அவசர ஊர்திகளுடன் போராடும் நோயாளிகள்
Dinamani Coimbatore
|July 08, 2025
‘காலம் பொன் போன்றது’ என்ற பழமொழி யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, அவசர சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குப் பொருந்தும்.
வீடுகள் அல்லது விபத்துத் தலங்களிலிருந்து மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய தீவிர நோயாளிகளாயினும், உயர் மருத்துவ சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைகளிலிருந்து பெரிய மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்ற நோயாளிகளானாலும் சரி, அவர்களைச் சுமந்து செல்ல அவசர ஊர்திகள் (ஆம்புலன்ஸ்) எடுத்துக்கொள்ளும் மணித்துளிகளுள் ஒவ்வொன்றும் மிகவும் முக்கியமானதாகும். எனவேதான், எந்தப் போக்குவரத்து நெரிசலிலும், அவசர ஊர்திகள் தடையின்றிச் செல்வதற்கு வழிவிடப்படுகிறது.
மக்கள்தொகையும் பெருகி, மருத்துவமனைகளும் அதிகரித்துவிட்ட இன்றைய காலச்சூழலில் நமது சாலைகளில் முன்பைவிட அதிகமான எண்ணிக்கையில் அவசர ஊர்திகளை நாம் காண்கிறோம். அதே சமயம், பிற சேவைத் துறைகளைப் போன்று, மக்களின் உயிர் காக்கும் உன்னதப் பணியாகிய இந்த அவசர ஊர்தி சேவைகளிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய குறைபாடுகள் சில இருக்கவே செய்கின்றன.
கடந்த வாரம் உதகை மாவட்டம், குன்னூரில் வேகத் தடை மீது ஏறி இறங்கிய அவசர ஊர்தியின் பின்பக்கக் கதவு திறந்துகொள்ள, அதிலிருந்த நோயாளி ஒருவர் ஸ்ட்ரெச்சருடன் சாலையில் விழுந்தார். அதைப் பின்தொடர்ந்து வந்த வாகனங்கள் சட்டென்று நின்றதால், அவ்விடத்தில் பெரிய விபத்து எதுவும் நிகழ்வது தவிர்க்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் கூச்சலிட்டு ஆம்புலன்ஸை நிறுத்தச் சொன்ன பிறகே அதன் ஓட்டுநருக்கு நடந்த விஷயம் புரிந்திருக்கிறது.
Denne historien er fra July 08, 2025-utgaven av Dinamani Coimbatore.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Coimbatore
Dinamani Coimbatore
யுனைடெட் கோப்பை: வாவ்ரிங்கா வெற்றி தொடக்கம்
யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் ஆர்தரை வீழ்த்தி முதல் வெற்றியை ஈட்டியுள்ளார் நிகழ் சீசனுடன் ஓய்வு பெறவுள்ள சுவிட்சர்லாந்தின் ஸ்டேன் வாவ்ரிங்கா.
1 min
January 04, 2026
Dinamani Coimbatore
பிரயாக்ராஜ் மார்கழி மேளா தொடக்கம்
லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்
1 min
January 04, 2026
Dinamani Coimbatore
வருடச் சிவந்த மலரடிகள்
சைவ வைணவ சமயங்கள் தங்கள் இறைவனை மனைவி மக்களோடு வாழ்பவனாகவே காட்டியுள்ளன.
2 mins
January 04, 2026
Dinamani Coimbatore
அறநிலையத் துறையில் ரூ.124 கோடியில் புதிய பணிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
1 mins
January 04, 2026
Dinamani Coimbatore
வங்கதேச வீரர் முஸ்தபிஸுர் ரஹ்மானை விடுவித்தது கேகேஆர்
பிசிசிஐ உத்தரவு எதிரொலி
1 min
January 04, 2026
Dinamani Coimbatore
நீரில் விழுந்த நெருப்பு!
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அடிப்படையான மூலப் பொருள்கள் எனப்படுகின்றன.
1 mins
January 04, 2026
Dinamani Coimbatore
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 49% உயர்வு
முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ஸ் மோட்டார்ஸின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 49 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 04, 2026
Dinamani Coimbatore
எல்லாவற்றையும் வாசியுங்கள்
தமிழைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் பட்டங்கள் பெறமுடியும்.
1 mins
January 04, 2026
Dinamani Coimbatore
எம்பியை ஈங்குப் பெற்றேன்!
உடன்பிறந்தோரின் பாசத்தை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் பார்த்து வருகிறோம்.
1 min
January 04, 2026
Dinamani Coimbatore
அசல் பட்டு... தங்கத்துக்கு நிகர்!
“பட்டு என்பது தூய்மை, தெய்வீகத்தின் அடையாளம்.
1 min
January 04, 2026
Translate
Change font size
