Prøve GULL - Gratis
உருவானது டிட்வா புயல்... முதல் பக்க தொடர்ச்சி
Dinakaran Nagercoil
|November 28, 2025
வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இது 30ம் தேதி அதிகாலையில் புதுச்சேரி - தெற்கு ஆந்திரா இடையே கரையைக் கடக்கும். வங்கக் கடல் பகுதியில் டிட்வா புயல் மையம் கொண்டதை அடுத்து தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை நேற்று பெய்தது.
-
கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. மேலும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்தது.
அதன் தொடர்ச்சியாக தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்றும் பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், இன்றைய நிலவரப்படி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.
நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யும். அதனால் அந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்யும்.
அதன் தொடர்ச்சியாக, 29ம் தேதியில் வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இருப்பினும், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும். அதனால் அந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
Denne historien er fra November 28, 2025-utgaven av Dinakaran Nagercoil.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
மணல் கொள்ளையைத் தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
1 min
December 11, 2025
Dinakaran Nagercoil
ஜென் ஜீ கதையில் கவுரி கிஷன்
எம்.எஸ். பாஸ்கர் மகன் ஆதித்யா பாஸ்கர் - கவுரி கிஷன் ஆகியோர் 96 படத்துக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்திருக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 1' எனும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
1 min
December 11, 2025
Dinakaran Nagercoil
ஜாதி, மதம், கடவுள் பெயரில் அரசியல் செய்யக்கூடாது
ஜாதி, மதம், கடவுள் பெயரில் யாரும் அரசியல் செய்யக்கூடாது என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
1 min
December 11, 2025
Dinakaran Nagercoil
திருப்பரங்குன்றம் வழக்கை ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்க கூடாது
முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் வலியுறுத்தல்
1 min
December 11, 2025
Dinakaran Nagercoil
ஜூனியர் மகளிர் உலக ஹாக்கி ஷூட்அவுட்டில் உருகுவே வேட்டையாடிய இந்தியா
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் உருகுவே அணியை, ஷூட் அவுட்டில் இந்தியா அபாரமாக வென்றது.
1 min
December 11, 2025
Dinakaran Nagercoil
எழுதி கொடுத்ததை பேசி வரும் விஜய்
நடிகை கஸ்தூரி கலாய்
1 min
December 11, 2025
Dinakaran Nagercoil
நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி 2 இடங்களில் வாக்களித்தது எப்படி?
தேர்தல் ஆணையம் பதில் கூற இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை
1 min
December 11, 2025
Dinakaran Nagercoil
50 வயது நபருக்கு 6வது டும்...டும்...டும்... 23 வயது பெண்ணை விற்ற புரோக்கர்கள்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கொடைரோடு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண்ணுக்கு, திண்டுக்கல் பொன்நகரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
1 mins
December 11, 2025
Dinakaran Nagercoil
'நம்மோடு உறவாடி நம்மை கெடுப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்' பொதுக்குழுவில் சி.வி.சண்முகம் பேச்சால் அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு
சென்னை, வானகரத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் மாநிலங்களவை அதிமுக எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் பேசியதாவது:
1 min
December 11, 2025
Dinakaran Nagercoil
திமுகவின் 2026 தேர்தல் பிரச்சார வியூகம் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையின் இரண்டாம் கட்டம் துவக்கம்
வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்
1 mins
December 11, 2025
Listen
Translate
Change font size
