Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

உயிர்களிடத்தில் அன்பு வேணும்...

Dinamani Dharmapuri

|

June 19, 2025

எல்லா உயிரையும் தன்னுயிராகப் போற்றும் பெரும் பண்பைக் கற்றுத் தருகிறது தமிழ் மரபு. 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலையே' நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலையாக்கினார் வள்ளுவர் பெருமான். 'பல்லுயிர் கொல்லுதல் அன்று' என்பதை நாம் உணர்ந்து கொண்டால் மானுடம் சிறக்கும்.

- முனைவர் அருணன் கபிலன்

உலகம் பரந்துபட்டது. அதில் வாழும் உயிரினங்களின் எண்ணிக்கை அளவிடற்கரியது. நாம் கண்ணுக்குத் தெரிகிற உயிரினங்களை மட்டுமே நம்முடன் வாழ்வதாகக் கருதிக் கொண்டிருக்கிறோம். நம்முடன் எத்தனையோ கோடிக்கணக்கான உயிரினங்கள் கண்ணுக்குத் தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மண்ணுக்கு வெளியிலும் மண்ணுக்கு உள்ளும் காற்றிலும் அவை கலந்து நிறைந்திருக்கின்றன.

மனிதர்களாகிய நாம் நமக்கிருக்கிற ஏகபோக உரிமையின் காரணமாக உரிமையாளர்கள்போல் இவ்வுலகத்தை நம் வசப்படுத்திக் கொண்டோம். ஆனால், பல உயிர்களின் துணையின்றி நாம் இந்த உலகத்தில் நலத்தோடும் வளத்தோடும் வாழ்ந்து விட முடியாது. இதை நாம் அறிவினாலும் அறிய மறுக்கிறோம்; உணர்வினாலும் தெளிய மறுக்கிறோம்.

இந்த உலகத்தின் பெரும்பிரிவுகளாகத் தாவரங்கள், பறவைகள், விலங்குகள் ஆகிய உயிரினங்கள் விளங்குகின்றன. மனிதர்களாகிய நாம் உடலால் விலங்காகவும் அறிவினால் அதனினும் மேம்பட்ட உயிராகவும் திகழ்கிறோம். என்றாலும், ஏனைய அனைத்து உயிர்களோடும் இயைந்து வாழத்தான் முதலில் பழகிக் கொண்டோம்.

இன்னும் சரியாகச் சொல்வதானால், நம் வாழ்க்கை முறைகளையும் அறிவியல் நுட்பங்களையும் மற்ற உயிர்களிடமிருந்துதான் பெற்றுக் கொண்டோம். பறவைகளிடமிருந்து கூடுகட்டி வாழும் முறையில் தொடங்கி, அது பறப்பது போலவே நாமும் பறப்பதற்கு விமானம் தயாரிப்பது வரையிலும் பலவற்றைக் கற்றுக் கொண்டோம். இவையெல்லாம் புறக்கல்வி என்றால், அகக் கல்வியையும் இந்த உயிரினங்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளன.

இல்லறத்தையும் அதைப் பேணுகிற பெண்மையையும் எப்படிப் போற்றிக் காக்க வேண்டும் என்பதை இந்த உயிரினங்கள்தான் கற்றுத் தருகின்றன. இதைக் கலித்தொகையில் பெருங்கடுங்கோ உணர்த்திக்காட்டியிருக்கிறார்.

இல்லறத்தின் பெரும்பயனைத் துய்ப்பதற்குப் பொருளீட்டும் பொருட்டுத் தலைவன் பாலைநிலத்து வழியில் பிரிந்து சென்றதை எண்ணித் தலைவி கலக்கம் அடைகிறாள். 'அந்தப் பாலை நிலம் கொடுமையானதாக இருக்குமே. தலைவனுக்கு ஊறு நேருமே, அது தனக்கும் துன்பமாக முடியுமே' என்று வருந்திய தலைவி, தோழியிடம் ஆறுதல் கூறித் தேற்றுகிறாள்.

FLERE HISTORIER FRA Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

3-ஆவது பதக்கம் வென்றார் மஹித் சந்து

ஜப்பானில் நடைபெறும் டெஃப்லிம்பிக்ஸ் போட்டியின் துப்பாக்கி சுடுதலில், இந்தியாவின் மஹித் சந்து தனது 3ஆவது பதக்கத்தை வியாழக்கிழமை வென்றார்.

time to read

1 min

November 21, 2025

Dinamani Dharmapuri

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடர் இன்று தொடக்கம்

உலகெங்கிலும் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், பெர்த் நகரில் வெள்ளிக்கிழமை (நவ. 21) தொடங்குகிறது.

time to read

1 min

November 21, 2025

Dinamani Dharmapuri

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கு: 4 பேரைக் காவலில் எடுத்து என்ஐஏ விசாரணை

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில், 3 மருத்துவர்கள் உள்பட 4 பேரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) காவலில் எடுத்துள்ளது. இவர்களையும் சேர்த்து, இந்த வழக்கில் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்கும் நபர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.

time to read

1 min

November 21, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

9 தங்கத்துடன் வரலாறு படைத்தது இந்தியா

உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்

time to read

1 mins

November 21, 2025

Dinamani Dharmapuri

தேனும் நஞ்சாகும்!

சமூக ஊடகங்கள், இணையதளங்களின் ஆதிக்கம் எப்படி மக்களை மடைமாற்றி மழுங்கடித்து விட்டது என்று யோசிக்கும்போது ஆதங்கம், வியப்பு, கவலை எல்லாமே ஒருங்கே வருகின்றன.

time to read

2 mins

November 21, 2025

Dinamani Dharmapuri

2-ஆவது நாளாக பங்குச் சந்தை உயர்வு

எண்ணெய் & எரிவாயு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதிப் பங்குகளில் வாங்குதல் மற்றும் புதிய அந்நிய முதலீட்டு வரவு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

November 21, 2025

Dinamani Dharmapuri

கிரக தோஷங்கள் போக்கும் தலம்

பன்னிரண்டு தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்துக்குப் பல சிறப்புகள் உண்டு. காவிரிக்கரைப் புண்ணியத் தலங்களில் கார்த்திகை மாதம் முழுவதுமே 'ஞாயிறு தீர்த்தவாரி' களை கட்டத் தொடங்கிவிடும்.

time to read

1 mins

November 21, 2025

Dinamani Dharmapuri

பங்குச் சந்தைகளில் மீண்டும் எழுச்சி

உள்நாட்டுப் பங்குச் சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டாலும், இறுதியில் எழுச்சியுடன் முடிவடைந்தது. இதன் மூலம், தொடர்ச்சியாக 3-ஆவது வர்த்தக தினமாக பங்குச் சந்தைகள் நேர்மறையாக முடிந்தன.

time to read

1 min

November 20, 2025

Dinamani Dharmapuri

பிகார் முதல்வராக நிதீஷ் குமார் இன்று பதவியேற்பு

பிகார் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவர் நிதீஷ் குமாரை தேசிய ஜனநாயக கூட்டணி புதன்கிழமை முறைப்படி தேர்வு செய்தது.

time to read

2 mins

November 20, 2025

Dinamani Dharmapuri

சென்னையில் 15 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சென்னையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

time to read

1 min

November 20, 2025

Translate

Share

-
+

Change font size