Facebook Pixel தனித்துப் போட்டி: என்னவாகும் சீமானின் வாக்குகள்? | Dinamani Villupuram - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

தனித்துப் போட்டி: என்னவாகும் சீமானின் வாக்குகள்?

Dinamani Villupuram

|

May 26, 2025

சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் தனித்துப் போட்டி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். விஜய் கட்சியின் வரவால் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி என்னவாகும் என்பது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், தனித்துப் போட்டி என்ற சீமானின் அறிவிப்பு பலரின் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது.

- பி.ஜெபலின் ஜான்

பி.ஜெபலின் ஜான்

சென்னை, மே 25: சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் தனித்துப் போட்டி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். விஜய் கட்சியின் வரவால் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி என்னவாகும் என்பது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், தனித்துப் போட்டி என்ற சீமானின் அறிவிப்பு பலரின் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது.

கோவை கொடிசியா மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற தமிழ் தேசிய இன எழுச்சி நாள் பொதுக்கூட்டத்தில், 2026 பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி என சீமான் அறிவித்தார். நாம் தமிழர் கட்சிக்கு இதுவரை கிடைத்த வாக்குகள் என்னவாகும் என்பதை இதுவரை அந்தக் கட்சி சந்தித்த தேர்தல்களின் முடிவுகளைப் பார்த்தால் முழுமையாக அறியலாம்.

2016 பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா, கருணாநிதி என இரு பெரும் மக்கள் ஈர்ப்பு மிக்க ஆளுமைகளை மையப்படுத்தி நடந்த தேர்தலில் சீமானால் 1.13 சதவீத வாக்கு வங்கியைத்தான் பெற முடிந்தது. திமுக, ஒரு சதவீத வாக்கு வங்கி வித்தியாசத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனது.

இரு பெரும் ஆளுமைகள் மறைந்த நிலையில், 2019 மக்களவைத் தேர்தலில் மோடி, ராகுல் காந்தி என்ற இரு பிரதமர் வேட்பாளர்கள், பண பலம், ஜாதி பலம், அதிகார பலம் கொண்ட மத்திய, மாநிலக் கட்சிகளின் கூட்டணி, ஆளும்கட்சிக் கூட்டணிகளுக்கு எதிலும் சளைக்காத எதிர்க்கட்சிகள் கூட்டணி, மிகப் பெரிய திரையுலக நட்சத்திரமான கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், ஜெயலலிதா, சசிகலாவிடம் அரசியல் பயின்ற டி.டி.வி.தினகரனின் அமமுக தனியாகக் களம் கண்டது போன்றவற்றால் பண பலம், அதிகார பலம் இல்லாத சீமானின் கட்சி நிச்சயம் காணாமல் போய்விடும் என்ற விமர்சனம் எழுந்தது.

அவற்றைப் புறந்தள்ளும் வகையில் தனித்துக் களம் கண்ட நா.த.க., 3.87 சதவீத வாக்குகள் பெற்று தனது வாக்கு வங்கியை மும்மடங்கு பெருக்கிக்கொண்டது, அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

Dinamani Villupuram からのその他のストーリー

Dinamani Villupuram

ஆயத்த நடவடிக்கையில் அரசு: அமைச்சர் அருண்ராஜ்

கிளான்டர்ஸ் தொற்று குறித்து அச்சம் தேவையில்லை என்றும், அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

பிளே ஆஃபில் முதல் அணி பெங்களூரு

பஞ்சாபுக்கு தொடர்ந்து 6-ஆவது தோல்வி

time to read

1 mins

May 18, 2026

Dinamani Villupuram

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 38-ஆக உயர்த்தும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

நீட் மறுதேர்வு: நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் என்டிஏ

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (எம்பிபிஎஸ்) சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட் - யுஜி) வினாத்தாள் கசிவு மற்றும் அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள மறுதேர்வு நடவடிக்கைகள், இந்திய மருத்துவக் கல்விச் சூழலை மீண்டும் ஒருமுறை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

3-ஆவது முறையாக ஸ்விடோலினா சாம்பியன்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா சாம்பியன் கோப்பை வென்றார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Villupuram

15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்பட 15 மாவட்டங்களுக்கு திங்கள் கிழமை (மே 18) பலத்தமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

May 18, 2026

Dinamani Villupuram

கிளான்டர்ஸ் தொற்று: அச்சம் தவிர்! விழிப்புணர்வு தவறேல்!!

சென்னையில் கிளான்டர்ஸ் தொற்றுக்குள்ளாகி குதிரை உயிரிழந்த நிலையில், அந்தப் பாதிப்பு மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Villupuram

புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு

ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Villupuram

எண்ம முறையில் விடைத்தாள்களை மதிப்பிடுவது புதிதல்ல

மத்திய கல்வி அமைச்சகம்

time to read

1 min

May 18, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

பிளே ஆஃபுக்கான பந்தயத்தில் நிலைக்கிறது டெல்லி

ஐபிஎல் போட்டியின் 62-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

May 18, 2026

Translate

Share

-
+

Change font size