Facebook Pixel ஜீன்ஸ்... Twins ரகசியங்கள்! | Kungumam Doctor - health - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

ஜீன்ஸ்... Twins ரகசியங்கள்!

Kungumam Doctor

|

July 01, 2024

இயற்கையின் அற்புதங்களில் இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரு தனியிடம் உண்டு. எப்போதும் அந்தக் குழந்தைகளை வியப்போடுதான் பார்ப்போம்.

- சரஸ்

ஜீன்ஸ்... Twins ரகசியங்கள்!

இருவரும் ஒரே மாதிரி உடையணிந்திருக்கிறார்களா, இருவருக்கும் ஒரே மாதிரி தோற்றம் இருக்கிறதா என்று நுணுக்கமாக அவர்களை ஆராய்ந்துகொண்டிருப்போம். ஆனால், அந்தக் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்குத்தான் அவர்களை வளர்த்தெடுப்பது எவ்வளவு சிரமம் என்பதும், அதற்கான மெனக்கெடல்கள் எவ்வளவு என்பதும் தெரியும்.

ஒரு கரு முட்டையும் ஒரு விந்தணுவும் இணைந்து கருத்தரித்து, அதன் பிறகு இரண்டாகப் பிரிவதால், ஒரே மரபணு அம்சத்துடன்கூடிய இரண்டு கருக்கள் உருவாகின்றன. இப்படி உருவாகும் இரட்டையரை ‘ஐடென்டிகல் ட்வின்ஸ்’ (Identical Twins) என்கிறோம். ஒட்டிப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளும் இதே வகையறாதான். இவற்றில் இரண்டு பிரிவினர் உள்ளனர். நஞ்சுக்கொடி மற்றும் பனிக்குடத்தை வைத்து இவர்கள் பிரிக்கப்படுகிறார்கள்.

* `மோனோகோரியானிக் மோனோஅம்னியாட்டிக்’ (Monochorionic Monoamniotic Twins) இரட்டையர்கள் -  இருவரும் ஒரே நஞ்சுக்கொடியுடன், ஒரே பனிக்குடத்தில் இருப்பார்கள். இவர்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பார்கள்.

* மோனோகோரியானிக்  டை-அம்னியாட்டிக் (Monochorionic Diamniotic Twins) இரட்டையர்கள் - நஞ்சுக்கொடி இருவருக்கும் ஒன்றுதான்.  ஆனால், பனிக்குடப்பைகள் இரண்டு இருக்கும். இவர்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம்.

இரண்டு கரு முட்டைகளுடன், இரண்டு விந்தணுக்கள் சேர்ந்து, இரண்டு தனித்தனி கருக்களாக  வளரும் குழந்தைகள்,  ‘ஃபிரேட்டெர்னல் ட்வின்ஸ்’ (Fraternal Twins) எனப்படுவார்கள். அதாவது, ஒரே மாதிரி இல்லாத இரட்டையர்கள்.

கருவில், இந்தக் குழந்தைகளுக்குத் தனித்தனி நஞ்சுக்கொடிகள், இரண்டு பனிக்குடங்கள் இருக்கும். இருவருக்கும் ரத்த விநியோகம் தனித்தனியாக நடைபெறும். ஒரே கருவில் இருந்தாலும், இரண்டு குழந்தைகளும் தனித்தனி உலகத்தில் இருப்பார்கள். இப்படி உருவாகும் குழந்தைகளில், பெரும்பாலும் ஒரு குழந்தை ஆணாகவும், ஒரு குழந்தை பெண்ணாகவும்தான் இருப்பார்கள்.  இவர்களின் மரபணுக்களும் வித்தியாசமாகவே காணப்படும்.  

FLERE HISTORIER FRA Kungumam Doctor

Kungumam Doctor

Kungumam Doctor

எளிய வீட்டு வைத்தியம்!

நம் வீட்டில் உபயோகிக்கும் பொருட் களை நமது சிறிய உபாதைகளை தடுக்க வல்லது.

time to read

1 min

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

பார்வதி வெங்கடராமன் ஃபிட்னெஸ்!

சின்னத்திரையில் விஜேவாக அறிமுகமாகி பின்னர், நிகழ்ச்சி தொகுப்பாளராகி தற்போது சின்னத்திரையின் கதாநாயகி அந்தஸ்தை பிடித்திருப்பவர் பார்வதி வெங்கடராமன்.

time to read

1 mins

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

கார்கூந்தல் பெண் அழகு!

பெண்கள் பொதுவாகவே தங்கள் அழகு விஷயத்தில் ஆர்வமுடன் இருப்பார்கள்.

time to read

2 mins

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

ஃபிட்னெஸைப் பாதுகாக்கும் பிக்கிள்பால்!

உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டுகளில் பிக்கிள்பால் விளையாட்டும் ஒன்று. பிக்கிள் பால் என்பது டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன் ஆகிய மூன்று விளையாட்டுகளின் கலவையாக விளையாடப்படுகிறது. இது சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி விளையாடப்படுவதால் பெரும்பாலான விளையாட்டு ஆர்வலர்களை கவர்ந்துள்ளது.

time to read

3 mins

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

மைக்ரேன் தீர்வு என்ன?

இந்த உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஏதோ ஒரு நொடிப் பொழுதில் தலைவலியை சந்தித்திருப்பார்கள்.

time to read

2 mins

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

முதுகுவலியைத் தடுக்கும் வழிகள்!

முதுகுவலி என்பது இன்றைய சூழலில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனை வரும் சந்திக்கும் பொதுவான பிரச்னையாகும்.

time to read

1 min

April 16-30, 2026

Kungumam Doctor

சிக்கரி ஓர் அரு மருந்து!

காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு ஒரு கப் காபி சாப்பிட்டால் தான் சிலருக்கு வேலையே ஓடும்.

time to read

1 min

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

ப்ரீ டயாபட்டீஸ்: தற்காப்பு வழிகள்!

இந்திய மக்கள் தொகையில் 14% பேருக்கு ப்ரீ-டயாபட்டீஸ் இருப்பதாக தேசிய நகர்ப்புற நீரிழிவு அமைப்பின் ஆய்வு எச்சரித்துள்ளது.

time to read

2 mins

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

உடல் சூட்டை தணிக்கும் புதினா!

புதினா (Mint) செரிமானத்தை மேம்ப டுத்துதல், வாய் துர்நாற்றத்தைப் போக்குதல், தலைவலி மற்றும் வயிற்று வலியை நிவர்த்தி செய்தல் போன்ற எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு சிறந்த மூலிகையாகும்.

time to read

1 min

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

தைராய்டு அறிவோம்

இந்தியாவில் மிகவும் பொதுவாகக் காணப்படும் ஹார்மோன் சம்பந்தமான பிரச்சனைகளில் தைராய்டு பிரச்னையும் ஒன்றாக உள்ளது. சுமார் 4 கோடியே 20 லட்சம் இந்தியர்கள் ஏதேனும் ஒரு வகை தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

time to read

2 mins

April 16-30, 2026

Translate

Share

-
+

Change font size