Prøve GULL - Gratis

கிண்டியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

DINACHEITHI - KOVAI

|

June 06, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.6.2025) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில், சென்னை, கிண்டியில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டி, தமிழ்நாடு கடல்சார் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக 1.75 கோடி ரூபாய் செலவில் 14 கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்பிடி வலைகள் சேகரிப்பு மையங்களை திறந்து வைத்து, தனுஷ்கோடியில் பெரும் பூநாரை பறவைகள் சரணாலயம் அறிவிக்கை பற்றிய குறும்படத்தையும் பார்வையிட்டார்.

கிண்டியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

மேலும், 1400 வனக் காவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், வனக் காவலர்கள், நீர் நிலைப்பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர்கள் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார்.

மனிதகுலம் சந்தித்துவரும் பெரும் சவாலாக தற்போது காலநிலை மாற்றம் உள்ளது. அதனை எதிர்கொள்ள இவ்வரசு பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் ஆகிய இயக்கங்களை தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருவதோடு, இயற்கைப் பாதுகாப்பினையும் வளங்குன்றா வளர்ச்சியையும் தொடர்ந்து வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பயன்பாட்டை ஒழித்திட உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதுடன், தமிழ்நாட்டின் பாரம்பரியமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிப்பை பயன்பாட்டை மீட்டெடுக்கும் வகையில் "மீண்டும் மஞ்சப்பை "திட்டத்தை அறிமுகப்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.

அத்துடன் தமிழ்நாடு மீன் வலை முன்னெடுப்பின் கீழ், சென்னை காசிமேட்டில் நிறுவப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்வலை சேகரிப்பு மையம் மூலம் கைவிடப்பட்ட மீன் வலைகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுவதால் கடலில் நெகிழி மாசுபாடு குறைந்து, கடல் பல்லுயிரியம் பாதுகாக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பேணிக் காத்திட இவ்வரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டுதல்

சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் அடிக்கல் நாட்டப்பட்டது.

இம் மையத்திற்கான கட்டடம் சுற்றுச்சூழலுக்கு சாதகமான மற்றும் இயற்கை வளங்களை திறம்பட பயன்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய பசுமை கட்டடமாக உருவாக்கப்படும். இக்கட்டடத்தின் மொத்த நிலப்பரப்பு 16,555 சதுர அடி மற்றும் மொத்த கட்டுமானப் பரப்பளவு 46,823 சதுர அடி ஆகும்.

FLERE HISTORIER FRA DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

வருகிற 13-ந்தேதி கூடலூர் வருகிறார் ராகுல் காந்தி

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

January 10, 2026

DINACHEITHI - KOVAI

முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந் தேதி தொடக்கம்

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது.

time to read

1 min

January 09, 2026

DINACHEITHI - KOVAI

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், 10, 11-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

January 09, 2026

DINACHEITHI - KOVAI

ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு: முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்

ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு வழங்குவதை, முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்.

time to read

1 min

January 08, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

சூடு பிடிக்கும் தேர்தல் களம்: ஜன.28-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை?

தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

time to read

1 min

January 08, 2026

DINACHEITHI - KOVAI

உங்க கனவை சொல்லுங்கள் திட்டம் ஜன. 9-ந் தேதி தொடக்கம்

அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - KOVAI

ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி

முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.

time to read

1 min

January 06, 2026

DINACHEITHI - KOVAI

தமிழக மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டம்

இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 05, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

வெனிசுலா மீது தாக்குதல் : அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டனர்

டிரம்ப் அதிரடி அறிவிப்பு

time to read

1 min

January 04, 2026

Translate

Share

-
+

Change font size