Facebook Pixel துணைவேந்தர் நியமன சட்டத் திருத்தத்துக்கு தடை | Dinamani Tiruvannamalai - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

துணைவேந்தர் நியமன சட்டத் திருத்தத்துக்கு தடை

Dinamani Tiruvannamalai

|

May 22, 2025

உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மே 21: தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து மாநில அரசுக்கு மாற்றி இயற்றப்பட்ட சட்டப் பிரிவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத் திருத்த மசோதாவுக்கு உச்சநீதி மன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டங்களை அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு.

இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதி மன்றம், பிரதான மனுவுக்கு பதில் அளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, இடைக்காலத் தடை கோரிய மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்திருந்தது.

இதன்படி, இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், தமிழக அரசின் திருத்தச் சட்டங்கள் அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, மொத்தமுள்ள 10 பல்கலைக்கழகங்களில் இரண்டு பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே துணைவேந்தர் தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூன் 10-க்குள் விண்ணப்பிக்க மாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தடை கோரிய வழக்கில் பதிலளிக்க அரசுத் தரப்புக்கு அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார்.

Dinamani Tiruvannamalai からのその他のストーリー

Dinamani Tiruvannamalai

ஏப்ரலில் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரி

தற்போதைய 2025-26 நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில், இந்தியாவின் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரியாகப் பதிவாகியுள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: அரைஇறுதிக்கு இந்தியா தகுதி

சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஏச்) நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டியில், இந்தியா 2-1 கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே திணறல்

'அண்டர் டாக்ஸ்' அணிகள் அசத்தல்

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

வரலாற்றுப் பொக்கிஷங்கள் !

பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த மே 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time to read

3 mins

June 17, 2026

Dinamani Tiruvannamalai

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்

அதிமுகவிலிருந்தும் விலகல்

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

நியூஸிலாந்தை வென்றது இலங்கை

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத் தில் இலங்கை 5 விக்கெட்டுகள் வித் தியாசத்தில் நியூஸிலாந்து செவ் வாய்க்கிழமை வென்றது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvannamalai

மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டம்: 23 மாநிலங்களில் நிறைவு

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல்கட்டப் பணியான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, இதுவரை 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

டிஎன்பிஎல்: 8 அணிகளில் 103 வீரர்கள் தக்கவைப்பு

தமிழ்நாடு பிரீ மியர் லீக் (டிஎன்பிஎஸ்) கிரிக்கெட் தொடரின் 10-ஆவது சீசனை யொட்டி, 8 அணிகள் தக்க வைத் துள்ள 103 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvannamalai

தமிழகத்தில் ஜூன் 21 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஜூன் 21-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 mins

June 16, 2026

Dinamani Tiruvannamalai

கடந்த 4 நாள்களில் தங்கம் பவுன் ரூ.4,560 உயர்வு

ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560-க்கு விற்பனையானது. இதன்மூலம் கடந்த 4 நாள்களில் பவுனுக்கு ரூ.4,560 உயர்ந்துள்ளது.

time to read

1 min

June 16, 2026

Translate

Share

-
+

Change font size