Facebook Pixel நமது எதிர்காலம் நோக்கி... | Dinamani Tiruvallur - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

நமது எதிர்காலம் நோக்கி...

Dinamani Tiruvallur

|

June 04, 2025

இன்றைய அரசியல் சமுதாயப் பிரச்னைகளுக்கு தீர்வுகாணத் துடிப்பவர்கள் இளைஞர்களிடம் நம்பிக்கை ஒளியைப் பெற முடியும். காரணம், இன்று வளர்ந்துள்ள அறிவியலையும், தொழில்நுட்பத்தையும், பொருளாதாரத்தையும் எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் பயன்படுத்த இவர்கள் திட்டமிடுகிறார்கள்.

- க.பழனித்துரை

சமுதாயத்திலும் அரசியலிலும் உள்ள அவலங்களையும் அலங்கோலங்களையும் பார்த்துப் பார்த்து ஒருவித சலிப்பில் நம்பிக்கை இழந்தவர்களாக பெரும்பான்மை மக்கள் பேசுவதைத்தான் கேட்டு வருகிறோம். அதே நேரத்தில் மறுபக்கத்தில் நமக்கு நம்பிக்கை தரக்கூடிய வகையில் களத்தில் நின்று புறக்கணிக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண, எண்ணிலடங்கா இளைஞர்கள் செயல்படுவதை நம்மால் காணமுடிகிறது. நம்பிக்கை தரக்கூடிய நற்செயல்பாடுகள் நடக்கக்கூடிய இடங்கள் அனைத்தும் புறக்கணிப்புக் குள்ளான இடங்கள். எனவே, நாம் அங்கு சென்று பார்த்தால்தான் அந்த இளைஞர்களின் செயல்பாடுகளில் உள்ள பொறுப்பையும், தியாகத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் எப்படி நாட்டு விடுதலைக்கு தியாகம் செய்து போராடினார்களோ அதேபோல் இவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் யாருடைய பார்வையும் படாமல், அங்கீகாரத்துக்கு காத்திருக்காமல் அரசால் நிராகரிக்கப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், அரசாங்கத்தால் தொடமுடியாத மக்களைத் தொட்டு அவர்களுடைய பிரச்னை என்னுடையது என்று பொறுப்பேற்று செயல்படும் இளைஞர்களை பார்க்கும்போது, நமக்கு நம்பிக்கை பிறக்கிறது. அவர்களுடன் உரையாடும்போதுதான் அவர்கள் இன்று செயல்படுவது 'புதிய கனவில்', 'புதிய நம்பிக்கையில்' என்பது தெரிகிறது.

இவர்கள் அனைவரும் எதிர்காலத்துக்கான ஒரு மாபெரும் கனவில் செயல்படுவதை நம்மால் காணமுடியும். பொதுவாக, எந்த மனிதர்கள் தேங்குவார்கள் என்றால் மனித சுழற்சியின் வேகம் அறியாமல், மாற்றத்தின் வேகம் அறியாமல் மாற்றத்துடன் பயணிக்க மறுத்து தொடங்கிய இடத்தில் நின்று, வாழும் சூழலில் நிகழ்கின்ற எதிர்மறைச் செயல்களைப் பார்த்துப் பார்த்து நம்பிக்கை இழப்பவர்கள்தான். சாதனைமனிதர்கள் தேங்க மாட்டார்கள், திணற மாட்டார்கள், சமூக சுழற்சியின் திசையும் வேகமும் அறிந்து, தன் இலக்கை குறிக்கோளை காலநிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு தனக்கென உயர் சிந்தனைச் சூழலை உருவாக்கி செயலில் கரைவோர் அஞ்சாமல் கூச்சமற்று சவால்களைச் சமாளித்து அடுத்த காலத்துக்குச் சென்றுவிடுவர்.

Dinamani Tiruvallur からのその他のストーリー

Dinamani Tiruvallur

கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது

தேர்வு கண்காணிப்பு பணிக்குச் சென்ற இடத்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Tiruvallur

'ஏ' அணிகள் தொடர்: இந்தியா சாம்பியன்

இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Tiruvallur

கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே ஆட்சியைப் பிடித்தவர் முதல்வர் ஜோசப் விஜய் !

கட்சியைத் தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே ஆட்சியைப் பிடித்த பெருமைக்குரியவர் முதல்வர் சி. ஜோசப் விஜய் என தமிழக வனத் துறை அமைச்சர் ஆர்.வீ. ரஞ்சித் குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.

time to read

1 mins

June 22, 2026

Dinamani Tiruvallur

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்

எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Tiruvallur

டிசம்பரில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுப்பம்: பியூஷ் கோயல்

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு டிசம்பரில் கையொப்பமாகும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Tiruvallur

மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்

சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.

time to read

2 mins

June 22, 2026

Dinamani Tiruvallur

இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 66 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா!

'யோகா' என்பது சம்ஸ்கிருத மொழியில் 'யுஜ்' என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். 'யுஜ்' என்றால் 'ஒன்று சேர்தல்' அல்லது 'இணைதல்' என்பதாகும்.

time to read

1 mins

June 21, 2026

Dinamani Tiruvallur

மறந்துபோன அடையாளங்கள் மீள் உருவாக்கம்

நமது கலாசார, பண்பாட்டில் மட்டுமல்லாது, பயன்பாட்டுப் பொருள்களின் உருவ, உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் அதிவேகத்தில் நிகழ்ந்து வருகின்றன.

time to read

2 mins

June 21, 2026

Dinamani Tiruvallur

அழகான குதிரைகள் 5

வாகனப்போக்குவரத்து அதிகம் இல்லாத காலங்களில் குதிரைவண்டிகளின் பயன்பாடு அதிகமிருந்தது.

time to read

1 mins

June 21, 2026

Translate

Share

-
+

Change font size