Facebook Pixel ஆற்றல் தருவார் அஞ்சனையின் மைந்தன் | Aanmigam Palan - religious-spiritual - Magzter.comでこの記事を読む

試す - 無料

ஆற்றல் தருவார் அஞ்சனையின் மைந்தன்

Aanmigam Palan

|

Dec 16-31, 2022

ஆஞ்சநேயர் கோயில் இல்லாத ஒரு ஊர், ஒரு சிறு கிராமம்கூட இருக்காது.

- எஸ். கோகுலாச்சாரி

ஆற்றல் தருவார் அஞ்சனையின் மைந்தன்

1. முன்னுரை 

நம்முடைய சமய மரபில் பல தெய்வ உரு வங்கள், பல்வேறு திருநாமங்களோடு வழிபடப் படுகின்றன. சிவன், மகாவிஷ்ணு, பராசக்தி, முருகன், விநாயகர் என்று எத்தனை வடிவங் கள்? எத்தனை பெயர்கள்? சங்க காலத்திலேயே நிலங்களை ஐவகையாகப் பிரித்து ஒவ்வொரு நிலத்துக்கும் ஒரு பிரதானமான தெய்வத்தை சொல்லி வைத்தார்கள். எத்தனை தெய்வங்கள் இருந்தாலும், அதில், இரண்டு தெய்வங்களுக்கு ஊரெங்கும் கோயில்கள் உள்ளன. இன்னும் சொல்லப்போனால், ஒவ்வொரு தெருவிலும் கோயில்கள் என்று சொல்லலாம்.

1.விநாயகர் 2.ஆஞ்சநேயர்.

ஆஞ்சநேயர் கோயில் இல்லாத ஒரு ஊர், ஒரு சிறு கிராமம்கூட இருக்காது. தென்னகத் தில் மட்டும் இல்லாமல், இந்தியா முழுவதுமே ஆஞ்சநேயருக்கு ஏராளமான கோயில்கள் உண்டு. ஆஞ்சநேயரின் ஜெயந்தி உற்சவத்தை (23.12.2022 வெள்ளிக்கிழமை) முன்னிட்டு அவருடைய சிறப்புகளை முப்பது முத்துக்களாகக் காண்போம்.

2. அனுமன் வரலாறு

திரேதாயுகத்தில் சுமேரு என்ற மலைப்பிர தேசத்தில் வானரர்களுக்குத் தலைவன் ஒருவன் அரசாண்டு வந்தான். அவனுக்கு வெகு காலம் குழந்தை இல்லாமல் இருந்தது. சிவபெருமானின் பேரருளால் ஒரு மகள் பிறந்தாள். அவளுக்கு அஞ்சனாதேவி என்று பெயர் வைத்தான். தக்க பருவத்தில் கேசரி என்ற வானர வீரனுக்கு மணம் முடித்து வைத்தான். அஞ்சனா தேவிக்கும் வெகு காலம் குழந்தைச் செல்வம் இல்லை. அவள் திருமலைக்குச் சென்று ஆகாயகங்கையில் நீராடி ஐம்புலன்களையும் அடக்கி திருமாலை நோக்கி நீண்ட தவம் இருந்தாள்.

அந்த தவத்தின் விளைவாக வாயுபகவான் தனது அம்சத்துடன் சுவை மிகுந்த கனி ஒன்றை தினமும் அளித்து வந்தான். தெய்வாம்சம் பொருந்திய அந்த பிரசாத பலத்தினால் வாயுவின் அம்சத்தோடு அஞ்சனை மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். அஞ்சனையின் குமரன் என்ற பொருளோடு ஆஞ்சநேயர் என்று திருநாமம் இட்டனர். திரு மலையின் ஏழு மலைகளில் ஒன்று அஞ்சனாத்ரி. 

Aanmigam Palan からのその他のストーリー

Aanmigam Palan

Aanmigam Palan

-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!

நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.

time to read

3 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

புராணங்கள் சுட்டும் இலக்கு

பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா

அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.

time to read

5 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?

வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

திருப்பதி

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

அகோர மூர்த்தி

திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.

time to read

1 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி

தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பக்த மீராபாய்

உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.

time to read

6 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பெரியாழ்வாரும் நாச்சியாரும்

ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.

time to read

5 mins

March 16-31, 2026

Translate

Share

-
+

Change font size