Facebook Pixel பதின் பருவ சிறுகதைகள் | Andhimazhai - entertainment - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

பதின் பருவ சிறுகதைகள்

Andhimazhai

|

June 2024

மத்தியானத்திலிருந்தே விட்டுவிட்டு மழை பெய்துகொண்டிருக்கிறது.

பதின் பருவ சிறுகதைகள்

ந்தப் பெரிய கார் அவள் வழியின் குறுக்கே வேகமாய் வந்து அவள் மேல் உரசுவதுபோல் சடக்கென நின்று, நின்ற வேகத்திலே முன்னும் பின்னும் அழகாய் அசைகின்றது.

அவள் அந்த அழகிய காரைப் பின்னாலிருந்து முன்னேயுள்ள டிரைவர் ஸீட் வரை விழிகளை ஒட்டி ஓர் ஆச்சரியம்போலப் பார்க்கிறாள்.

அந்தக் காரை ஓட்டிவந்த இளைஞன் வசீகரமிக்க புன்னகையோடு தனக்கு இடதுபுறம் சரிந்து படுத்து, பின் ஸீட்டின் கதவைத் திறக்கிறான்.

‘‘ப்ளீஸ் கெட் இன்... ஐ கேன் டிராப் யூ அட் யுவர் பிளேஸ்'' என்று கூறியவாறு, தனது பெரிய விழிகளால் அவள் அந்தக் காரைப் பார்ப்பதே போன்ற ஆச்சரியத்தோடு அவன் அவளைப் பார்க்கிறான்.

அவனது முகத்தைப் பார்த்த அவளுக்கு, காதோரமும் மூக்கு நுனியும் சிவந்துபோகிறது: ‘‘நோ... தேங்க்ஸ்! கொஞ்ச நேரம் கழித்து... மழை விட்டதும் பஸ்லேயே போயிடுவேன்.''

‘‘ஓ! இட் இஸ் ஆல் ரைட்... கெட் இன்'' என்று அவன் அவசரப்படுத்துகிறான். கொட்டும் மழையில் தயங்கி நிற்கும் அவளைக் கையைப் பற்றி இழுக்காத குறை...

இப்போது அவனும் காரிலிருந்து வெளியே வந்து அவளோடு மழையில் நனைந்தவாறு நிற்கிறானே...

‘‘ம்... கெட் இன்...''

இப்போது அந்த அழைப்பை அவளால் மறுக்க முடியவில்லையே...

கார் போய்க்கொண்டே இருக்கிறது.

இந்த மழையில் இப்படி ஒரு காரில் பிரயாணம் செய்துகொண்டிருப்பது அவளுக்கு ஒரு புதிய அனுபவமானபடியினால் அதில் ஒரு குதூகலம் இருந்தபோதிலும், அந்தக் காரணம் பற்றியே அடிக்கடி ஏதோ ஒருவகை பீதி உணர்ச்சி, அவளது அடிவயிற்றில் மூண்டு எழுந்து மார்பில் என்னவோ செய்துகொண்டிருக்கிறது.

‘‘இப்ப நாம எங்கே போறோம்?'' - அவளது படபடப்பான கேள்விக்கு அவன் ரொம்ப சாதாரணமாகப் பதில் சொல்கிறான்.

‘‘எங்கேயுமில்லை; சும்மா ஒரு டிரைவ்...''

‘‘நேரம் ஆயிடுத்தே - வீட்டிலே அம்மா தேடுவாங்க.''

‘‘ஓ யெஸ்... திரும்பிடலாம்.''

- கார் திரும்புகிறது. டிரங்க் ரோடைவிட்டு விலகி, பாலைவனம் போன்ற ஒரு திடலுக்குள் பிரவேசித்து, அதிலும் வெகுதூரம் சென்று அதன் மத்தியில் நிற்கிறது கார். கண்ணுக்கெட்டிய தூரம் இருளும் மழையும் சேர்ந்து அரண் அமைந்திருக்கின்றன.

காருக்குள்ளேயே ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியவில்லை.

திடீரென கார் நின்றுவிட்டதைக் கண்டு அவள் பயந்த குரலில் கேட்கிறாள்: ‘‘ஏன் கார் நின்னுடுச்சு? பிரேக்டௌனா?''

FLERE HISTORIER FRA Andhimazhai

Andhimazhai

Andhimazhai

பிரேக் அப் எனும் சொல் தரும் நம்பிக்கை!

90 களின் தொடக்கத்தில் பால்யமோ பதின்மமோ அமைந்தவர்களுக்கு இந்த இருபத்தைந்து ஆண்டுகள் ஒரு தலைமுறை இடைவெளி மட்டுமல்ல.

time to read

2 mins

JULY 2026

Andhimazhai

Andhimazhai

பிரேக் அப் பாடல்கள்

திலீபன் என்ற அண்ணன் ஒருவர் தனது சலூன் வாசலில் ஒரு கரும்பலகையை வைத்திருப்பார்.

time to read

5 mins

JULY 2026

Andhimazhai

Andhimazhai

தொல்காப்பியரின் பிரேக் அப் விதிகள்

எண்ணித் துணிந்த தலைவிக்குத் துயரமில்லை

time to read

2 mins

JULY 2026

Andhimazhai

Andhimazhai

தமிழ் சினிமாவில் பிரேக் அப்!

ப்ரேக் அப்' என்ற வார்த்தை இப்போதைய GEN Z வரை பரவிவிட்டது என்பதை அவர்களுடன் பேசும்போது தெரிந்துகொள்ள முடிகிறது.

time to read

10 mins

JULY 2026

Andhimazhai

Andhimazhai

சுபாஷ் மீரா கதிரவன்

மே மாதக் கடைசியில் சத்தமில்லாமல் வந்து, சத்தமாக தன் தடத்தைப் பதித்தது ப்ளாஸ்ட்.

time to read

1 mins

JULY 2026

Andhimazhai

Andhimazhai

பிரிதலும் காதலே

இன்றைய ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலும் இயல்பானதாக இருக்கிறது.

time to read

4 mins

JULY 2026

Andhimazhai

Andhimazhai

‘இல்லாது போகாதவள்’

மழை- இவளைக் காதலிக்கத் தொடங்கிய காலத்து மழை என்னைச்சுற்றி மீளவிடாமல் பெய்யும்...\" என்று என்னுடைய நீள் கவிதையான 'ரிஷ்யசிருங்கம்' ஆரம்பிக்கும்.

time to read

4 mins

JULY 2026

Andhimazhai

Andhimazhai

அடுத்து

“வா வெத்திலை எச்சில் தெறித்து விடாமல் வாயைக் குவித்த வாக்கில் லாவகமாய்ப் பேசி தணிகாசலம் பிள்ளையை வரவேற்றார் அன்னஞ்சி நாயக்கர்.

time to read

5 mins

JULY 2026

Andhimazhai

Andhimazhai

"இயற்கையும் மக்களும் என்னைக் காப்பார்கள்”

பிரியங்க் கார்கே என்பவர் கர்நாடகாவின் உள்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளர் மல்லிகார்ஜூன் கார்கேவின் மகன்.

time to read

2 mins

JULY 2026

Andhimazhai

Andhimazhai

ப்ரேக் அப் மீளும் வழிகள்!!

பிரபல சமூக ஊடகம் ஒன்றில் பிரேக் அப் அனுபவங்களைப் பகிருங்களேன் எனக் கேட்டிருந்தார்கள்.

time to read

2 mins

JULY 2026

Translate

Share

-
+

Change font size