Prøve GULL - Gratis

உரிமையாளர் அடைய முடியாத உரிமை

Dinamani Coimbatore

|

December 08, 2025

"'உங்கள் பணம், உங்கள் அதிகாரம்' -என்பது மத்திய நிதியமைச்சர் கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையின் தலைப்பு.

- கட்டுரையாளர்: பொருளாதார நிபுணர்

உரிமையாளர் அடைய முடியாத உரிமை

இதன் மூலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை மூன்று மாத காலத்துக்கு வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதி, பங்கு முதலீடு, பங்குகளுக்கான ஈவுத் தொகை என உரிமை கோரப்படாமல் உள்ள ரூ. 1.84 லட்சம் கோடியை அதற்கு உரிமையுள்ள நபர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.ஆனால், உண்மையில் மக்கள் கைகளில் கொண்டு சேர்க்க வேண்டிய கோரப்பட்டாத நிதி இதைவிட அதி மானது. 9.22 கோடி கணக்குகளில் உள்ள ரூ.3.5 லட்சம் கோடி உரிமை கோரப்படாமல் உள்ளதாகத் தெரிகிறது. இவை அனைத்தையும் உண்மையான உரிமையாளர்களிடம் சேர்க்க முயற்சித்திருந்தால் நிதியமைச்சருக்கு மேலும் பாராட்டு கள் கிடைத்திருக்கும். ஆனால், நாம் எதிர் பார்க்கும் நடவடிக்கை இப்போதைக்கு எடுக்கப்படாது என்றே தெரிகிறது.

உரிமைகோராத நிதியை திரும்ப ஒப்படைக்க இப்போது எடுக்கப்படும் நடவடிக்கையைப் பார்த்தால், மகாத்மா காந்திக்கு மிகவும் விருப்பமான பிரார்த்தனைப் பாடலான 'வைஷ்ணவ ஜனதோ' பாடலில் வரும் 'ஒருவர் அடுத்தவரின் செல்வத்தைக் கண்டிப்பாகத் தொடக்கூடாது' என்ற கருத்தையோ, 'திருடாமை' என்ற தர்மத்தையோ முழுமையாக கடைப் பிடிக்க முடியாது என்றே தோன்றுகிறது.

வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளிடம் பல ஆண்டுகளாக கேட்பாரற்றுக் கிடக்கும் இந்தப் பெரும் தொகையை அரசு பல ஆண்டுகளாக பராமரித்து வருகின்றன. அதை உரியவர்களுக்கு திருப்பிக் கொடுப்பதற்குப் பதிலாக, தாம் விரும்பும் பொதுநலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணமே அதிகமாக இருந்தது. அந்தப் பணத்தை பொதுநலனுக்காக செலவிடலாம் என்பது அரசின் நோக்கமாக இருந்தாலும், அது அரசின் வருவாய் அல்ல, பலர் கடினமாக உழைத்து சம்பாதித்த பணம் என்பதே உண்மை. எனவே, அரசு இந்தப் பணத்தை தனது எண்ணப்படி செலவிட முடியாது.

கடந்த 2014-ஆம் ஆண்டு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டெபாசிட் தாரர்கள் விழிப்புணர்வு நிதியத்தை உருவாக்கியது. இதன் மூலம் வங்கிகள் தங்களிடம் உள்ள உரிமைகோரப்படாத நிதியை இந்த நிதியத்துக்கு மாற்ற வழிவகை செய்யப்பட்டது. 10 ஆண்டுகளாக எவ்வித பரிமாற்றமும் இல்லாத வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை இந்த நிதியத்துக்கு மாற்ற அனுமதிக்கப்பட்டது. இதன் மூலம் வங்கிகளில் கேட்பாரற்று இருக்கும் பணத்தில் கைவைக்கும் அரசின் நோக்கமும் வெளிப்பட்டது.

FLERE HISTORIER FRA Dinamani Coimbatore

Dinamani Coimbatore

திருப்பரங்குன்றம் மலையில் தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வு

திருப்பரங்குன்றம் மலையில் தமிழக தொல்லியல் துறையின் துணை இயக்குநர் யத்தீஸ்குமார் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.

time to read

1 min

December 11, 2025

Dinamani Coimbatore

மணல் கொள்ளையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழ்நாட்டில் மணல் கொள்ளையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், அது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய கனிம வளத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டது.

time to read

1 min

December 11, 2025

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

இண்டிகோ செயல்பாடுகள் மேற்பார்வைக்கு 8 பேர் குழு: டிஜிசிஏ அமைப்பு

இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட கடுமையான குளறுபடிகளைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை மேற்பார்வை செய்யவும், கண்காணிக்கவும் 8 பேர் கொண்ட குழுவை விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) புதன்கிழமை அமைத்தது.

time to read

1 mins

December 11, 2025

Dinamani Coimbatore

திருவண்ணாமலை தீப மலையில் ஏறிய நபர் மூச்சுத்திணறி உயிரிழப்பு

திருவண்ணாமலையில் மகா தீப தரிசனம் காண தடையை மீறி செவ்வாய்க்கிழமை இரவு மலை மீது ஏறிச் சென்ற நபர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

time to read

1 min

December 11, 2025

Dinamani Coimbatore

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி வேகமான முன்னேற்றம்

இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதை நோக்கி, இருநாடுகளும் வேகமாக முன்னேறி வருவதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

time to read

1 min

December 11, 2025

Dinamani Coimbatore

உரிமை கோரப்படாத ரூ.2,000 கோடி உரியவர்களிடம் திருப்பியளிப்பு

பிரதமர் மோடி பெருமிதம்

time to read

1 min

December 11, 2025

Dinamani Coimbatore

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு

புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி அறிவிப்பு

time to read

1 min

December 11, 2025

Dinamani Coimbatore

2-ஆவது வெற்றி முனைப்பில் இந்தியா

டி20: தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்

time to read

1 min

December 11, 2025

Dinamani Coimbatore

ஐபிஎல் 2026 ஏலத்தின் பட்டியலில் 240 இந்தியர்களுடன் 350 வீரர்கள்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டின் ஏலத்துக்காக மொத்தம் 350 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

time to read

1 min

December 10, 2025

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

சோனியா காந்தி பிறந்தநாள்: பிரதமர், கார்கே வாழ்த்து

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தியின் 79-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

time to read

1 min

December 10, 2025

Listen

Translate

Share

-
+

Change font size