Prøve GULL - Gratis
பிகாரில் தொகுதிப் பங்கீடு பேச்சு தீவிரம்
Dinamani Coimbatore
|October 09, 2025
முதல்வர் வேட்பாளர் நிதீஷ் குமார்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவிப்பு
-
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணிக் கட்சிகளுக்குள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.
பாட்னா/புது தில்லி, அக். 8: பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக் கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் தேசிய ஜன நாயக கூட்டணி, எதிர்க்கட்சிக ளின் 'இண்டி' கூட்டணிக் கட்சிக ளுக்குள் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை தீவிரமடைந்துள்ளது.
பிகாரில் மொத்தம் 243 பேரவைத் தொகுதிகள் உள்ளன. நவம்பர் 6, 11-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 14-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஆளும் கூட்டணிக்கும், லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.
பாஜக கூட்டணி தீவிரம்:
பாட்னாவில் பாஜக தேர்தல் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து கூட்டணித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. அப்போது தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் உள்பட தேர்தல் தொடர்பாக பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. இவை அனைத்தும் மத்திய தலைமையிடம் அறிக்கையாக அளிக்கப்படும். அவர்கள் இறுதி முடிவு எடுப்பார்கள் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Denne historien er fra October 09, 2025-utgaven av Dinamani Coimbatore.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Coimbatore
Dinamani Coimbatore
அறம் உணர்த்துவதே கல்வி
ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.
3 mins
May 30, 2026
Dinamani Coimbatore
காலநிலை மாற்றத்துக்கு மாற்று!
உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.
2 mins
May 30, 2026
Dinamani Coimbatore
தமிழகத்துக்கு பிரத்யேக விளையாட்டுக் கொள்கை
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
1 min
May 30, 2026
Dinamani Coimbatore
கார்ல்செனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 போட்டியாளரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.
1 min
May 29, 2026
Dinamani Coimbatore
சின்னர், ரைபகினா அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிச், ஆண்ட்ரீவா முன்னேற்றம்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.
1 min
May 29, 2026
Dinamani Coimbatore
இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்
ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.
1 min
May 29, 2026
Dinamani Coimbatore
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...
தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 29, 2026
Dinamani Coimbatore
சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...
இணையத்தின் வரவால் இன்று நாம் பல வசதிகளை அறிதிறன்பேசி மூலம் பெற்று வருகிறோம்.
2 mins
May 29, 2026
Dinamani Coimbatore
4-ஆம் காலாண்டு... ஒஎன்ஜிசி லாபம் ரூ.6,650 கோடி
பொதுத் துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஒஎன்ஜிசி), கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.6,649.97 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
1 min
May 29, 2026
Dinamani Coimbatore
உலகை நிலைக்கச் செய்யும் ஆயுதம் !
பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படும் உலக பல்லுயிர் பெருக்க தினம் அண்மையில் (மே 22) கடைப்பிடிக்கப்பட்டது.
2 mins
May 28, 2026
Translate
Change font size

