試す 金 - 無料
தமிழர் வாழ்வியலின் எதிர்காலம்
Dinamani Tiruvallur
|June 10, 2026
மனித வரலாற்றின் ஒவ்வொரு காலமும் ஒரு புதிய வாழ்வியலை உருவாக்கியுள்ளது. கற்காலம் மனிதனின் உடல் உழைப்பை மையமாகக் கொண்டிருந்தது.
வேளாண் யுகம் நிலம் மற்றும் பருவ நிலையை மையமாகக் கொண்டிருந்தது. தொழில் புரட்சி இயந்திரங்களின் வேகத்தை மனித வாழ்க்கைக்குள் கொண்டு வந்தது. ஆனால், 21-ஆம் நூற்றாண்டு உருவாக்கிய எண்ம (டிஜிட்டல்) புரட்சி மனிதனின் வாழ்க்கை முறையை மட்டுமல்ல, அவனுடைய நினைவகத்தையும், அடையாளத்தையும், உறவுகளையும், கலாசார அனுபவத்தையும் மாற்றி வருகிறது. இந்த மாற்றத்தின் மையத்தில் நிற்கும் ஒரு பழைமையான மொழிச் சமூகமே தமிழர் சமூகம்.
தமிழர் வாழ்வியல் என்பது வெறும் பழக்கவழக்கங்களின் தொகுப்பு அல்ல. அது இயற்கை, நிலம், உறவுகள், மொழி, கலை, ஆன்மிகம், உழைப்பு, நினைவகம் ஆகியவற்றின் கூட்டு அமைப்பு. தமிழர் சமூகத்தின் பாரம்பரியம் நூல்களில் மட்டும் இருந்ததில்லை; அது அன்றாட வாழ்வின் இயக்கமாக இருந்தது. வீட்டின் வாசலில் வரையப்பட்ட கோலம் முதல் கோயில் திருவிழா வரை, அம்மாவின் சமையலறை முதல் பாட்டியின் கதைகள் வரை அனைத்தும் ஒரு சமூக நினைவகத்தின் பகுதிகளாக இருந்தன.
ஆனால், தொழில்நுட்ப உலகம் இந்த வாழ்வியலின் அடிப்படை அமைப்புகளையே மாற்றத் தொடங்கியது. முன்பு மனிதர்கள் நேரடியாகச் சந்தித்து உரையாடினர்; இன்று திரைகளின் வழியாகப் பேசுகிறார்கள். முன்பு நினைவுகள் மனதில் சேமிக்கப்பட்டன; இன்று அவை 'கிளவுட்' சேமிப்பகங்களில் இருக்கின்றன. இந்த மாற்றம் வெறும் தொழில்நுட்ப மாற்றம் மல்ல; அது மனித அனுபவத்தின் இயல்பை மாற்றுகிறது.
தமிழர் சமூகத்தில் திருவிழா என்பது தனிநபரின் நிகழ்வு அல்ல; அது ஒரு சமூகத்தின் உயிரோட்டம். ஆனால், எண்ம (டிஜிட்டல்) உலகம் இந்தக் கூட்டு அனுபவங்களை மெல்ல தனி நபர் அனுபவங்களாக மாற்றுகிறது. ஒரே வீட்டில் வாழும் மனிதர்கள்கூட தனித்தனி திரைகளின் உலகில் வாழ்கிறார்கள்.
மொழியும் இந்த மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்கிறது. தமிழ் மொழி இன்று சமூக ஊடகங்களின் உலகில் புதிய வடிவங்களை அடைகிறது. தமிழ்-ஆங்கில கலப்பு மொழி பெருகுகிறது. குறுகிய சொற்கள், 'மீம்' கலாசாரம், எண்ம நகைச்சுவைகள் மொழியின் பயன்பாட்டை மாற்றுகின்றன. இதனால், மொழியின் தூய்மை அழிகிறது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இன்னொரு பக்கம் பார்க்கும்போது இது மொழியின் உயிர்வாழும் திறனாகவும் இருக்கலாம்.
このストーリーは、Dinamani Tiruvallur の June 10, 2026 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Tiruvallur からのその他のストーリー
Dinamani Tiruvallur
பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா
பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
1 min
June 12, 2026
Dinamani Tiruvallur
உளுந்தூர்பேட்டை அருகே பைக் மீது கார் மோதல்: 2 மாணவர்கள் உயிரிழப்பு
உளுந்தூர்பேட்டை அருகே பைக் மீது கார் மோதியதில் பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.
1 min
June 12, 2026
Dinamani Tiruvallur
காணிக்கையாக சிலைகள்!
அய்யனார் வழிபாடு பழங்காலம் முதல் தமிழர்களிடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் அய்யனாரை கிராம தெய்வமாக, காவல் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர்.
1 mins
June 12, 2026
Dinamani Tiruvallur
இணையவழி வர்த்தக தளங்களிடையே நம்பகத்தன்மையில் அமேசான் முதலிடம்!
இணையவழி வர்த்தக தளங்களை நம்பகத்தன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்தியதில், 50 சதவீத நுகர்வோரின் ஆதரவுடன் அமேசான் மிகவும் நம்பகமான தளமாக முதலிடம் பிடித்துள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Tiruvallur
தொடர வேண்டும் மாற்றம்
உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படைதிரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.
2 mins
June 12, 2026
Dinamani Tiruvallur
பிரதமருக்கு தமிழ் வணக்கம்
உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
3 mins
June 12, 2026
Dinamani Tiruvallur
உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்
ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.
1 min
June 12, 2026
Dinamani Tiruvallur
சந்திர தோஷம் விலக...
சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.
2 mins
June 12, 2026
Dinamani Tiruvallur
பாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சி: உதயநிதி குற்றச்சாட்டு
ஸ்ரீவைகுண்டம் பெண் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெகவினரைக் காப்பாற்ற அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
June 12, 2026
Dinamani Tiruvallur
'ஜனநாயகன்' இணையத்தில் கசிந்த வழக்கு: முக்கிய நபர் கைது
நடிகர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் கசிந்த வழக்கில் தேடப்பட்ட முக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.
1 min
June 12, 2026
Listen
Translate
Change font size

