試す 金 - 無料
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
Dinamani Tiruvannamalai
|September 01, 2025
திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர். பின்னர் 1944-இல் திராவிடர் கழகமாக உருமாறிய பின்னரும் பெரியார் ஈ.வெ.ரா. உடன் சேர்ந்து தொடர்ந்து சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
பெரியார் ஈ.வெ.ரா. உடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, 1949-இல் திமுகவை தொடங்கினார். 1957-இல் முதல் தேர்தலைச் சந்தித்த திமுக, 15 இடங்களில் வெற்றி பெற்றது. 1962-இல் 50 இடங்களில் வெற்றி பெற்றது. 1967 தேர்தலில் ஆட்சியைப் பிடித்தபோது, பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, சுதந்திரா கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, சமுக்த சோஷலிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்தே 168 இடங்களில் திமுக வெற்றி பெற்றது.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய சில மாதங்களிலேயே திண்டுகல் மக்களவைக்கான இடைத்தேர்தலில் முதல் வெற்றியைப் பெற்றார் என்றால் அதன் பின்னணியில் பெரும் வரலாறு இருக்கிறது. அவர் அதிமுகவை தொடங்குவதற்கு முன்பே அரசியலில் இருந்தார். 1953-இல் திமுகவில் இணைந்தார். 1967 பேரவைத் தேர்தலில், திமுக வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார். எம்எல்சி, எம்எல்ஏ, திமுக பொருளாளர் என படிப்படியாக கட்சியில் உயர்ந்தார். அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, 1972-இல் அதிமுகவை தொடங்கி முதல் தேர்தலிலேயே சாதனை படைத்தார்.
விஜய்க்கு இதுபோன்ற அரசியல் அனுபவம் இல்லை. திரைத்துறையில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வந்திருக்கிறார். அவரது அனுபவமின்மையை அரசியல் நடவடிக்கைகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. கட்சி தொடங்கிய இந்த ஒன்றரை ஆண்டுகளில் விக்கிரவாண்டி மாநாட்டையும், மதுரை மாநாட்டையும் தவிர அவர் வேறு எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. பொதுத் தேர்தலைச் சந்திப்பதற்கான அரசியல் நடவடிக்கைகளைக்கூட திமுக முன்னெடுக்கவில்லை.
このストーリーは、Dinamani Tiruvannamalai の September 01, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、9,500 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Tiruvannamalai からのその他のストーリー
Dinamani Tiruvannamalai
தற்சார்பே வளர்ந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும்
தற்சார்புதான் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 mins
September 01, 2025
Dinamani Tiruvannamalai
சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து
சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Tiruvannamalai
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர். பின்னர் 1944-இல் திராவிடர் கழகமாக உருமாறிய பின்னரும் பெரியார் ஈ.வெ.ரா. உடன் சேர்ந்து தொடர்ந்து சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
2 mins
September 01, 2025
Dinamani Tiruvannamalai
அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் மறுஅறிவிப்பு வரை முழுமையாக நிறுத்தம்
அமெரிக்க சுங்கத் துறை வெளியிட்டுள்ள புதிய விதிகளில் உள்ள தெளிவின்மை காரணமாக, அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து அஞ்சல் சேவைகளையும் இந்திய அஞ்சல் துறை மறுஅறிவிப்பு வெளியிடும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
1 min
September 01, 2025
Dinamani Tiruvannamalai
கத்தாரில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்
முதல்வர் உத்தரவு
1 min
September 01, 2025
Dinamani Tiruvannamalai
தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக (பொ) வெங்கடராமன் பொறுப்பேற்பு
தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.
1 min
September 01, 2025
Dinamani Tiruvannamalai
பின்னலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை
அமெரிக்க வரி விதிப்பால் கோவை, திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Tiruvannamalai
40 பக்க ரகசிய அறிக்கை டிஜிபியிடம் ஒப்படைப்பு
தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கையை தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமனிடம், ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
1 min
September 01, 2025
Dinamani Tiruvannamalai
ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்
அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி
1 min
September 01, 2025
Dinamani Tiruvannamalai
திரிணமூல் பெண் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு
ஊடுருவல்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது சத்தீஸ்கர் மாநில காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்தனர்.
1 min
September 01, 2025
Translate
Change font size