Prøve GULL - Gratis
முன்னேற்றமாகும் மாற்றம்
Dinamani Cuddalore
|May 10, 2025
சர்வதேச கல்விச் சூழலுக்கு நமது மாணவர்கள் தயாராக ஏதுவாக தேசிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்களின் கனவு நனவாக தேசிய கல்விக் கொள்கை வாய்ப்பளிக்கிறது.
நம் தேசத்தின் சிறந்த அறிஞர்கள் கல்வியில் சிறப்பான பயிற்சியைப் பெற வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள். மாநிலங்கள் அவர்களுக்கென கல்வி முறை பாடத்திட்டம் என வைத்துக் கொண்டிருந்தாலும், இந்தியா முழுவதையும் இணைக்கும் ஓர் பாடத்திட்டமும் அவசியம் என்பதை நமது அறிஞர்கள் சிந்தித்துள்ளனர்.
இதுவரை நாம் பின்பற்றிக் கொண்டிருக்கும் கல்விக் கொள்கை 1986-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 39 ஆண்டுகள் கடந்துவிட்டன. 1992-ஆம் ஆண்டு பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ் கல்விக் கொள்கையில் சிறிய மாற்றங்களைச் செய்தார். மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும் அறிவியல் முதலான முன்னேற்றங்களுக்கு ஏற்பவும் மாற்றங்களைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து தற்போது தேசிய கல்விக் கொள்கை 2020-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
எந்த சமுதாயமும் முன்னேறுவதற்கு கல்வி அடிப்படையானது. கல்வியின் தரம் உயர வேண்டும் என்ற நோக்கத்தோடு தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. 1986-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கை அனைவருக்கும் கல்வியை உறுதிப்படுத்த வேண்டும் என்ற சிந்தனையோடு உருவாக்கப்பட்டது.
தற்போதைய கல்விக் கொள்கை உலகளாவிய போட்டியை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பல மாநிலங்கள் மத்திய அரசின் கல்விக் கொள்கையை அப்படியே ஏற்றுக்கொண்டாலும் சில மாநிலங்கள் தங்களுக்கென உருவாக்கிக் கொண்டிருக்கும் கல்விக் கொள்கையைப் பின்பற்றுகின்றன. கொள்கை அடிப்படையில் பெரும்பாலும் மத்திய மாநில அரசுகளின் கல்விக் கொள்கைகளில் பெரிய மாறுபாடுகள் இருப்பதில்லை.
பாடங்களின் அடிப்படையிலும் அறிவியல், கணிதம் போன்ற பாடங்களில் வேறுபாடுகள் இல்லை. ஆனால், மொழிப்பாடங்கள், வரலாறு போன்றவற்றில் மாநில அரசுகளுக்கும் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றுகின்றன. மாநிலங்கள் தங்கள் தனித்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் தர முயல்வதில் வேறுபாடுகள் தோன்றுகின்றன.
Denne historien er fra May 10, 2025-utgaven av Dinamani Cuddalore.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Cuddalore
Dinamani Cuddalore
யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
1 min
June 06, 2026
Dinamani Cuddalore
ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்
பாமக நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
1 mins
June 06, 2026
Dinamani Cuddalore
ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை ஜூன் 18-இல் தொடங்குகிறது
தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் வரும் ஜூன் 18-ஆம் தேதி ஆளுநர் ஆர்லேகர் உரையுடன் தொடங்கும் என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 06, 2026
Dinamani Cuddalore
சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ் ஐபிஓ: 127 மடங்கு முன்பதிவுடன் அமோக வரவேற்பு
உலோக மறுசுழற்சி நிறுவனமான 'சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
1 min
June 06, 2026
Dinamani Cuddalore
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம், பஞ்சாப் மாநிலம், முலான்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.
1 min
June 06, 2026
Dinamani Cuddalore
அரசு கடன் பத்திரங்களில் அந்நிய முதலீடு: மூலதன ஆதாய வரிக்கு விலக்களிக்கும் அவசர சட்டம் அமல்
அரசு கடன் பத்திரங்கள் மீதான அந்நிய முதலீட்டுக்கு மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்களிப்பதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அமல்படுத்தியது.
1 mins
June 06, 2026
Dinamani Cuddalore
436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.
1 min
June 06, 2026
Dinamani Cuddalore
இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்
இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
June 06, 2026
Dinamani Cuddalore
'மக்கள் மேடை': புதிய இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்
'மக்கள் மேடை' எனும் புதிய இயக்கத்தை நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமை தொடங்கினார்.
1 min
June 06, 2026
Dinamani Cuddalore
சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு
தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) திறக்கிறது.
1 min
June 06, 2026
Translate
Change font size
