அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படுத்தும் ஒன்றிய அரசின் அதிகார அத்துமீறலுக்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கண்டனம்
Viduthalai
|விடுதலை 05.05.2025
அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படுத்தும் ஒன்றிய அரசின் அதிகார அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜூன் 1இல் மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் 3.5.2025 அன்று நடந்தது. கூட்டத்திற்கு திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார்.
இதில், பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் அய். பெரியசாமி, கனிமொழி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், திருச்சி சிவா, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், சென்னை மாவட்ட செயலாளர்கள் மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, மயிலை த.வேலு, சிற்றரசு, ஆர்.டி.சேகர், மாதவரம் சுதர்சனம் உள்ளிட்ட அனைத்து மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்கள் அனைவருக்கும், முற்போக்கான சிந்தனைகளுடன் கடமையாற்றிய கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸின் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
* இந்திய துணைக்கண்டத்தில்-மக்கள் நலன் போற்றும் வகையில், மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் தீரத்துடன், சமூகநீதியைப் பாதுகாத்து, சட்டமன்ற மாண்பினை நிலைநாட்டி, ஜனநாயக கோட்பாடுகளை உயர்த்தி பிடிக்கும் அரசாகவும், ஒன்றிய பா.ஜ. அரசின் எதேச்சதிகார போக்கிலிருந்து அரசியல் சட்டம் தந்துள்ள கூட்டாட்சி கருத்தியலை பாதுகாக்கும் முதன்மையான மாநில அரசாகவும் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து அய்ந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திராவிட மாடல் அரசின் மக்களின் மகத்தான பேரன்பை பெற்ற முதலமைச்சராகவும்-இந்தியாவிற்கே ரோல் மாடலாக தமிழ்நாட்டின் தனிப் பெருந்தலைவராகவும் திகழும் திமுக தலைவர், முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி- ஒன்றிய பா.ஜ. அரசிடம் தொடர்ந்து குரல் எழுப்பி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்குத்தான் உள்ளது என்பதை நாட்டு மக்களுக்கும் ஒன்றிய அரசுக்கும் உணர்த்தி தற்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பை பெற்றிருக்கிறார்.
சட்டப் போராட்டம்
このストーリーは、Viduthalai の விடுதலை 05.05.2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Viduthalai からのその他のストーリー
Viduthalai
தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி; ஆகஸ்டு மாதம் முடித்திட உதவித் தொகை வாய்ப்பு
தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் உதவித்தொகைக்காக காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு பலன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்பணியை ஆகஸ்டு மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
நூறாண்டுகளுக்கு முன்பே ஜாதியை தூக்கியெறிந்தவர் தந்தைபெரியார்
மறைந்தவர்கள் மீண்டும் பிறக்க முடியாது என்பது உண்மை. ஆனால் ஒரு மகத்தான சிந்தனையாளரின் கருத்துகள், அவரது சீடர்கள் மூலமாகத் தொடர்ந்து வாழ்கின்றன. தத்துவஞானி சாக்ரடீஸின் சிந்தனைகள் பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோர் மூலம் உலகிற்கு கிடைத்ததுபோல், தந்தை பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகள் அறிஞர் அண்ணா, கலைஞர், முதல்வர் ஸ்டாலின் போன்றோர் மூலம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
1 mins
JUNE 06,2025
Viduthalai
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு
அதிகபட்சம் ரூ.6,460 வரை கிடைக்கும்
1 min
JUNE 06,2025
Viduthalai
முதலாளிகள்மீது கவனம் செலுத்தாமல் சாமானியருக்கான பொருளாதாரத்தை ஒன்றிய அரசு உருவாக்கவேண்டும்: ராகுல் காந்தி கருத்து
காங்கிரஸ் கட்சித் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி 'எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-
1 min
JUNE 06,2025
Viduthalai
தமிழ்நாட்டில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் செயல்படுத்த நடவடிக்கை
தமிழ்நாட்டில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்.) தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்று பணி ஓய்வு பெறுகிறார்
வயதான பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி வைத்த தானபத்திரத்தை வருவாய் கோட்டாட்சியரே விசாரணை நடத்தி ரத்து செய்யலாம் என தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
1 min
JUNE 06,2025
Viduthalai
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும்—எழுத்தும் பயிற்சி ஜூன் ஒன்பதாம் தேதி தொடங்குகிறது
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி, ஜூன் 9 முதல் 13-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
ரூ.1,538 கோடியில் ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம்
சென்னை, ஜூன் 6 இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இயக்குவதற்காக, ரூ.1,538.35 கோடியில் தலா 3 பெட்டிகளை கொண்ட 32 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கி யுள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
2027இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு — தென்மாநிலங்களுக்கு எதிரான சதி:
வரும் 2027 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்போவதாக ஒன்றிய அரசு அறிவித்து இருப்பது தென்மாநிலங்க ளுக்கு எதிரான சதி என்று மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
1 min
JUNE 06,2025
Viduthalai
காவல்துறையின் அதிரடி செயல்பாடு தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 136 சைபர் குற்றவாளிகள் கைது
இணையதளங்கள் வழியாக கவர்ச்சியான விளம்பரங்களை கொடுத்து, பொதுமக்களை ஏமாற்றி லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் சைபர் குற்றவாளிகள் நூதனமான முறையில் கொள்ளை அடித்து வருகிறார்கள்.
1 min
JUNE 06,2025
Translate
Change font size

