Facebook Pixel வாழ்க்கையின் அர்த்தம் பொறுப்புணர்வு! | Dinamani Coimbatore - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

வாழ்க்கையின் அர்த்தம் பொறுப்புணர்வு!

Dinamani Coimbatore

|

January 01, 2026

நம் அனைவருக்கும் எண்ணற்ற அனுபவங்களை தந்த ஆண்டாக 2025 நிச்சயம் இருந்திருக்கும்.

- முனைவர் பவித்ரா நந்தகுமார்

வாழ்க்கையின் அர்த்தம் பொறுப்புணர்வு!

ஒரு சிலருக்கு ஆகச் சிறந்த அனுபவங்களையும், சிலருக்கு மிகக் கடுமையான பாடங்களையும், இன்னும் சிலருக்கு வேகமாக கடந்து போன ஆண்டாகவும், பலருக்கு எந்த மாற்றமும் இன்றி வெகு சாதாரணமாக கழிந்த ஆண்டாகக் கூட இருந்திருக்கும். ஆனாலும், ஒரு புது ஆண்டு தொடங்க இருக்கிறது எனும் போது எல்லோருக்குள்ளும் புதுப்புது நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் ஏற்படத்தான் செய்கின்றன. நம் வாழ்வில் ஒவ்வொரு தொடக்கத்திற்கு முன்பும் சில தீர்மானங்களை கட்டமைக்க மனம் உறுதி ஏற்கும்.ஒரு புதிய சுழற்சி வாழ்வில் தொடங்கப்பட்டால் நமக்குள்ளும் பல வைராக்கியங்கள் உருவாகும். அதைத் தீவிரமாக் கடைப்பிடித்துச் செயல்படுத்துவதில் இருக்கிறது அவரவர் வெற்றி. பொதுவாகவே புத்தாண்டுக்கு பலரும் பல சபதங்களை ஏற்பது வழக்கம். இருப்பினும், பலருக்கு அது இரண்டொரு மாதங்களிலேயே நீர்த்துப் போய்விடுவதும் உண்டு.

புத்தாண்டு பிறந்தாலே பெருவாரியானவர்களுக்கு நாள்குறிப்பை பார்த்ததும் பெரிய உற்சாகம் ஏற்படும். ஜனவரி, பிப்ரவரியில் அடை மழைபோல் பக்கங்கள் எல்லாம் நிரம்பியிருக்க, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மாதம் மும்மாரி பொழிந்ததுபோல் அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கும். பின்னர் ஜூன், ஜூலை, ஆகஸ்டில் சிறு தூறலாகிப் போய் செப்டம்பர், அக்டோபரில் வறட்சிக் காலமாகி நவம்பர், டிசம்பரில் 'கிணற்றையே காணோம்' கதையாக நாள்குறிப்பையே எங்காவது தொலைத்திருப்போம். இது பலரது வாழ்விலும் நடந்திருக்கும் நகைச்சுவைதான்.

ஆனாலும், புத்தாண்டு என்றதும் எடுக்கப்பட்ட சபதங்கள் காலப்போக்கில் கரைந்து போனாலும் புதுப்புது முன்னெடுப்புகள் ஒவ்வொருவருக்கும் அவசியம்தான். அதுதான் நம் வாழ்வை சலிப்பிலிருந்து உற்சாகம் நோக்கி மடைமாற்றும். உடற்பயிற்சி செய்ய, மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள, தவறான பழக்கங்களை நிறுத்த, புத்தகங்கள் வாசிக்க, சுற்றுலா செல்ல, புது மொழி கற்க, புதுக் கலை பழக, நேர்மறையாக இருக்க, குடும்பத்துடன் நேரம் செலவிட, புதிய படிப்பில் சேர என ஒவ்வொருவரும் விதவிதமான சபதம் ஏற்றிருப்பார்கள். ஆனால், நாம் அனைவருமே கைக்கொள்ள வேண்டிய மனநிலை ஒன்று இருக்கிறது; அது பொறுப்புணர்வு.

FLERE HISTORIER FRA Dinamani Coimbatore

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Coimbatore

சிலரது துரோகத்தால் இக்கட்டான நிலையில் அதிமுக

தனிப்பட்ட ஒரு சிலரது சுயநலத்தாலும், துரோக சிந்தனையாலும் அதிமுகவுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதாக அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்தார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Coimbatore

4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்

புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Coimbatore

குமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Coimbatore

அறநெறி சார்ந்த மருத்துவர்களை ஏஐ தொழில்நுட்பத்தால் ஈடு செய்ய முடியாது

குடியரசு துணைத் தலைவர்

time to read

1 min

May 13, 2026

Dinamani Coimbatore

நாளை திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் வியாழக்கிழமை (மே 14) நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Coimbatore

தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு

time to read

2 mins

May 13, 2026

Dinamani Coimbatore

ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Coimbatore

பிளவுபடுகிறதா அதிமுக?

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.

time to read

1 mins

May 12, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

எரிபொருள் விநியோகம் பாதிக்காமல் இருக்க இந்தியா உறுதியான நடவடிக்கை

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

time to read

1 min

May 12, 2026

Listen

Translate

Share

-
+

Change font size