試す 金 - 無料
டிரம்ப்பின் எச்சரிக்கை-பயமா, பலவீனமா?
Dinamani Tiruvallur
|July 22, 2025
ஆசிய நாடுகளில் பலவும் இந்த வரி விதிப்பு அலைக்கழிப்புகளால் அவதிப்படுகின்றன என்றாலும், இந்தியாவின் நிலைப்பாடு என்ன? பாதிப்பு யாது? என்ற வினாக்கள் எழுகின்றன. இந்தியா மௌனம் சாதிக்கிறது. டிரம்ப் தனது நிலைப்பாட்டில் தடுமாறுகிறார் என்றே பார்க்க வேண்டியிருக்கிறது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே உலக நாடுகளுடனான வர்த்தகம், கூடுதல் வரி விதிப்பு பற்றி பேசி வருகிறார். அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் அமெரிக்கப் பொருள்களுக்கு அதிகம் இறக்குமதி வரி விதிப்பதால் அமெரிக்கப் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து கூறி வரும் அதிபர், அதை சமநிலைப்படுத்த பரஸ்பரம் வரி விதிப்பது என்று தீர்மானித்தார்.
அமெரிக்க அதிபரின் இந்தப் போக்கு உலக நாடுகளிடையே ஆரம்பத்தில் அச்சத்தை ஏற்படுத்தியது என்றாலும், அமெரிக்காவிலேயே அவரின் கருத்துக்கு எதிர் குரல்கள் எழுந்தன. இந்தியா போன்ற நாடுகளோடு முரண்படுவதால் அமெரிக்கா மருந்துப் பொருள்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளில் சிக்கல்களை சந்திக்கும் என்ற காரணம் டிரம்பை சிந்திக்க வைத்தது.
எந்தெந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பை கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி வெளியிட்டார். பின்னர், இந்த பரஸ்பர வரி விதிப்பை 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாகவும் அறிவித்தார். கடந்த ஜூலை 9-ஆம் தேதியுடன் 90 நாள்கள் முடிவடைந்த நிலையில், காலக்கெடு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே இருமுறை நாள்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த முறை வரி விகித உயர்வு ஆகஸ்ட் மாதம் முதல் நாளில் அமலுக்கு வருவது 100 சதவீதம் உறுதியாகிவிட்டதா என்ற வினா எழுப்பப்பட்டதும் உறுதிதான்; ஆனாலும், இன்னும் 100 சதவீதம் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்று ஊசலாட்டமான பதிலையே அமெரிக்க அதிபர் தந்துள்ளார்.
டிரம்ப்பின் இந்தப் பதில் மற்ற நாடுகளை ஆசுவாசப்பட வைத்துள்ளது.
தனது முடிவை நிறுத்திவைப்பதாகவோ, தான் பின்வாங்குவதாகவோ இருத்தல் கூடாது என்று கருதியவர் 14 நாடுகளின் தலைவர்களுக்கு வரி விதிப்பு உயர்த்தப்படுவதற்கான கடிதங்களை அனுப்பி விட்டு, அதை தனது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். மேலும், அமெரிக்காவுடன் இந்த நாடுகளுக்கு இருக்கும் உறவைப் பொருத்து வரி விகிதங்கள் குறைக்கப்படவோ அல்லது உயர்த்தப்படவோ வாய்ப்புள்ளது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதை இந்த அறிவிப்பு உணர்த்துகிறது.
このストーリーは、Dinamani Tiruvallur の July 22, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Tiruvallur からのその他のストーリー
Dinamani Tiruvallur
தமிழகத்தில் ஜூன் 21 வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஜூன் 21-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 mins
June 16, 2026
Dinamani Tiruvallur
அகல் சுடரும் அறப்பயணமும்...
வ றுமையும் சமூகப் புறக்கணிப்பும் சூழ்ந்த எளிய பின்னணியில் பிறந் தபோதும், நிலமற்ற ஏழைகளின் வாழ் வில் நம்பிக்கை ஒளியேற்றிய கிருஷ்ணம் மாள் ஜெகந்நாதன், காந்திய வழியிலேயே வாழ்ந்து வருபவர்.
3 mins
June 16, 2026
Dinamani Tiruvallur
உண்மைத் தொண்டர்களை எதிரியாகப் பார்க்கிறது அதிமுக தலைமை
அதிமுகவில் உழைக்கும் உண்மைத் தொண்டர்களை கட்சித் தலைமை எதிரிகளாகப் பார்ப்பதாக அந்தக் கட்சியின் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.
1 min
June 16, 2026
Dinamani Tiruvallur
விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக தோல்விக்கு சி.வி.சண்முகமே காரணம்
அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு
1 min
June 16, 2026
Dinamani Tiruvallur
ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் இறுதி
ஜூன் 19-இல் கையொப்பம்: டிரம்ப் அறிவிப்பு
2 mins
June 16, 2026
Dinamani Tiruvallur
கடந்த 4 நாள்களில் தங்கம் பவுன் ரூ.4,560 உயர்வு
ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560-க்கு விற்பனையானது. இதன்மூலம் கடந்த 4 நாள்களில் பவுனுக்கு ரூ.4,560 உயர்ந்துள்ளது.
1 min
June 16, 2026
Dinamani Tiruvallur
எம்எல்ஏக்கள் ராஜினாமா ஏற்புக்கு எதிராக அதிமுக வழக்கு
4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்கவும் கோரிக்கை
1 mins
June 16, 2026
Dinamani Tiruvallur
பெரம்பலூர் அருகே லாரி மீது கார் மோதல்: பொறியாளர்கள் உள்பட மூவர் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே திங்கள்கிழமை லாரி மீது கார் மோதியதில் பொறியாளர்கள் 2 பேர் உள்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
1 min
June 16, 2026
Dinamani Tiruvallur
பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்ட 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு
பொதுமக்கள் சாலை மறியல்; வட மாநில இளைஞர் கைது
1 mins
June 16, 2026
Dinamani Tiruvallur
ரஷிய எண்ணெய்க் கப்பலை சிறைபிடித்த பிரிட்டன்
உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட ரஷியாவுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில், ரஷிய எண்ணெய்க் கப்பலை பிரிட்டன் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்தது. இதன்மூலம், இத்தகைய நடவடிக்கையில் முதல் முறையாக ஈடுபட்டதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
1 min
June 15, 2026
Translate
Change font size

