனப் பல பொருள் தருகிறது.
'சும்மாது' என்ற சொல்லிலிருந்து ‘சும்மா’ என்று உருவாகியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலக்கையால் குத்தும்போது ‘சும்சும்' என்று மூச்சு விடுவார்கள். அப்போது ‘சும்மேலோ சும்முலக்காய்' என்று பாடுவதாக பரணி நூல்களில் வருகிறது. 'சும்முதல்’ என்பதை மூச்சு விடுதல் என்று பொருள் கொண்டு, மூச்சு விடாமல் இருப்பதை சும்மாது இருத்தல்' என்று கொள்ள வேண்டும். பின்னர் இது சும்மா, பேச்சற்று, செயலற்று என்ற பொருள்கள் வந்திருக்க வேண்டும் என கி.வா. ஜகந்நாதன் கூறியுள்ளார்.
'எம்மாய மும்விடுத் தெம்மைக் கரந்திட்டுச் சும்மா திருந்திடஞ் சோதனை யாகுமோ!' -திருமந்திரம் - 2635
Denne historien er fra October 26, 2025-utgaven av Dinamani Dharmapuri.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
தீபாவளி மலர்கள் 2025
கலைமகள் தீபாவளி மலர் 2025கீழாம்பூர் எஸ். சங்கர சுப்பிரமணியன்; பக்.222; ரூ.200, சென்னை-600 028, 044-2498 1699.
5 mins
October 27, 2025
Dinamani Dharmapuri
மழைக்கால விபத்துகளைத் தவிர்ப்போம்!
தமிழகத்தில் தற்போது தொடங்கியுள்ள வடகிழக்குப் பருவமழை டிசம்பர் மாத இறுதி வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கிய வடகிழக்கு பருவ மழையால் சராசரி மழையின் அளவைவிட 27% அதிக மழைப் பொழிவு இருந்தது. இந்த ஆண்டு பெய்த தென்மேற்குப் பருவமழையின் அளவு இயல்பை விட 8% அதிகம் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித் துள்ளது. இவற்றின் அடிப்படையில், இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை யின் அளவும் சராசரி அளவைவிட அதிக அளவில் பெய்யக்கூடும்.
2 mins
October 27, 2025
Dinamani Dharmapuri
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, பலலட்சக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
1 mins
October 27, 2025
Dinamani Dharmapuri
அறம் கூறும் புறம்...!
அறம் எவ்வாறு உருவானது ...? மனிதர்கள் தோன்றிய போதே அவருடன் ஒட்டிப் பிறந்ததா அறம்? அன்று. வாழ்வியல் சூழல் களால், மனிதர்களின் மனத்தில் தோன்றிய உயர்வான சிந்தனையே அறம். இந்த சமூ கத்தை முன்னோக்கிச் செலுத்துகிற கால சக்கரம் அறம்.
1 mins
October 26, 2025
Dinamani Dharmapuri
தொன்மத்தின் சாயல் படிந்த பேய்!
மலையாள நகைச்சுவைத் திரைப்படங்களின் ருசி என்பது பத்தியச் சாப்பாடு மாதிரி. ஒரு வகையான பிரத்யேகச் சுவையில் இருக்கும். முகத்தில் அடிக்கும் மசாலாவோ, வயிற்றைக் கெடுக்கும் காரமோ அதில் இருக்காது. அமுங்கிய குரலில் மெலிதாக வெளிப்படும் இந்த நகைச்சுவையை நுகர்வதற்குத் தனி ரசனை வேண்டும். இந்த வகையான நகைச்சுவைப் படங்கள், டப்பிங் வடிவில் அல்லது ரீமேக் வழியில் தமிழுக்கு நிறைய வந்திருக்கின்றன. காமெடியும் சென்டிமென்ட்டும் கச்சிதமான கலவையில் அமைந்திருக்கும் இவ்வகையான திரைப்படங்களை உருவாக்க இப்போது இயக்குநர்களே இல்லை. அந்தக் குறையை தீர்க்க ஒரு கதை எழுதினேன். அதில் கொஞ்சம் திகில் பாணி திரை வடிவத்தைக் கொடுத்தேன். அதை எல்லோருக்கும் பிடிக்கிற ஒரு கமர்ஷியல் சினிமாவாகக் கொடுப்பதில் நிறைய சவால். அதுதான் இந்தப் படம். நம்பிக்கையாகப் பேசுகிறார் சிற்பி எம். மாதேஷ் 'டம்ளர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
2 mins
October 26, 2025
Dinamani Dharmapuri
அசத்தும் ஆசிரியர்...
கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ஆ.மணிகண்டன், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனராகவும் இருந்து வருகிறார். தொல்லியல் ஆய்வு, கள ஆய்வுகளில் பல்வேறு கண்டுபிடிப்புகளில் சாதித்து வரும் அவரிடம் பேசியபோது:
1 min
October 26, 2025
Dinamani Dharmapuri
'சும்மா' என்ற சொல் சும்மாவா?
தமிழில் 'சும்மா' என்கிற சொல்லுக்கு பிரத்தியேக இடம், பொருள் இல்லையா? என்னும்படி பல பொருள்படும்படியாக பயன்படுகிறது. அமைதி, செயலற்ற நிலை, வீண், இலவசம், பொய், சதா காலம், எப்போதும், தற்செயலாக, மீண்டும் மீண்டும், எதுவுமின்றி, களைப்பாறுதல், விளையாட்டிற்காக, வினையேதுமின்றி எனப் பல பொருள் தருகிறது.
1 min
October 26, 2025
Dinamani Dharmapuri
நல்லாசானாய் - வழிகாட்டியாய்!
பன்னூல் ஆசிரியர் எம்.ஆர்.எம். அப்துற் றஹீமை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். அவருடைய எழுத்துகள் இன்றைய தலைமுறைக்கும் புரியும்.
2 mins
October 26, 2025
Dinamani Dharmapuri
ஏ.ஐ. தரும் வேலைத் தளர்ச்சி
'செயற்கை நுண்ணறிவு' எனப்படும் 'ஏ.ஐ.' எவ்வளவு வேகத்தில் அனைத்துத் துறைகளிலும் இப்போது ஊடுருவிவிட்டதோ, அதே வேகத்தில் அது தந்திருக்கும் புதிய வார்த்தையும் உலகெங்கும் இப்போது பரவி வருகிறது. அதுதான் 'ஒர்க் ஸ்லாப்' அல்லது 'ஏ.ஐ. ஸ்லாப்'. இதன் பொருள் ஏ.ஐ-யினால் வரும் வேலைத் தளர்ச்சி!
1 min
October 26, 2025
Dinamani Dharmapuri
'தாய் எனப்படுவோள் செவிலி ஆகும்'
தமிழ் அகப்பொருள் இலக்கியங்களில் தலைவன், தலைவியை அடுத்து சிறப்பிடம் பெறுபவர்கள் தோழியும், செவிலியுமேயாவர். தலைவியைத் தாய் பெற்றெடுத்தாலும் அவளை வளர்த்து ஆளாக்கும் பெரும் பொறுப்பு அக்காலத்தில் செவிலிக்கே உரியதாக இருந்தது. இவர்கள் செவிலி செவிலித் தாய் என்றே அழைக்கப்பட்டாள்.
2 mins
October 26, 2025
Listen
Translate
Change font size

