Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

அரசமைப்புச் சாசனம் எனும் அரண்!

Dinamani Tiruvallur

|

November 29, 2025

அரசமைப்புச் சாசன தினம் (நவம்பர் 26); இது நாள்காட்டியில் பதிந்த வெறும் தேதியல்ல; டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எனும் அறிவுச் சுடரின் தலைமையில், 'இந்திய மக்கள் அனைவரும்' எனும் ஏகோபித்த உணர்வுடன், 1949 நவம்பர் 26-இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட புனித அக்னி சாசனம். 1950, ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்த இந்த தர்மச் சக்கரம், கடந்த 75 ஆண்டுகளாக நம் நாட்டை நெறி பிறழாமல் தாங்கும் தூணாக ஓங்கி நிற்கிறது. அம்பேத்கரின் உழைப்பைப் போற்றும் வகையில், 2015 முதல் இந்நாள் (நவ.26) தேசிய சட்ட தினமாகப் பொலிவுறுகிறது.

- வழக்குரைஞர் ஆர். சங்கீதா

அம்பேத்கர் உரைத்ததுபோல், 'சட்டம் என்பது வழக்குரைஞரின் ஏடல்ல; அது ஒரு தேசத்தின் உயிர்ப்பை ஊட்டும் மூல ஆதாரம்'. உலகில் பல நாடுகள் சர்வாதிகாரச் சேற்றில் சறுக்கியபோது, இந்தியா மட்டும் மக்களாட்சியின் இலக்கணம் குலையாமல் உறுதியுடன் நிற்கக் காரணம், நம் சாசனம் அமைத்த அசைக்க முடியாத அடிக்கட்டுமானமே.

'அரசமைப்புச் சாசன தினம்' கொண்டாடும் இந்த வரலாற்றுத் தருணத்தில், நம் சட்டம் நிகழ்த்திய அபூர்வ அற்புதங்களையும், அது இன்னும் முழுமையாக எட்ட முடியாமல் தவிக்கும் சவால்களையும் நாம் சீர் தூக்கிப் பார்ப்பது காலத்தின் கட்டாயம்.

ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற எவ்விதப் பேதமும் இன்றி, அனைவருக்கும் ஒரே மாதிரியான வயதுவந்தோர் வாக்குரிமையை நம் அரசமைப்புச் சட்டம் (உறுப்பு-326) வழங்கியது ஒரு மாபெரும் புரட்சிகரமான நிகழ்வு. இது நாட்டின் கடைக்கோடி மனிதனையும் ஆட்சிப் பங்கேற்புக்குள் ஆரத்தழுவி அழைத்து வந்தது. இதனால்தான் தேர்தல் நேரத்திலாவது ஒவ்வொரு வாக்காளரும் மகத்தான சக்தியாளராகத் திகழ முடிகிறது.

Dinamani Tiruvallur からのその他のストーリー

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்

பிரதமர் மோடி அறிவுறுத்தல்

time to read

1 min

December 01, 2025

Dinamani Tiruvallur

நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது

உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

time to read

1 mins

December 01, 2025

Dinamani Tiruvallur

கலைஞர் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவரை சந்திப்போம்

கும்பகோணத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்துவோம் என மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Tiruvallur

பல்கலைக்கழகங்களை திவாலாக்கும் தமிழக அரசு

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை தமிழக அரசு திவாலாக்குகிறது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!

தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.

time to read

2 mins

December 01, 2025

Dinamani Tiruvallur

ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி

இங்கிலாந்து கோல் மழை

time to read

1 mins

December 01, 2025

Dinamani Tiruvallur

சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை

சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Tiruvallur

மேட்டூர் அணை நீர்மட்டம் 115 அடியாக உயர்வு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஞாயிற்றுக் கிழமை காலை விநாடிக்கு 4,920 கன அடியாகக் குறைந்தது. எனினும், நீர்மட்டம் 115 அடியாக உயர்ந்தது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Tiruvallur

மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.

time to read

1 min

December 01, 2025

Listen

Translate

Share

-
+

Change font size