Prøve GULL - Gratis
டெல்லி அணியின் காவி திட்டம்....
DINACHEITHI - MADURAI
|July 16, 2025
1-ம் பக்கம் தொடர்ச்சி
-
ஆருயிர் சகோதரர் தொல் திருமாவளவன் அவர்களுடன் நான் இன்றைக்கு அய்யா இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு அரங்கத்தை திறந்து வைத்திருக்கிறேன். திருமா அவர்கள் சிதம்பரத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல, சிதம்பரத் தொகுதியின் சீர்திருத்தப் பிள்ளையாக அவர் விளங்கிக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு தன்னுடைய எழுத்தால் துணை நிற்கிறார், நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் ரவிக்குமார் அவர்கள், தனது பேச்சால் துணை நிற்கிறார், சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் சிந்தனைச் செல்வன் அவர்கள். இந்த விழாவிற்கு என்னுடைய அழைப்பை ஏற்று, வருகை தந்திருக்கக்கூடிய சகோதரர் செல்வப்பெருந்தகை அவர்களும், தோழர் பாலகிருஷ்ணன் அவர்களும், முத்தரசன் அவர்களும், பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன் அவர்களும், கே.எஸ். அழகிரி அவர்களும், வேல்முருகன் அவர்களும், இப்படி எல்லோரும் இங்கே வருகை தந்திருக்கிறார்கள்.
அய்யா இளையபெருமாள் அவர்களுக்காக மட்டுமல்ல, அதற்காக மட்டும் வந்திருப்பதாக நான் கருதவில்லை - நம்முடைய திராவிட மாடல் அரசின் அனைத்து சமூக சீர்திருத்தத் திட்டங்களுக்கு துணையாக இருப்பவர்கள் - இவர்கள் என்பதற்கு வெளிப்படுத்துவதற்கு வந்திருக்கிறார்கள். அதனால், அனைவருக்கும் எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த மேடையில், பெரியாரின் வழியில் வந்த திராவிட இயக்கத் தலைவர்கள் - மார்க்சிய சிந்தனையை கொண்டிருக்கக்கூடிய பொதுவுடைமை இயக்கத்தின் தலைவர்கள் - காந்திய வழியில் வந்திருக்கக்கூடிய தேசிய இயக்கத்தின் தலைவர்கள் - அம்பேத்கர் இயக்கத்தின் தலைவர்கள் என்று எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம் - இதுதான் ஓரணியில் தமிழ்நாடு. அதைத்தான் திருமாவளவன் அவர்கள் இங்கே பெருமையோடு குறிப்பிட்டுச் சொன்னார்.
நானும் அதை வழிமொழிகிறேன். உறுதியோடு சொல்கிறேன். தமிழ்நாடு இப்படி ஓரணியில் இருக்கும்போது, எந்த டெல்லி அணியின் காவித் திட்டமும் இங்கே பலிக்காது, பலிக்காது.
பெரியவர் அய்யா இளையபெருமாள் அவர்கள் பள்ளியில் படிக்கும்போதே தீண்டாமையின் அடையாளமாக இருந்த 'இரட்டைப் பானை முறையை' எதிர்த்துப் போராடியவர்! இராணுவத்தில் பணியாற்றியபோது, அங்கும் பாகுபாடு நிலவுவதை பார்த்து, அவருக்கே உரிய துணிச்சலோடு உயர் அதிகாரிக்குப் புகார் அளித்து, அந்தப் பாகுபாடுகளை களைய காரணமாக இருந்தார்!
Denne historien er fra July 16, 2025-utgaven av DINACHEITHI - MADURAI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரெயில் சேவை பிப்ரவரி 2-வது வாரத்தில் தொடங்க திட்டம்
போரூர்- வடபழனி இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது
1 min
January 12, 2026
DINACHEITHI - MADURAI
இலங்கையில் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அமல் தமிழர்களுக்கு பாதுகாப்பு தேவை தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்
2 mins
January 12, 2026
DINACHEITHI - MADURAI
பாராளுமன்றம் ஜன 28-ந் தேதி கூடுகிறது
பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல்
1 min
January 10, 2026
DINACHEITHI - MADURAI
வருகிற 13-ந்தேதி கூடலூர் வருகிறார் ராகுல் காந்தி
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்
1 min
January 10, 2026
DINACHEITHI - MADURAI
மதுரையில் 23-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்
கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடை ஏற்ற திட்டம்
1 min
January 10, 2026
DINACHEITHI - MADURAI
முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந் தேதி தொடக்கம்
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது.
1 min
January 09, 2026
DINACHEITHI - MADURAI
“உங்கள் கனவை சொல்லுங்கள்” என்ற புதிய திட்டத்தை மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
50 ஆயிரம் தன்னார்வலர்கள் வீடு-வீடாக சென்று தகவல்களை சேகரிக்கிறார்கள்
1 mins
January 09, 2026
DINACHEITHI - MADURAI
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், 10, 11-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்
1 min
January 09, 2026
DINACHEITHI - MADURAI
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம் ரொக்கம்
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்
1 mins
January 09, 2026
DINACHEITHI - MADURAI
மக்கள் தி.மு.க. பக்கம் இருக்கிறார்கள்
அமித்ஷாவா? அவதூறு ஷாவா? திண்டுக்கல் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி
1 min
January 08, 2026
Translate
Change font size
