Prøve GULL - Gratis
சினிமா பிரபலங்களுக்கு கொக்கைன் விற்ற விவகாரம் பிரபல இயக்குநரின் முன்னாள் மனைவி, முன்னணி நடிகைகள் சிக்குகின்றனர்
Dinakaran Nagercoil
|July 04, 2025
ரெகுலராக போதை பொருள் வாங்கியது அம்பலம்
-
சினிமா பிரபலங்களுக்கு கொக்கைன் போதை பொருள் விற்பனை செய்த வழக்கில், அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் உள்பட 4 பேரை 6 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், பிரபல இயக்குநரின் முன்னாள் மனைவி மற்றும் சில முன்னணி நடிகைகளுக்கு நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மற்றும் இடைத்தரகர் கெவின் மூலம் ரெகுலராக கொக்கைன் விற்பனை செய்ததாக 4 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக தற்போது பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பார் ஒன்றில் கடந்த மே 22ம் தேதி இரவு குடிபோதையில் நடந்த மோதல் தொடர்பாக அதிமுக தொழில்நுட்ப பிரிவு முன்னாள் நிர்வாகி பிரசாத் (33), அவரது நண்பர் அதிமுக நிர்வாகி அஜய் வாண்டையார் உள்பட 9 பேரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமார் என்ற பிரடோ (38) என்பவரிடம் இருந்து அதிகளவில் கொக்கைன் என்ற போதைப் பொருள் வாங்கி சினிமா பிரபலங்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதன் மூலம் அவர் பல லட்சம் ரூபாய் சம்பாதித்து இருப்பதும், அவரது வங்கி கணக்குகள் மூலம் உறுதியானது.
இதை தொடர்ந்து, போலீசார் பிரசாத் மற்றும் போதை பொருள் விற்ற பிரதீப்குமார் அளித்த தகவலின்படி நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா மற்றும் ஜெஸ்வீர் என்ற கெவின் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை தடயவியல் துறை நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்த போது, முன்னணி நடிகைகள் பலர் நடிகர்களிடம் வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொக்கைன் போதை பொருள் வாங்கியது தெரியவந்தது.
Denne historien er fra July 04, 2025-utgaven av Dinakaran Nagercoil.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
ரூ.68.2 கோடிக்கு போலி வங்கி உத்தரவாதம் அனில் அம்பானி உதவியாளர் கைது
அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
1 min
October 12, 2025
Dinakaran Nagercoil
ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை விதித்ததால் சர்ச்சை
காங்., எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
1 min
October 12, 2025

Dinakaran Nagercoil
நண்பனுடன் வாழும் மனைவி... மன உளைச்சலில் கணவன்...
அன்புள்ள டாக்டர், நான் ஒரு முப்பத்தைந்து வயது ஆண். ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். எனக்கு சிறு வயதில் இருந்தே ஒரு நண்பன் இருந்தான். என்னோடு படித்தவன். கல்லூரி வரை ஒன்றாகவே படித்தோம். கல்லூரி முடித்த பின்பும் ஒரே நிறுவனத்தில் வேலைக்குச் சென்றோம். நான் தான் அவனை அந்நிறுவனத்தில் சேர்த்துவிட்டேன். அந்நாட்களில் என் நண்பன் மீது எனக்கு அளவு கடந்த காதல் இருந்தது. ஆம். காதல்தான். நான் அவனை அப்படி நேசித்தேன். நாங்கள் இருவரும் பள்ளி நாட்களிலேயே ஓரினப்புணர்ச்சியாளர்கள்தான். அது எங்களுக்குள் மட்டுமே இருக்கும் பந்தமாக இருந்தது. மிக ரகசியமாக வைத்திருந்தோம். இந்நிலையில் எனக்கு திருமணமானது. மணமான புதிதில் என் மனைவியிடம் சற்று விலகியே இருந்தேன். அவள் என்னிடம் ஏன் எனத் திரும்ப திரும்ப கேட்டாள். நான் சரிவர பதில் சொல்லாமல் தட்டிக்கழித்தேன். அவள் என் நண்பனிடம் இதைப் பற்றி புலம்பியிருக்கிறாள். என் நண்பன் என்னிடம் இதை அவளிடம் சொல். நம் உறவை அவள் அறிய வேண்டும் என்றான். ஒரு கட்டத்தில் நான் எனக்கும் என் நண்பனுக்கும் இருக்கும் உறவைப் பற்றிச் சொன்னேன். அவள் அதிர்ச்சியடைந்தாள். எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனாலும் அப்படி இருக்காது என்று நினைத்தேன் என்று சொன்னாள். எங்கள் உறவை அவள் கைவிடச் சொன்னாள். ஆனால், என்னால் முடியவில்லை. சில மாதங்கள் நானும் என் நண்பனும் பார்க்காமல் இருந்தோம். ஆனால், நான் அவனைப் போய் பார்த்து மீண்டும் இணைந்தேன். எங்களால் பிரிய முடியாது என்று மனைவிக்குப் புரிந்தது. சரி என்று வேறு வழியின்றி அனுமதித்தாள். என் நண்பன் என் வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் வருவான். என் மனைவியோடு நன்கு பழகுவான். இந்நிலையில் எனக்கும் என் மனைவிக்கும் ஒரு குழந்தை பிறந்தது. ஒருநாள் நான் வெளியூருக்குப் போய்விட்டு சற்று முன்பாகவே வீடு திரும்பிய போது என் மனைவியும் என் நண்பனும் தவறான கோலத்தில் இருப்பதைப் பார்த்தேன். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னிடம் ஏன் சொல்ல வில்லை என்று கேட்டேன். இருவருமே குற்றவுணர்ச்சியில் தவித்தார்கள். ஒரு கட்டத்துக்குப் பிறகு எங்கள் உறவு மூவர் உறவாய் மாறியது. நாளாக நாளாக என் மனைவி என் நண்பனிடம் நெருங்கத் தொடங்கினாள். அவளுக்கு என்னை விடவும் என் நண்பனையே பிடிக்கத் தொடங்கியது. கொரோனா நேரத்தில் அவனோடேயே அதிகமும் இருந்தாள். நான் அந்த வீட்டில் ஒரு டம்மி போல் இருந்தேன். இதனால் கர்ப்பம் வந்தது. எனக்கு என் நண்பனிடமும் மனைவியிடமும் அடிக்கடி சண்டை கட்டினேன். ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு நான் வெளியேறினேன். ஒருநாள் வீட்டுக்குப் போய் குழந்தையை என்னோடு அழைத்துக் கொண்டு வர முயன்றேன். அப்போது அவனும் இருந்தான். இருவரும் என்னிடம் கடுமையாக சண்டையிட்டு விரட்டிவிட்டார்கள். என் நண்பனும் மனைவியும்தான் அவ்வீட்டில் ஒரு வருடமாக வாழ்ந்து வருகிறார்கள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. ஆனால், அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால், அவர்களுக்கோ என்னோடு வாழ்வதை விடவும் அவர்கள் சேர்ந்து வாழ்வதுதான் பிடித்திருக்கிறது. நான் இதை யாரிடமும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். நான் என்ன செய்யட்டும் மேடம்.
1 min
October 12, 2025
Dinakaran Nagercoil
சபரிமலை கோயிலில் தங்கம் கொள்ளையா?
செம்பு தகடுகளாக மாற்றம், கேரள உயர் நீதிமன்றம் அதிர்ச்சி, திடுக்கிடும் தகவல்கள்
3 mins
October 12, 2025

Dinakaran Nagercoil
இந்தியாவிலேயே முதன்முறையாக சர்வதேச தரத்தில் ரூ.53 கோடியில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.53 கோடி செலவில் இந்தியாவிலேயே முதன்முறையாக சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
2 mins
October 12, 2025
Dinakaran Nagercoil
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் விஜய்யின் நெருங்கிய நண்பரிடம் எஸ்ஐடி விசாரணை
2 நாள் காவல் முடிந்து மாவட்ட செயலாளர் சிறையில் அடைப்பு
1 min
October 12, 2025
Dinakaran Nagercoil
இன்றைய பலன்கள்
பொதுப்பலன்: கால்நடை வாங்க, நோயாளர்கள் மருந்து உண்ண, புதிய விஷயங்களை தேடி கற்க நன்று.
1 mins
October 12, 2025
Dinakaran Nagercoil
பாஜகவை கழற்றிவிட எடப்பாடி திட்டமா?
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம் செய்தார்.
1 min
October 12, 2025

Dinakaran Nagercoil
குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிக்கு கமல்ஹாசன் உதவி
மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்கும் 7ம் வகுப்பு மாணவி ஏ.யோசிதா, 9ம் வகுப்பு மாணவன் டி. கங்கைகொண்டான், 12ம் வகுப்பு மாணவன் டி. யோகி வர்மன் மற்றும் குத்துச்சண்டை பயிற்சியாளர் எஸ். லிங்கேஸ்வரன் ஆகியோர், மக்கள் நீதி மய்யம் தலைவரும், எம்.பியுமான கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
1 min
October 12, 2025

Dinakaran Nagercoil
நவ.1 முதல் அமல் சீனாவுக்கு கூடுதலாக 100% வரி
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
1 min
October 12, 2025
Translate
Change font size