தப்பிய சென்னை!
Nakkheeran
|October 19-22, 2024
வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் சென்னைக்கு விடப்பட்ட ரெட் அலர்ட் பொய்த்துப்போயிருக்கிறது.
இதனால் சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்கள் தப்பித்துள்ளதில் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது தி.மு.க. அரசு.
வடகிழக்கு பருவ மழையின் தொடக்கம், வங்கக்கடலின் தென்பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் ஆகியவற்றால் இம்மாதம் 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை சென்னையிலும் வட தமிழகத்திலும் அதிக கனமழை (20 செ.மீ.க்கு மேல்) பொழியும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்திய வானிலை மையமும் இதையே வழிமொழிந்தது. 16 (புதன்) மற்றும் 17 (வியாழன்) ஆகிய தேதிகளில் சென்னைக்கு ரெட் அலர்ட்டும் கொடுத்தது வானிலை ஆய்வு மையம்.
அதற்கேற்ப திங்கள்கிழமை முதலே சென்னையில் மழையின் தாக்கம் அதிகரித்தது. செவ்வாய்க்கிழமை இடைவிடாமல் காற்று. மின்னலுடன் கொட்டியது மழை.
கடந்த ஆண்டு (2023) டிசம்பரில் உருவான மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் கொட்டித்தீர்த்த மழையில், சென்னை நகரமே தத்தளித்தது. தேங்கிய தண்ணீரை வெளியேற்றுவதில் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் நிறைய சிரமங்களை எதிர்கொண்டன. அப்போது, தி.மு.க. அரசை நோக்கி எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் குற்றம்சாட்டிய நிலையில், மிக்ஜாம் புயல் குறித்து முன்கூட்டி எந்தத் தகவலையும் வானிலை ஆய்வு மையம் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் முன்னெச்சரிக்கையாக அரசு பல நடவடிக் களை எடுத்திருக்கும். சென்னை மக்கள் இத்தகைய துயரங்களை எதிர்கொண்டிருக்கமாட்டார்கள்" என்று சொல்லியிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
இப்படிப்பட்ட சூழலில், இந்தாண்டு (2024) வடகிழக்கு பருவமழை துவங்கியதும் வங்கக்கட லில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலத்தால் ஏற்படும் தாக்கத்தை கணித்து, தமிழகம் முழுவதும் மிதமான மழை, கனமான மழை, அதிகனமான மழை பொழியும் மாவட்டங்களை அறிவித்தது சென்னை வானிலை ஆய்வு மையம். அதனை யொட்டி ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் ஆகிய எச்சரிக்கையை வகைப்படுத்தியும் அறிவிக்கப் பட்டன. இதனையடுத்து விழித்துக்கொண்டது தி.மு.க. அரசு. வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது என அறிந்ததுமே அதனை எதிர்கொள்ளத் தயாரானார் முதல்வர் ஸ்டாலின்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பிருந்தே அமைச்சர்கள், உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் எனத் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.
Denne historien er fra October 19-22, 2024-utgaven av Nakkheeran.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Nakkheeran
Nakkheeran
திலீப் விடுதலை... பகீர் பின்னணி!
8 ஆண்டுகளாக நடந்துவந்த பிரபல நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
அவசர கதியில் எஸ்.ஐ.ஆர். பணி!
கொதிக்கும் ஐ.பி.!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
யார் கெத்து? பலியான மாணவன்!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் அறிஞர் அண்ணா மாதிரிப் பள்ளி இயங்கிவருகிறது.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
தி.மு.க. எம்.பி. வீட்டில் கொள்ளை! குடும்பமாக பிடிபட்ட கும்பல்! -திருவாரூர் பரபரப்பு!
நாகை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயனுக்கு, திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி சொந்த ஊர்.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
நிறைவேற்றப்படாத வேண்டுதல்!
‘ஒண்டி முனியும் நல்லபாடனும்' திரைப்பார்வை!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
கைதி என் 9658
ஒரு நீண்ட அனுபவத்தின் வழி நின்று அரசியலை நன்கு புரிந்துகொள்ளும் இயல்பைக் கொண்டவர் தோழர் நல்லகண்ணு.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை!
-மக்கள் மனநிலை!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
அம்மா போட்ட குண்டு?
மீண்டும் சென்னைக்கு போகிறோம் என்றதும் என் தோழிகள் சுகுணா, சாந்தா, ட்ரம் வண்டி... ஆகாஷ்வாணி எல்லாம் நினைவுக்கு வந்தது. வடநாட்டவர் களுக்கு மும்பை போல, தென்னாட்டவர்க்கு தலைநகர் சென்னை வாழ்வைத் தேடி வருகிறவர்களுக்கு அடைக்கலம் தரும் திருத்தலம்.
3 mins
December 13-16, 2025
Nakkheeran
அடக்கி வாசிக்கும் விஜய்!
கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதன் முறையாக புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறார் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய். தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வை தொடர்ந்து கடுமையாகத் தாக்கிவரும் விஜய், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியை வறுத்தெடுப்பார் என ஏக எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர்.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
கஞ்சாவுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு!
2020 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் போதைப்பொருள் ஆணையம் ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்தது. அதாவது, 'மிகவும் ஆபத்தான போதைப்பொருட்கள்' என்ற பட்டியலில் (Schedule IV) இருந்து கஞ்சா நீக்கப்பட்டது.
2 mins
December 13-16, 2025
Translate
Change font size

