Prøve GULL - Gratis
அமெரிக்காவுக்கு இந்தியா அவசியம்!
Dinamani Dharmapuri
|April 25, 2025
மருந்துகளை இந்தியாவிலிருந்து அதிக அளவில் அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் மருந்துகளுக்கு வரி அதிகரிக்கும் நிலையில் அமெரிக்காவில் மருந்துகளின் விலை உயரும். இதனால், அமெரிக்க மக்களே அதிகம் பாதிப்படைவார்கள்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாம் முறையாகப் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு உலக நாடுகளிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. உன்னதமான அமெரிக்காவை மீட்டெடுப்போம் என்ற முழக்கத்துடன் டிரம்ப் அறிவிப்புகளை வெளியிடுகிறார். அமெரிக்காவின் பாதுகாப்பு, வர்த்தகம், இளைஞர் நலன் இவற்றில் கவனம் செலுத்தும் முடிவுகள் உலக நாடுகள் பலவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகநாடுகள் மீது வர்த்தக வரிகளை மாற்றி அமைத்துள்ளார். குறைந்தபட்சம் 10 சதவீதம் முதல் அதிகபட்சமாக 40 சதவீதத்துக்கும் மேல் வரி விதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களே இல்லாத தீவுகள்கூட, வெள்ளை மாளிகையின் வரி விதிப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன எனப் பலநாடுகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன. பென்குயின்கள் மட்டுமே வாழும் ஹெர்ட் மற்றும் மெக் டொனால்ட்ஸ் தீவுகள் மீது 10 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இவை ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான பிரதேசங்கள் என்றாலும் அங்கே மனிதர்களே இல்லை.
அமெரிக்க வர்த்தக செயலாளர் இதற்கு விளக்கமளித்துள்ளார். வர்த்தகத்தில் குறுக்குவழிகளை மூடுவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தீவுகள் வழியாக மற்ற நாடுகள் கப்பல் போக்குவரத்து மூலம் அமெரிக்காவை அடைவதைத் தடுப்பதற்காகவே ஹெர்ட் மற்றும் மெக் டொனால்ட்ஸ் தீவுகள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது என்கிறார். ஆஸ்திரேலியா இதை அவசரமாக எடுக்கப்பட்ட தவறான முடிவு என்கிறது. தொழிலதிபராக இருந்த டிரம்ப்பின் நடவடிக்கை, அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளை நெறிப்படுத்துவதில் சிரத்தை கொண்டுள்ளது. வரிப் பட்டியலில் எந்தப் பகுதியாவது விலக்கு அளிக்கப்பட்டால் அமெரிக்காவில் லாபம் ஈட்ட நினைப்பவர்கள் விலக்கு அளிக்கப்பட்ட நாடுகளைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்குள் வர முயற்சிப்பார்கள் என்பது டிரம்ப்பின் பார்வையாக உள்ளது.
Denne historien er fra April 25, 2025-utgaven av Dinamani Dharmapuri.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
மாற்றத்துக்கான தொடக்கம் இந்த வெற்றி
இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர்
2 mins
November 04, 2025
Dinamani Dharmapuri
ஜாதி ஆதிக்கத்தில் பிகார் தேர்தல் அரசியல்!
பிகார் தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் தேர்வு, வாக்கு வங்கியைத் தக்கவைப்பது ஆகியவற்றில் ஜாதிய ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.
2 mins
November 04, 2025
Dinamani Dharmapuri
படித்தால் மட்டும் போதுமா?
அண்மைக்காலமாக உயர் கல்வியில் சேர்க்கை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது பள்ளிக் கல்வி, உயர் கல்வியில் மாணவிகள் சேர்க்கையானது பெருமை கொள்ளும் வகையில் உள்ளது. ஒட்டுமொத்த அளவில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
2 mins
November 04, 2025
 Dinamani Dharmapuri
மாநில கூடைப்பந்து, வாலிபால் போட்டி
சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற எஸ்ஆர்எம் ஐஎஸ்டி சேர்மன் கோப்பை பள்ளிகள் இடையிலான மாநில கூடைப்பந்து, வாலிபால் போட்டிகளில் தஞ்சாவூர், ஆத்தூர், திருநெல்வேலி அணிகள் பட்டம் வென்றன.
1 min
November 04, 2025
 Dinamani Dharmapuri
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
435 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர்
1 mins
November 04, 2025
Dinamani Dharmapuri
அன்புள்ள ஆசிரியருக்கு...
சட்டம் இல்லை
1 min
November 04, 2025
Dinamani Dharmapuri
பயிற்சியாளர் நெகிழ்ச்சி..
சாம்பியன் கோப்பை வென்ற உணர்ச்சிப் பெருக்கில் இருந்த இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர், மரியாதை மற்றும் மகிழ்ச்சி நிமித்தமாக ஒருவரின் கால்களை பிடித்த தருணம் பெரிதும் கவனம் ஈர்த்தது. அவர் அமோல் மஜூம்தார். இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளர்.
1 min
November 04, 2025
Dinamani Dharmapuri
வாரிசுகளின் கடமை
அரசு ஊழியர்கள் பெற்றோரைப் பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு சரிவரக் கவனிக்காமல் புறக்கணித்தால் அந்த அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்து 10 முதல் 15 சதவீத ஊதியம் பிடித்தம் செய்யப்படும்; அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் வகையில் விரைவில் சட்டம் நிறைவேற்றப்படும் என தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
2 mins
November 03, 2025
Dinamani Dharmapuri
திவ்யா தேஷ்முக் வெளியேறினார் 2-ஆவது சுற்றில் பிரணவ், கார்த்திக்
ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் நடப்பு மகளிர் உலகக் கோப்பை சாம்பியனான இந்தியாவின் திவ்யா தேஷ்முக், முதல் சுற்று தோல்வியுடன் வெளியேறினார்.
1 min
November 03, 2025
Dinamani Dharmapuri
வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக வழக்கு
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
1 mins
November 03, 2025
Translate
Change font size
