Prøve GULL - Gratis
இனி முதலீடு... தங்கத்தில்!
Dinamani Dharmapuri
|April 26, 2025
துப்பாக்கியால் சுடும் போரை விட வரி விதிப்புப் போரையே விரும்புவதாக டிரம்ப் வெளிப்படையாக அறிவித்தார். அவை அனைத்தும் டிரம்ப்பின் உலகமயமாக்கல் மற்றும் தடை இல்லாத உலக வர்த்தகத்தின் மீதான அவரது நன்கு அறியப்பட்ட வெறுப்பையே பிரதிபலித்தன.
கடந்த ஆகஸ்ட் 2024 -இல், அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தலுக்கு, குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டதிலிருந்து, அமெரிக்காவின் அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் உலகையே ஆக்கிரமிக்கத் தொடங்கின. அவரது பிரசார வாக்குறுதிகள் கார்ப்பரேட் வரியை 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைப்பதன் மூலமும், பிற நாடுகளிலிருந்து உயர்தர நுகர்வோர் பொருள்களை உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனங்களைத் திரும்பி வரத் தூண்டுவதன் மூலமும் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவது என்பது அவரது குறிக்கோள். மேலும் இறக்குமதி செய்யும் இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் அமெரிக்காவின் இறக்குமதி வரி சராசரி 3 சதவீதத்துக்கு மேல் இல்லை என்றாலும், அமெரிக்காவின் இறக்குமதிகள் மீது 150 சதவீதம் வரை வரி விதிப்பதன் மூலம் அமெரிக்காவின் தாராள மனப்பான்மையை துஷ்பிரயோகம் செய்கின்றன என்று டிரம்ப் குற்றம் சாட்டினார்.
அண்டை நாடுகளான கனடா, மெக்ஸிகோ மற்றும் உலகின் இரண்டாவது சக்தி வாய்ந்த பொருளாதாரமான சீனா ஆகியவற்றின் அமெரிக்காவுக்கான வருடாந்திர ஏற்றுமதிகள் அமெரிக்காவிலிருந்து ஆண்டுதோறும் இறக்குமதி செய்வதை விட அதிகமாக வளர்ந்து வருவதால், அவற்றின் வர்த்தக உபரிகள் அதிகரித்து வருகின்றன. 2024 -ஆம் ஆண்டுக்கு, கனடா (102 பில்லியன் டாலர்), மெக்சிகோ (172 பில்லியன் டாலர்) மற்றும் சீனாவின் (295 பில்லியன் டாலர்) வர்த்தக உபரிகள் அதற்கேற்ப உள்ளன. 2024 -ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் வர்த்தக உபரியும் 46 பில்லியன் டாலர் ஆகும். இறக்குமதி வரிகள் உயர்த்தப்படும் எனும் தேர்தல் வாக்குறுதி அச்சுறுத்தலாக இருந்தது. துப்பாக்கியால் சுடும் போரை விட வரி விதிப்புப் போரையே விரும்புவதாக டிரம்ப் வெளிப்படையாக அறிவித்தார்.
அவை அனைத்தும் டிரம்ப்பின் உலகமயமாக்கல் மற்றும் தடை இல்லாத உலக வர்த்தகத்தின் மீதான அவரது நன்கு அறியப்பட்ட வெறுப்பையே பிரதிபலித்தன. டிரம்ப்பின் தேர்தல் வெற்றி உறுதி செய்யப்படுவதற்கு முன்பே, அவரது அச்சுறுத்தல்கள் முக்கியமான (மூலதன, அந்நிய செலாவணி, மற்றும் தங்கம்) மூன்று உலகச் சந்தைகளை உலுக்கத் தொடங்கின. டிரம்ப்பின் தேர்தல் பிரசாரம், ஜனவரி 20, 2025 -இலிருந்து அவரது முதல் மூன்று மாத ஆட்சி ஆகியவற்றின் உலகச் சந்தைகள் மீதான தாக்கங்களைப் பகுப்பாய்வு செய்வோம்.
Denne historien er fra April 26, 2025-utgaven av Dinamani Dharmapuri.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடி: 3.2 சதவீதம் அதிகரிப்பு
நாட்டில் கடந்த மே மாத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.94 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.
1 min
June 02, 2026
Dinamani Dharmapuri
புதுச்சேரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடக்கம்
தவறான தகவல் அளித்தால் ரூ.1,000 அபராதம்
1 min
June 02, 2026
Dinamani Dharmapuri
ஏப்ரலில் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 4.9%
புதிய அடிப்படை ஆண்டுடன் தரவுகள் வெளியீடு
1 min
June 02, 2026
Dinamani Dharmapuri
'வைரல் சூர்யவன்ஷி' ஆன வைபவ் சூர்யவன்ஷி
இந்த சீசனில் ரசிகர்கள் மட்டுமல்லாமல், கிரிக்கெட் உலகத்தைச் சேர்ந்த பல முன்னாள், இந்நாள் வீரர்களின் கவனத்தையும் ஈர்த்தது என்றால், அது ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தான்.
1 min
June 02, 2026
Dinamani Dharmapuri
தொடரக் கூடாது வரதட்சிணை அவலம்
உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்தவர் ட்விஷா சர்மா (33). கடந்த 2012-ஆம் ஆண்டு 'மிஸ் புணே' பட்டம் வென்ற இவர், சில தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
2 mins
June 02, 2026
Dinamani Dharmapuri
காலிறுதியில் ஸ்வெரெவ், ஆண்ட்ரீவா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்போட்டியியில் முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் காலிறுதிச் சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.
1 min
June 02, 2026
Dinamani Dharmapuri
17 லட்சம் டன் யூரியா இறக்குமதி: சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரியது மத்திய அரசு
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 17 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்ய 2- ஆவது சர்வதேச ஒப்பந்த தப்புள்ளியை மத்திய அரசு கோரியுள்ளது.
1 mins
June 02, 2026
Dinamani Dharmapuri
அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்
பாஜக தேர்தல் வாக்குறுதி அமல்
1 min
June 02, 2026
Dinamani Dharmapuri
மாநில சீனியர் நீச்சல் போட்டி: 5 புதிய சாதனைகள்
சென்னையில் நடைபெற்ற மாநில சீனியர் நீச்சல் போட்டியின் முதல் நாளில் 5 புதிய சாதனைகள் படைக்கப்பட்டன.
1 min
June 02, 2026
Dinamani Dharmapuri
யுபிஐ பரிவர்த்தனைகள் புதிய உச்சம்
இந்தியாவின் எண்ம பணப் பரிவர்த்தனை தளமான யுபிஐ, கடந்த மே மாதத்தில் மதிப்பு மற்றும் எண்ணிக்கை அடிப்படையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
1 min
June 02, 2026
Translate
Change font size
